பால் வேறுபாடு


உலகம் ஆண், பெண் என்ற இரண்டு கட்டங்களுக்குள் அடங்கிவிடுகிறது. என்பது போல் தோன்றினாலும் இடையில் சில, பல பால் இருப்புகள் உள்ளன, என்று நான் சொல்லவில்லை, சிவ ஸ்வயோதா (Shiva-swayodaya) என்ற பழைய நூல் சொல்கிறது. 14 வகை பால் வேறுபாடு உண்டாம்.

பால் வேறுபாடு பற்றிய நமது சிந்தனைகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்கிறது கீழேயுள்ள சுட்டி:

New Bodies, New Lives - Transgener issues in America

இருக்கு வேதம் சொல்கிறது ஆண், பெண் என்ற வேறுபாடு இருந்தாலும், கூர்ந்து கவனித்தால் ஆணுக்குள் பெண்ணும், பெண்ணுக்குள் ஆணும் ஒளிந்திருப்பது தெரியுமென்று!

[When the Rigveda acclaims that 'he who is described as male is as much the female and the penetrating eye would not fail to see it', it admits the factum of the outward duality of existence.]இந்தியப் பழம் மரபைப் பேணும் இன்றையத் தமிழர்களும் இது குறித்து மீள்சிந்தனை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. தாய்லாந்தில் அர்த்தநாரிகளின் சிறப்பான ஒரு கலை நிகழ்ச்சி குறித்து இப்பதிவில் சொல்லியுள்ளேன் (தேடினால் கிடைக்க மாட்டேன் என்கிறது. பரவாயில்லை ஆங்கில வடிவில் இங்கு கிடைக்கிறது)

2 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 5/18/2007 10:27:00 AM

அப்படித்தான் தோனுகிறது,இருந்தாலும் அவர்களுக்கு இது ஒரு இருதலைக்கொள்ளி நிலை.
காலையிலேயே சூடாக இருக்கு... வெய்யில்.:-)

நா.கண்ணன் 5/18/2007 10:33:00 AM

இந்த உளவியலைக் கொஞ்சம் கூடுதலாக கவனிக்க வேண்டுமென்று தோன்றுகிறது. பால் என்றாலே கலவி என்ற நிலை. அதனாலேயே இவர்களில் பலர் இழிதொழில் செய்து வயிற்றை நிரப்ப வேண்டிய நிலை. ஊனமுற்றோருக்கு சம உரிமை கொடுப்பது போல், இவர்களையும் சகஜமாகப் பார்க்கப் பழகிவிட்டால், அவர்கள் பாட்டுக்கு இயல்பான வாழ்வு வாழ்வர்.