மொழி பட நினைவுகள்இப்படி கூட தமிழில் படங்கள் வருமா என்ன? வன்முறை இல்லை, கற்பழிப்பு இல்லை, கொச்சை வசனங்கள் இல்லை, டிஷூம்..டிஷூம் சண்டைக்காட்சிகள் இல்லை, நாலு வெளிநாட்டு காதல் காட்சி இல்லை (வெளிநாட்டில் எடுத்தது போல் தோற்றமளிக்கும் வண்ணம் உள் நாட்டில் எடுத்துள்ளார்கள் என்று தோன்றுகிறது). எப்போதும் வில்லனாக சித்தரிக்கப்படும் பிரகாஷ்ராஜ் எளிமையான, இயல்பான, காமெடி ரோல்! ஜோதிகா முன்னேறி வருகிறார். பல உணர்ச்சிகளைக் காட்டப் பழகி வருகிறார். கோபப்படும் போதுதான் செயற்கையாகப் படுகிறது, அல்லது சரியாக வரவில்லை. புதிய கதாநாயகன் ப்ரிதிவிராஜ் நன்றாகச் செய்திருக்கிறார். எதிர்காலம் தெரிகிறது. எல்லாக் கதாபாத்திரங்களுமே சோடை போகவில்லை. மிக அழகான இயக்கம் (ராதாமோகன்). இசை, இப்படத்தின் உயிர். வித்யாசாகர் என்றால் நல்ல இசை என்று பொருள். வைரமுத்துவின் வைர வரிகள். மொத்தத்தில் எல்லோரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். வாழ்க.

இப்படித்தின் கதை 70 களில் வந்த ஒரு இந்திப்படத்தின் கதை. ஊனமுற்ற தம்பதியர் இருவருக்குப் பிறக்கும் குழந்தையும் ஊனமோ என்ற பயம் வரும் அப்படத்தில். அற்புதமான படம் (பெயர் மறந்து விட்டது).

1. இப்படத்தின் கதாநாயகி இவ்வளவு அழகாக இருக்காவிடில் ஊனத்தின் மீதும் உண்மைக் காதல் வருமா?
2. சப்தமே இல்லாத உலகு என்று ஒன்று உண்டா? அவளுக்கு பேச்சுத்தான் இல்லை. உள்ளே ஒரு நாதம் இருந்து கொண்டே இருக்கும். அது யோகம் கற்றவர்க்குப் புரியும்.
3. மொழி என்பதை மிக விரிவாக சிந்திக்க வைக்கிறது படம். உண்மையில் மொழி என்பது ஒரு சௌகர்யம். மின்சாரம் போல. அது இல்லாமலும் வாழ்வு ஓடும். அவரவர் மொழி, அவரவர்க்கு!
4. திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரத்தில், தன் நிலையை ஊமையின் கனவிற்கு ஒப்பிடுவார். "ஊமை கண்ட கனவு, அதுவும் பழுதாய் கழிந்தன, ஒழிந்தன நாட்கள்" என்பார். நெற்றியடி. எவ்வளவு கஷ்டம், பாருங்கள்.

மொத்தத்தில் அன்பு செய்வது என்பது எவ்வளவு எளிதோ, அவ்வளவு கஷ்டமும் கூட. ப்ரிதிவிராஜ் நிலையில் என்னை வைத்துப் பார்க்கும் போது மலைப்பாக உள்ளது. ஆனால் காதல் என்பதில் மலையும் மானுடர்க்கு ஒரு கடுகாமே!

32 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 7/20/2007 09:17:00 AM

"மொழியை" காதில் "அடைப்பானுடன்" சென்னை தியேட்டரில் பார்த்தேன்.தியேட்டர்காரர்கள் கொடுத்த "மொழி" அது.:-)
தரமான படங்களில் இதுவும் ஒன்று.

-/பெயரிலி. 7/20/2007 09:18:00 AM

/இப்படித்தின் கதை 70 களில் வந்த ஒரு இந்திப்படத்தின் கதை. ஊனமுற்ற தம்பதியர் இருவருக்குப் பிறக்கும் குழந்தையும் ஊனமோ என்ற பயம் வரும் அப்படத்தில். அற்புதமான படம் (பெயர் மறந்து விட்டது)./

தமிழிலேயே "உயர்ந்தவர்கள்" வந்ததே.
"இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தாம் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன..
(தாம் விளையாட/டி :-))"

Anonymous 7/20/2007 09:33:00 AM

koshish, but this is not the story of koshish.
Both the hero and heroine were deaf and
dumb in that movie!

செந்தழல் ரவி 7/20/2007 09:38:00 AM

1. இப்படத்தின் கதாநாயகி இவ்வளவு அழகாக இருக்காவிடில் ஊனத்தின் மீதும் உண்மைக் காதல் வருமா?

சத்தியமா வந்திருக்காது..காது...காது...ஏன் கருப்பான ஒருத்த்தியை பார்த்து இந்த மாதிரி சேக்ரிபையர்ஸை ஐ.லவ்.யூ சொல்லச்சொல்லுங்க...ம் ஹும்...உச்சு கொட்டி தெறிச்சு ஓடுவானுங்க

2. சப்தமே இல்லாத உலகு என்று ஒன்று உண்டா? அவளுக்கு பேச்சுத்தான் இல்லை. உள்ளே ஒரு நாதம் இருந்து கொண்டே இருக்கும். அது யோகம் கற்றவர்க்குப் புரியும்.

அது டைரக்டருக்கு தெரியனுமே ? !!
அது எப்படி உங்களுக்கு தெரியும் ஹி ஹி...!!!

3. மொழி என்பதை மிக விரிவாக சிந்திக்க வைக்கிறது படம். உண்மையில் மொழி என்பது ஒரு சௌகர்யம். மின்சாரம் போல. அது இல்லாமலும் வாழ்வு ஓடும். அவரவர் மொழி, அவரவர்க்கு!

சரிதான்...!!!

படம் அட்டகாசமாக இருந்ததென்னவோ உண்மை..!!!

துளசி கோபால் 7/20/2007 10:21:00 AM

படம் இருக்கட்டும். ஏன் உங்களைக் கொஞ்சநாளா இங்கே காணோம்?

'ஊர்'வலமா?

நா.கண்ணன் 7/20/2007 10:22:00 AM

குமார்: உண்மை. மோகமுள் படம் சென்னையில் பார்த்த போது காது வலி தாங்காமல் உள்ளே போய் ஆபரேட்டரிடம் வால்யூமைக் குறைக்கச் சொல்லி மன்றாடினேன். நம்ம ஊரில் என்ன எல்லோரும் செவிடோ?

நா.கண்ணன் 7/20/2007 10:23:00 AM

ரமணி: உயர்ந்தவர்கள் படம் பார்த்தேனா என நினைவில் இல்லை. அது என்ன கதை?

நா.கண்ணன் 7/20/2007 10:24:00 AM

ஆ! கோஷிஷ்! அதுதான். அதுவொரு அருமையான படம். மொழி வேறு கதைதான் என்றாலும், இதன் அடிப்படை பயம் (அதுதான் கதையை நகர்த்துகிறது) ஒன்றுதானே!

நா.கண்ணன் 7/20/2007 10:30:00 AM

துளசி:

நலமா?
பதிப்பிக்க நேரமில்லாமல் ஒரே வேலை. ஊரில் இல்லை. எனவே தமிழில் எழுதுவதில் பிரச்சனை வேறு. இனி ஒரு மாதம் இங்கேதான். பதிப்பு தொடரும்.
இவ்வளவு நாளைக்கு அப்புறம் எழுதறோமேன்னு ஒரு சின்ன பயம். எல்லோரும் இன்னும் ஆதரவா, இருக்கிற இடத்தில் இருக்கிறீர்கள், என்பதை அறிந்து மகிழ்ச்சி. நிழல்வெளி இன்னும் ஒரு புதிர்தான் :-)

Mookku Sundar 7/20/2007 11:12:00 AM

கண்ணன்,

இப்போதுதான் நானும் பார்த்தேன்..டீசன்டான படம். ஜோதிகா அருமையாக நடித்திருக்கிறார். இவ்வளவு சூப்ப்பரான நடிகையை கல்யாணம் முடக்கிப் போட்டு விட்டதே எனறு தோன்றினாலும், அவருக்கும் செட்டிலாக ஆசை வந்திருக்கும்ம் என்றும் தோன்றியது. படத்தில் கண்களால் வாழ்ந்திருந்தார் ஜோ. அதும் அந்த கடைசி சீன்..சர்ச் வாசலில், என்னை கல்யாணம் பண்ணிக்கிறாயா என்று பிருத்விராஜிடம் கண்களால் இறைஞ்சும்ம்போது தொண்டை அடைத்து விட்டது ( எனக்கு).

ராஜபார்வையில் கமலைப் போல அழகன் குருடனாக நடிப்பதும், மொழியில் ஜோ ஊமையாக நடிப்பதும் நம்மையெல்லாம் தியேட்டருக்கு வரவழைத்து அவர்கள் தாபங்களை பார்க்க வைக்க மோட்டீவேட் செய்கிற தந்திரம். இல்லாவிட்டால் யார் இந்தப் படம் பார்ப்பார்கள்.. ;-) ;-). அதுக்கு சிவாஜியை இன்னொரு முறை பார்க்கலாம். அது சரி, சிவாஜி பாத்தாச்சா..??

Anonymous 7/20/2007 11:13:00 AM

கமல் சுஜாதா நடித்த படம். இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் யேசுதாஸ், வாணி ஜெயராம் பாடிய பாடல்.
மொழி அருமையான படம். நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் நடக்குமா தெரியவில்லை!

நா.கண்ணன் 7/20/2007 11:23:00 AM

சுந்தர்:

உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன். ஜோ கொஞ்சம் எங்க அம்மா மாதிரி அழகு என்று முன்பொரு பதிவில் சொல்லியிருக்கிறேன் :-) மிக அழகாகவே செய்திருக்கிறார். அது நிச்சயம் ஒரு ஈர்ப்பு. ஆச்சர்யம்! சோடை போகாமல் எல்லோரும் என்ன நடிப்பு! இந்த அபார்ட்மெண்ட் செகரட்டரி. அவர் முதல் மரியாதை சிவாஜி போல் நடிப்பாரே! சூப்பர். அடக்கமான, அருமையான காமெடி படம். கமல் படத்தை மிஞ்சிவிட்டது இந்த ரகத்தில். சிவாஜி படம் இன்னும் பார்க்கவில்லை. பெரியார் படம் பார்த்துவிட்டு, சிவாஜி. பெரியார் படப் பாடல்கள் அனைத்தும் சூப்பர். யார் இசை?

நா.கண்ணன் 7/20/2007 11:27:00 AM

//மொழி அருமையான படம். நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் நடக்குமா தெரியவில்லை! //

எனக்கும் இப்படித் தோன்றியது. அதனால்தான் அன்பு செய்வது கடினம் என்றேன். ஒரு இசைக் கலைஞன் ஊமையுடன் வாழ்வு நடத்துவது என்பது எவ்வளவு சிரமம்.

இவர்கள் சொல்ல மறந்த ஒரு விஷயம் இருக்கிறது. பீத்தோவன் தனது அந்திம காலங்களில் ஊனமாகிவிடுகிறார். இருப்பினும் இசை அமைக்கிறார். இசை என்பதும் ஒரு மொழி. காது கேளாவிடினும்!!

Anonymous 7/20/2007 11:37:00 AM

அபார்ட்மென்ட் செகரட்டரி, எண்பதுகளில், தூர்தர்ஷனில், செய்தி வாசித்த வரதராஜனைப் ? போல் இருக்கிறார்.
அவரா தெரியவில்லை! பீதோவன் பற்றி நீங்கள் எழுதியிருப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன்

Anonymous 7/20/2007 01:40:00 PM

-மலைவாசி

குறை சொல்லியே பழகிவிட்டதால், நம்மால் முழு மனதுடன் பாராட்ட முடிவதில்லை. let me come out of that ... நான் மிகவும் ரசித்த படங்களில் ஒன்று 'மொழி' . கண்ணன் சொன்னது போல், தமிழ் படங்களில் காணப்படும் பல்வேறு அத்தியாவசிய 'காரணிகள்' படத்தில் இல்லை(வன்முறை, சண்டை, காமெடி என்ற பெயரில் விரசமான உரையாடல்). இயல்பான, அழகான அருமையான கதை.. ஏதோ ஏழாவது கிரகத்தில் நடப்பது போன்ற சம்பவங்களாக இல்லாமல், தினந்தோறும் கண்முன்னே நடக்கக்கூடிய நிகழ்வுகளாக அமைத்திருப்பது அழகாக இருக்கிறது.

இயல்பான வசனங்கள்..

"இனி மேல் டெய்லி வாக்கிங் போகப்போறேன்"
"என்ன ஆச்சுடா உனக்கு.."
"அர்ச்சனாவும் போறாளே... "
"ஓ... தனியாவா போறா..?"
"இல்லே ... நாய்க்குட்டிக்கூட.."
"அப்போ நீ எதுக்கு.."

---------------
"அப்போ கல்யாணம் ஆகலே..."
"batchlor-னா கல்யாணம் ஆகலேன்னுதான் சார் அர்த்தம்"
---------

அழகான காட்சி அமைப்பு...
"காற்றின் மொழி .." பாடலில் வரும் காட்சிகள்... சங்கில் அலையோசை கேட்பது, zebra crossing ஐ பியானோவாக கற்பனை செய்வது...

பாடல் வரிகள்
"காற்றின் மொழி.." ஒருமுறை கேளுங்கள்... தமிழ் உங்களுக்கு மிகப்பிடித்தமான ஒன்றாக மாறிவிடும்.

"மெளனமே .. உன்னிடம் .. மெளனம் தானே அழகு.." பாடல் தோன்றும் இடம் மிக அழகு..

மிக முக்கியமாக... யாரையும் தவறானவர்களாக சித்தரிக்காமல் இருப்பது தமிழ் படத்திற்கு புதிது. நான் பார்த்த பிற படங்களில், வில்லன் இல்லாவிட்டால், ஹீரோ யாரென்று தெரியாமலே போய்விடும். அப்படியில்லாமல், எல்லோரையும் நல்லவர்களாகவே சித்தரிப்பது is simply superb

நா.கண்ணன் 7/20/2007 02:37:00 PM

//அபார்ட்மென்ட் செகரட்டரி, எண்பதுகளில், தூர்தர்ஷனில், செய்தி வாசித்த வரதராஜனைப் ? போல் இருக்கிறார்.//

அட! ஆமாம்! எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று. ஆனால் வரதராஜனால் இவ்வளவு பாவங்கள் காட்டமுடியுமா என்று தெரியவில்லை. நிச்சயம் இவர் நாடக நடிகராகவேணும் இருப்பார். அசத்துகிறார். அவர் மனைவி கூட பானுப்பிரியா சாயல்!

Mookku Sundar 7/20/2007 02:43:00 PM

//இவர் நாடக நடிகராகவேணும் இருப்பார். அசத்துகிறார். //

அவர் தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம். அங்கே அவர் ரொம்ப ஃபேமஸ்...

ஜோ / Joe 7/20/2007 03:22:00 PM

பெரியார் படத்துக்கு இசை வித்யாசாகர் தான்.

நா.கண்ணன் 7/20/2007 03:26:00 PM

ஜோ

நன்றி. வித்யாசாகர் தொடர்ந்து அற்புதமான திரை இசை தந்த வண்ணம் உள்ளார்.

சுந்தர்
பிரம்மானந்தம் தகவலுக்கு நன்றி

Aruna Srinivasan 7/20/2007 04:08:00 PM

ரொம்ப நாட்களுக்குப் பிறகு வந்துள்ள ஒரு அருமையான படம். சகிக்க முடியாத slapstick வகை ஜோக்குகள் இல்லாமல் இயல்பாகவே கதையுடன் ஒட்டிய நகைச்சுவை - வாய் விட்டு சிரித்து மகிழ்ந்த - பார்த்துவிட்டு வந்ததும் வீட்டில் சொல்லிச் சொல்லி சிரிக்கத் தோன்றும் காட்சிகள். அன்பின் ஆழமும் அதேபோல் யதார்த்தமாக வெளிப்படுகிறது - ஜோதிகாவின் கோபம் கொஞ்சம் அதிகம் என்று தோன்றினாலும் :-) இந்தப் படம் இன்னும் பரவலாக அறியப்பட்டிருக்கலாம் - பாக்ஸ் ஆபீஸ் தோல்வி என்பது ஏமாற்றம்தான் - "பெரிய" நடிகர்கள் இல்லாததுதான் காரணமோ? பிரகாஷ்ராஜ் தன் ஆ.விகடன் பத்தியில், வசூலில் இந்தப் படம் வெற்றியைத் தரவில்லையானாலும் - தனக்கு இந்தப் படம் மன நிறைவைக் கொடுத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

நா.கண்ணன் 7/20/2007 04:12:00 PM

//- பாக்ஸ் ஆபீஸ் தோல்வி என்பது ஏமாற்றம்தான் - //

இது தோல்விப்படமென்றால் தமிழக சினிமாவிற்கு எதிர்காலமே இல்லை :-(

ஜோ / Joe 7/20/2007 04:34:00 PM

மொழி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் தோல்வி என்பது தவறான தகவல் .கண்டிப்பாக வெற்றிப்படம் . சமீபத்தில் தான் 100 வது நாள் வெற்றி விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள் .

அருணா அவர்கள் சொல்வது போல் பிரகாஷ் அப்படி குறிப்பிடிருக்கிறாரா தெரியவில்லை .ஒரு வேளை முந்தைய தயாரிப்பான 'பொய்' பற்றி சொல்லியிருக்கலாம் .அல்லது குறைவான விலையிலே வினியோகஸ்தர்களுக்கு விற்றிருக்கலாம் .அதனால் வினியோகஸ்தர்களும் ,தியேட்டர்காரர்களும் மட்டும் லாபம் பார்த்திருக்கலாம் .ஆனால் கண்டிப்பாக வசூலில் வெற்றி.

நா.கண்ணன் 7/20/2007 04:47:00 PM

ஜோ
உங்கள் பதில் வயிற்றில் பால் வார்த்தது. எவ்வளவு அழகான படம். இது ஓடவில்லையெனில் நம்மவர்க்கு எங்கோ கோளாறு என்று அர்த்தம்.

Aruna Srinivasan 7/20/2007 10:34:00 PM

ஜோ,

பிரகாஷ் ராஜின் ஆ.வி. பத்தியில் அப்படி ஒரு தொனியில் சொல்லியிருந்த மாதிரிதான் ஞாபகம். நான் சரியாகப் புரிந்து கொள்ளாமலும் இருந்திருக்கலாம்; அல்லது நீங்கள் சொன்னதுபோல் அவர் "பொய்" படத்தைக் குறிப்பிட்டிருக்கலாம். எதுவானாலும், this is one of the instances where I'm happy to be proved wrong :-)Excellent movie.

-/பெயரிலி. 7/21/2007 12:27:00 AM

அன்பின் கண்ணன்,
உயர்ந்தவர்களிலே கமல்ஹாஸன் (அப்போது கமலஹாசன்), சுஜாதா இருவரும் பேசும், கேட்கும் சக்தியில்லாதவர்கள். மிகவும் கஷ்டப்பட்ட வாழ்க்கை. அவர்களுக்குக் குழந்தை பிறக்கப்போகின்றதெனத் தெரியும்போது, அதுவும் தங்களைப் போன்றே ஊனமுற்றிருக்குமோ என அஞ்சுகின்றார்கள். கமலஹாசன் பிறந்த குழந்தைக்கு, (தனக்குக் கேட்காத) கிலுகிலுப்பையை ஆட்டி எப்படியாகக் குழந்தை எதிர்வினைகிறது என்றும் பார்ப்பார் (என்பதாக ஞாபகம்). தேங்காய் சீனிவாசனும் அப்படியான ஒரு பாத்திரத்திலே வருவார். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள்; அவ்வளவுதான் ஞாபகம் :-(

-/பெயரிலி. 7/21/2007 12:30:00 AM

மொழி விழியத்தை நண்பர் ஒருவர் நல்ல படமெனத் தந்தார். ஜோதிகா தெருவிலே மனைவியைத் திட்டுகின்றவருடன் சண்டைபோடுவதை நாயகனும் நண்பனும் பார்ப்பதுவரை பார்த்துவிட்டு, சரி 1+1=2 & 2+1=3 என்று அத்தோடு நிறுத்திவிட்டேன். பார்க்கவேண்டும்.

மருதநாயகம் 7/21/2007 01:07:00 AM

//- பாக்ஸ் ஆபீஸ் தோல்வி என்பது ஏமாற்றம்தான் - //

இது தவறான தகவல். சிவாஜிக்கு முந்தைய இந்த ஆன்டின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்

1. போக்கிரி
2. தாமிரபரணி
3. பருத்திவீரன்
4. மொழி

மொழி நிச்சயம் வெற்றிப் படமே, அது முதல் இடத்தில் வராதது தமிழ் ரசிகர்களின் துரதிர்ஷ்டமே

நா.கண்ணன் 7/21/2007 08:16:00 AM

//this is one of the instances where I'm happy to be proved wrong :-)Excellent movie.//
Thank you Aruna. I think, we're all happy about this.

நா.கண்ணன் 7/21/2007 08:22:00 AM

அன்பின் ரமணி:
உயர்ந்தவர்கள் படம் பற்றி நீங்கள் சொல்வதைப் பார்த்தால் கோஷிஷ் படம்தான் ஞாபகம் வருகிறது. ஒருவேளை இந்தியின் மறு ஆக்கமாக இருக்கலாம். ஊனமுற்றோரின் பயம் நியாயமானதே. ஆனால், பார்க்கின்சன் வியாதி போல் செவிடு என்பது பரம்பரை வியாதியா? இல்லை என்று தோன்றுகிறது.

யோசித்துப் பார்த்தால் ஊனமற்ற குழந்தை, ஊனமுற்றோருக்குப் பிறக்கும் போது அது வளரும் சூழல் மிக வித்தியாசமாக இருக்கும். அதை வைத்தும் படம் எடுக்கலாம். அக்குழந்தை விதியால் 'உயர்ந்தவராக'வே பிறக்கிறது!

தருமி 7/21/2007 03:12:00 PM

கண்ணா,
இப்போதுதான் இரு பதிவுகளையும் வாசித்தேன். ரொம்ப நாளாக மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் - மொழி படத்தைப் பற்றி எழுதணும் என்பது. இப்பதிவுகள் அந்த நினைவைத் தள்ளிப் போட்டு விட்டன. நன்றாக எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.

இது (ஏறக்குறைய) ஒரு classic என்றே தோன்றியது. பல காரணங்கள். அதில் பலவும் சொல்லப் பட்டு விட்டன. அது classic என்பது கொஞ்சம் அதிகம்தான். ஆயினும் இதுவரை வந்த படங்களில் இல்லாத ஒரு தனித்தன்மையோடு - வழக்கமான 'கோனார் நோட்ஸ்கள்' இல்லாமல் - இயல்பான வசங்களோடு வந்த படம் என்பதே அதன் தனிச் சிறப்பாய் தோன்றியது.

நா.கண்ணன் 7/21/2007 03:24:00 PM

சார்! சொல்லியாச்சுன்னா மறு பேச்சு ஏது? அமெரிக்கன் கல்லூரியில் உட்கார்ந்து புதுக்கவிதை அலசிய அந்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன. அடுத்தமுறை வரும் போது உங்களுடன் மதுரை சுற்ற வேண்டும். இன்னும் அந்த புல்லட் பைக் வைத்திருக்கிறீர்களா? (காயலான் கடைக்கு போயிருச்சா? :-))

தருமி 7/21/2007 03:38:00 PM

கண்ணா,
அது புல்லட் இல்லை. ஜாவா. ஆச்சில்ல அதுவும் 35 வருஷம்; அதான் கொஞ்சம் மறந்திருக்கும்.

//அமெரிக்கன் கல்லூரியில் உட்கார்ந்து புதுக்கவிதை அலசிய அந்த நாட்கள் ..//

அடடே! அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ..
அப்போ எழுதின இந்தக் கவிதைக்குக் கடைசிவரி நீ(ங்கள்) எடுத்துக் கொடுத்தது, அந்தக் கவிதையின் நாயகனும், அவரால் நாமிருவரும் ஒரு மாலையில் உங்கள் வீட்டுக்கருகிலும்
நியூ சினிமாவிற்கருகிலும் இருந்த park-ல் உட்கார்ந்து பேசியது ...ம்ம்..ம். எல்லாமே ஞாபகத்துக்கு வருது ...

:) & :(