கடற்குப்பை

வீட்டில் குப்பையா? தூக்கி வெளியே போடு! என்பது நடைமுறை வழக்கம். ஆனால், இனி இது இப்படிச் செயல் படுமா? என்பது கேள்விக்குறி. உலகு இதுவரை கண்ட உயிரினங்களிலே மனிதன் ஒருவன்தான் குப்பை போடக்கூடியவன். பிற உயிர்கள் கழிவு செய்யலாம். அவை மக்கி, மண்ணாகி உலகுடன் கலந்துவிடும். ஆனால், மனிதன் போடும் குப்பைகள் அவ்வளவு எளிதாக அழிவதில்லை. குறிப்பாக பிளாஸ்டிக். சுமார் 800 வருடங்களாகும், அது கரைந்து மண்ணாக. இப்படி, அழிக்க முடியாப் பொருட்கள் சேரும் போது குப்பை என்பது ஒரு உலகப் பிரச்சனையாகிவிடுகிறது.


அழகி சுட்டுவது, அழகு சாதனமல்ல! குப்பை!!

குறிப்பாக நீரில் எறியும் எதுவும் விட்ட இடத்தில் நிற்காமல் இடம் பெயர்ந்து கடலில் வந்து சேர்ந்து விடுகிறது. கடல் வெறும் நீர்க்குளமல்ல. அங்கு நீரோட்டமுண்டு. மாபெரும் சுழற்சிகளுண்டு.


மிதப்பு, வலை, தண்ணீர் பாட்டில், பிற குப்பைகள்

எனவே மலேசியாவில் தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில் சென்னையில் கரை சேரலாம். ஜப்பானில் எறிந்தது கலிபோர்னியாவில் கரை சேரலாம். எல்லையற்ற குப்பைச் சுழற்சியிது!ஒருமணி நேரத்தில் சேகரித்தது, 200 கிலோ குப்பை


சமீபத்தில் சோல் நகரில் நடந்து முடிந்த சூழலியல் பட்டறையில் மூன்று நாட்கள் இந்த கடற்குப்பை (marine debris) பிரச்சனைக்கு செலவிட்டோம். கடற்கரையோரமுள்ள ஒரு தீவிற்குள் சென்ற போது 60 வருடங்களுக்கு முன் பயன்படுத்திய கண்ணாடி மிதப்பிலிருந்து நேற்று தயாரித்த கொககோலா பாட்டில் வரை கரை சேர்ந்திருந்தன. ஒரு மணி நேரத்தில் எங்கள் குழு 200 கிலோவிற்கும் அதிகமான குப்பைகளைச் சேகரித்தோம். கடற்கரை சுத்திகரிப்பு என்பது ஒரு உலக இயக்கமாகவே இயங்குகிறது:
Ocean Conservancy's International Coastal Cleanup

அரசு சாரா நிறுவனங்கள் இதில் ஈடுபடுகின்றன. இந்தியாவிலும் இப்படி இளைஞர்கள் சேர்ந்து கடற்கரை சுத்திகரிப்பில் ஈடுபடலாம். காதலிக்கு எழுதிய கடிதத்திலிருந்து, கட்டுமரம் வரை எல்லாம் கடற்கரையில் கிடைக்கும். குப்பை சுழற்சி என்பதை லாபகரமான தொழிலாக நடத்த முடியும், இளைஞர்கள் முயன்றால்.

0 பின்னூட்டங்கள்: