மெய்ஞானமும் விஞ்ஞானமுமாகிய ஓர் சக்தி

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 23)

ஒலிக்கோப்பு: தொழில்நுட்ப வழிகாட்டி

இந்திய மெஞ்ஞான தரிசனங்களில் விஞ்ஞானம்-மெஞ்ஞானம் என்ற பாகுபாடு இல்லை. கேள்விகள் விரும்பியே ஏற்கப்படுகின்றன இந்திய மெஞ்ஞானத் தேடலில். இறைமை உளது-இலது என்பது கூட ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நாத்திகம் இந்திய மெஞ்ஞானத்தின் ஒரு முக்கிய கூறு. நாத்திகனாக இருப்பதால் ஒருவன் இந்து இல்லை என்று ஆகிவிட முடியாது. இந்திய ஆன்மீகம் என்பது காலத்தால் புடம் போடப்பட்டு, அதிகாரச் சுருள் புள்ளி தாண்டி உலாவும் ஒரு பரப்பு. அதன் தரிசனங்கள் இயற்கையானவை, இயல்பானவை, பாசாங்குத்தனம் அற்றவை.

இந்தப் பின்புலத்தில்தான் இப்பத்தியின் சிந்தனை ஓட்டம் அமைகிறது. நான் யார் என்ற கேள்வி இம்மண்ணில் எழுந்த போது அது வெறும் மனிதனுடன் நின்றுவிடவில்லை.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்!

என்று உயிரியல் மூலத்தையே தேடத் தொடங்கிவிட்டது. எனவே இன்றைய அறிவியலால் புகழப்படும் கூர்தலியல் கோட்பாடு என்பதும் இதனுள் அடக்கம். டார்வின் அவர்களின் பரிணாமக் கொள்கை இந்தியக் கரைகளைத் தொட்டபோது சிறு அலை கூட உருவாக்கவில்லை, ஏனெனில் இங்கு தசாவதாரம் எனும் தரிசனத்தில் கூர்தலியல் சூட்சுமமாய் ஒளிந்திருந்தது. டார்வினின் பரிணாமக் கோட்பாட்டின்படி பார்க்கும் போது மனிதன் ஒரு கிளையின் முனையில் நின்றுகொண்டு மேற்பிரிதல் இல்லாமல் தொக்கி நிற்கிறான். இயற்கையின் பரிணாம விதி மனித இனங்களுக்குள் பாகுபாடு உருவாக்கிப் பிரிக்க எத்தனிக்கும் ஒவ்வொரு முயற்சியையும் அவன் எதிர்கொண்டு பிரிபடாமல் இருக்கிறான். அது மானுடத்தின் ஆன்மீக பலம்.

பிரிக்கும் விதியை 'மலம்' என்கிறது நமது மறை. இப்படிப் பிரிவு படமுடியாத இனங்கள் காலப்போக்கில் அழிந்துபட வாய்ப்புண்டு. இயற்கை அழிவு உண்டாகுமுன்பே, மானுடம் தன் மலங்களால் (அழுக்காறு, அவா, அகங்காரம் இன்ன பிற) அழிந்துபடும் என்கிறார் கார்ல்சாகன். ஆயின் சாகா வரமொன்று உண்டு என்று சொல்கிறது, திகைத்து நிற்கும் மானுடத்திற்கு, நம் மறைகள். அதுதான் ஆன்மீகப் பரிணாமம். உயிர் சார்ந்த உயிரியல் மலங்கள் அழிந்துபடும் போது பிறப்பெடுத்த சீவன் வேறொரு பரிமாணத்தில் வளர்ச்சியுற வாய்ப்புண்டு என்று சொல்கிறது நமது மறை. இது வெறும் ஆறுதல் வார்த்தையா இல்லை இதில் உண்மையுண்டா? என்று இப்பத்தி அலசுகிறது.

சின்னசிறு பாக்டீரியாவில் ஆரம்பித்து சிந்தனை உயிரியாக இன்று மலர்ந்திருக்கும் மனிதனின் அடுத்த கட்ட பரிணாமம் ஆன்மீகப் பரிணாமமே என்று யோகி அரவிந்தரும் சொல்கிறார். வைகுந்தம் / பரமபதம் என்பது சிந்தனை நீட்சியா இல்லை கற்றையியல் தொடர்ச்சியா? 10இன் பத்து எனும் ஓர் கணக்கு குறுக்கிக்கொண்டே போனால் அளவிட முடியாத ஒர் அலகில் (?) நிற்கிறது. விரிந்துகொண்டே போகும் போதும் விரிந்து விரிந்து வெற்றிடத்தில் போய் நிற்கிறது பயணம். இக்கணக்கின் படி பார்க்கும் போது திருமூலரின் இக்கணக்கு பொய்க்குமோ?

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிர மானால்
ஆவியின் கூறுநூ றாயிரத் தொன்றே!

சீவன் என்பது நானோ டெக்னாலஜி. Sub atomic physics. அளவிடும் கருவிகள் வந்து சேரும் போது அதுவும் புலப்படும். அடுத்த நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியற் கேள்வி: நான் எனும் உணர்வு எப்படித் தோன்றுகிறது? ஏன் தோன்றுகிறது என்பதே! இதைப் புரிந்துகொள்ளும் போது மனிதருக்குள் உள்ள உறவுகள் புரிபடும், மனிதனுக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள உறவு புரிபடும். இது புரிந்து மனிதன் உலகைக் காப்பதற்குள் உலகு பெரும்பகுதி அழிவுற்று இருக்கும் என்கிறார் ஜோசப் கேம்பல்.

எனவே இன்றைய மனிதனின் தேடல் அறிவியல்பூர்வமான ஓர் ஆன்மீகமே. இந்திய மெஞ்ஞானத்தில் ஆழங்காட்படும் போது இதற்கான விடைகள் இருப்பது தெரிகின்றது. அதைத் தெளிவுபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டியது இன்றைய அறிவியல் மனிதனின் கடமை. 40 நிமிடங்கள் வரை செல்லும் இச்சிந்தனைகளை இரு பகுதிகளாகக் கேட்கலாம்.

முதல் பகுதி

நேர அளவு: 19.11 நிமிடங்கள்

இரண்டாம் பகுதி

நேர அளவு: 17.34 நிமிடங்கள்

முதற்பதிவு: சிஃபி.காம்

7 பின்னூட்டங்கள்:

Anonymous 5/02/2007 11:08:00 AM

Hi
I listened to your entire speech.
I was hoping that you would branch off in a different direction, rather than accepting the conventional view. We have no memory of our past, We can be sure that we will have no memory of this life in our next life. Why should we care about aferlife? Bhakthi movement gives important to the word 'I'. If Universe can be seen at the fundamental level isn't the space between particles is God? Isn't what runs through you is the same thing that run through me and everything in this world. We never have a choice, truly to do anything in this world.
Isn't one view point is that we all have to play along with Creation since everything is considered God's play? This is the same view point that says that we can move forward or backward in time. It boils down to this. Who do we complain about this, when we are God ourselves!

நா.கண்ணன் 5/02/2007 11:58:00 AM

Hello

Hindu system of spiritual enquiry is very deep and occurs at different level. Metaphysical enquiry is well known. Physical enquiry is incorporated as well. Thus biological evolution as conceived by Darwin has been perceived by Indians in a similar vein as well. Birth, rebirth, karma could be perceived from this perspective. Karma is equal to the 'natural selection' principle explained in evolutionary biology. Tirumular for example, talks both at physical and metaphysical levels. Alwars perceived Tirumal as 'Bhuvana Sundaran' as well as the 'hidden principle within (andharyami)'. This continuum is very qnique and needs contemplation.

Anonymous 5/04/2007 09:51:00 AM

நீங்கள் தசாவதாரத்தையும் டார்வினையும் பற்றி எழுதியது புரிகிறது. Hindu writings explain
not only the mechanics and sequence in creation but also the
unreal nature of creation.
இதை ஏன் அடியார்கள்
(bakthi movement)கணக்கில்எடுத்துக்கொள்ளவில்லை என்று புரியவில்லை. எனக்குத் தோன்றிய பதில்
நான் என்ற சிந்தனை, மரபணுக்களோடு சேர்ந்து வருவது. இந்த அடிப்படையில்லாமல் உலகில் இயங்க முடியாது. மதம், வழிபாட்டு முறைகள் எல்லாம், மனிதனை மனத்தை அமைதிப்படுத்த உருவாக்கப்பட்டது. இது ஒரு மயக்கத்தை, போதையை மனிதனுக்குத் தருகிறது. போதை அதிகமாகும் போது தன்னிலிருந்து மற்றவர்களை வேறுபடித்துப் பார்க்கும் போக்கு அதிகமாகிறது. இது இயற்கை.
படைப்பின் அடிப்படை, உலகம் முழுவதும் ஒரே மாதிரியான சிந்தனையுள்ளவர்கள் என்றுமே இருக்கப் போவதில்லை. கண்ணன் சொல்வதும், அதர்மங்கள் அதிகமாகும் போதுதான் நான் வருவேன் என்றுதானே! பிறப்பு இறப்பு என்று மாறி மாறி வருவது, படைப்பின் விளையாட்டு, மாயத்தோற்றம். நான் என்ற நிலையெடுப்பதால்தான், மோட்சம் எல்லாம் வேண்டுமென்று தோன்றுகிறது.
கடவுளையும் மற்றவர்களையும் , நம்மிடமிருந்து பிரித்துப் பார்க்கச் சொல்கிறது. இந்த நானை அழிக்கும் போது நாமே கடவுள் என்று ஆகிவிடுகிறது.
வேறுபாடுகள் குறித்துப் பேசியிருந்தீர்கள். அதனால் என் சிந்தனையோட்டம் இப்படிப் போனது.

நா.கண்ணன் 5/04/2007 10:12:00 AM

மிக்க நன்றி.

தினம் துயில்தல், விழித்தல் இவை பஞ்சீகரணம், பிரளயம், தோற்றம் என்றும் கொள்வதுண்டு. கீதையில் கண்ணன், தனி மனிதனை உடலின் ஈஸ்வரன் என்றுதான் சுட்டுகிறான். இறைவன் போல் ஆன்மாவும் அழிவில்லாதது என்றுதான் நம் மெய்ஞானம் காணுகிறது. இதனால்தான் திருமழிசை

"நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே!
நீ என்னையின்றி இலை"

என்கிறார். இது மிக உயர்ந்த புரிதல். இதற்குள் மேலை விஞ்ஞானம் இன்னும் புகவில்லை. இது நமக்கு மட்டுமே புரியும் சரக்கு.

ஆயினும் மேலைப் புரிதலையும், கீழைப்புரிதலையும் ஒப்பு நோக்கிப் போனது என் எண்ணம். இந்தப் பிறவி என்ற சமாச்சாரம் என்னைப் படுத்தும் ஒரு கருப்பொருள் :-)

Anonymous 5/04/2007 10:31:00 AM

//நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே!
நீ என்னையின்றி இலை"//

நேரம் இருக்கும் போது விரிவாக முடிந்தால் ஆழ்வார் பாடல்களுக்கு உங்கள் உரையை
எழுதுங்கள். I would like to read your intrepretaion and thoughts on the sacred verses.
Thank you.

நா.கண்ணன் 5/04/2007 10:43:00 AM

திருமழிசை ஆழ்வார் ஒரு integrating factor. இவரை சிவவாக்கியர் என்று சொல்வதுமுண்டு.உண்மையில் சைவமும், வைணவமும் ஒன்றைத்தான் பேசுகின்றன, இருவேறு மொழிக்குறியீடுகளில். ஆழ்வார்கள் பற்றிய எனது கட்டுரைகளை "ஆழ்வார்க்கடியன்" எனும் பதிவாக மெல்ல, மெல்ல சேர்த்து வருகிறேன். முன்பு நிறைய எழுதியிருக்கிறேன். கலைஞர் சொன்னது போல், "ஆழ்வார்கள் எம் நெஞ்சை ஆழ்பவர்களே!"

நா.கண்ணன் 5/04/2007 10:45:00 AM

Oops!
ஆழ்வார்கள் எம் நெஞ்சை ஆள்பவர்களே!!