மாறும் தமிழகம்

டேய் சக்தி! என்று விளிக்கலாம் (12B படத்து கதாநாயகன்)
ஏய் சக்தி! இங்கே வாடி! என்றும் அழைக்கலாம்.
சக்தி இருபாற்பெயர்.

நான் பேசப்போகும் நபரும் இருபாலர். ஆணாக இருந்து பின் பெண்ணாக மாறியவர். ஆங்கிலத்தில் இவர்களை transexual என்கின்றனர். இவர்களுக்கு எந்த சமூகத்திலும் சரியான மதிப்புத் தருவதில்லை. பால்வழி சார்ந்து நம் சமூகம் இயங்குகிறது. ஏதாவது ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் இந்த மனோநிலை மாறிவருகிறது. இது பற்றிய சில பதிவுகள் 'க'வினுலகில் வந்துள்ளன. "என் தாய் பற்றி அனைத்தும்" எனும் ஸ்பானிஷ் படத்தில் கதாநாயகனின் தந்தை ஒரு பெண்ணாக மாறிவிடுவார். அப்படத்தில் இப்படி மாறும் மனோநிலை பற்றியும், அவர்கள் வாழ்வு பற்றியும் நன்கு படமாக்கப்பட்டிருக்கும். தாய்லாந்திலுள்ள பட்டையா எனுமிடத்தில் திருநங்கைகள் நடத்தும் மிகப்பெரிய கேபிரே உண்டு. ஆனாலும், மேற்சொன்ன உதாரணங்களில் பாலியல் சாரலுண்டு (சார்புண்டு).

ஆனால், நர்த்தகி சக்தி என்பவர் எனக்கொரு தனிமடல் அனுப்பியிருந்தார். அதில் அவரின் ஆனந்தவிகடன் பேட்டி இருந்தது. அது மாறி வரும் தமிழக சமூகத்தை எனக்குச் சுட்டியது. இவருக்கு மட்டும் சுயமரியாதையும், கலைவெறியும் இல்லையெனில் கிஜுடா எனும் கேலிப்பெண்ணாக, பாலியல் ஊழியராக மாறிப் போயிருப்பார். ஆனால், தவமாய் தவமிருந்து கலாநிதி.கே.பி.கிட்டப்பாவிடம் நர்த்தனம் கற்றுக் கொண்டு இருக்கிறார். யாமினி கிருஷ்ணமூர்த்தி, சுதா ரகுபதி, வைஜயந்திமாலா போன்றோரை உருவாக்கிய குரு இவரையும் ஏற்றுக் கொண்டு உருப்படுத்தியது பெரிய செயல். தமிழக சரித்திரத்தில் இப்படி திருநங்கைகள் நர்த்தகிகளாக இருந்த வரலாறு உண்டா?

சிங்கை சென்றிருந்த போது நண்பர் உல்ரிக நிகலோஸ் அரவான் பலி பற்றியும், திருநங்கைகள் பற்றியும் ஆவணப்படம் எடுத்திருந்தத்தை எனக்குக் காட்டினார். இவர் பற்றியும் ஆவணப்படம் எடுக்க வேண்டுமென்று தோன்றுகிறது.2 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 7/25/2007 10:08:00 AM

இவர்களைப்பற்றி புரிதல் வெகு ஜனங்களிடம் அதிகமாகி வருகிறது.
சரியான கோணத்தில் ஊடகங்கள் இவர்களைப்பற்றி சொல்லாவிட்டால் பலரின் புரிதலும் அப்படியே இருக்கும்.
15 வருட நடனம்...அப்பாடியோவ் !படிக்கவே மலைப்பாக இருக்கிறது.
PDF யில் உள்ள எழுத்துக்கள் தான் கண்ணை கஷ்டப்படுத்துகிறது.

நா.கண்ணன் 7/25/2007 10:13:00 AM

நன்றி குமார்.
சரியாகச் சொன்னீர்கள். இம்மாதிரி சமூக மாற்றங்களுக்கு மீடியாவின் துணை மிக அவசியம்.
இது அவர் அனுப்பிய PDF. மன்னிக்க.