கலாமின் பத்துக் கட்டளைகள்

My dear citizens, let us resolve to continue to work for realizing the missions of developed India 2020 with the following distinctive profile.

1. A Nation where the rural and urban divide has reduced to a thin line.

பேரா.கிருஷ்ணசாமி (மறைந்த) சொல்வார், கூடியவிரைவில் சென்னையும், பெங்களூரும் சேர்ந்துவிடுமென்று. கிராமங்கள் சுயதேவை நிறைந்து வாழவேண்டும்.

2. A Nation where there is an equitable distribution and adequate access to energy and quality water.

கிராமத்தில் ஜீரோவாட் பல்புதான் வாங்குவார்கள். செலவு குறைவு பாருங்க! மாற்றுவழிகள் கொண்டு கிராமங்களுக்கு சக்தி வசதி செய்து தர வேண்டும்.

3. A Nation where agriculture, industry and service sector work together in symphony.

சரியான கிராமத்தான் வந்துட்டான்னு பேங்க் ஆபீசர் சொல்வது மாறவேண்டும். தொழில் அதிபர்கள் கிராமங்களை வெறும் நுகர் சந்தை என்று காண்பதை மாற்ற வேண்டும்.

4. A Nation where education with value system is not denied to any meritorious candidates because of societal or economic discrimination.

இந்த ஒதுக்கீடுகளெல்லாம் விரைவில் சமமாகி எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைத்திட வேண்டும். திறமை ஒன்றிற்கே மதிப்புக் கொடுக்க வேண்டும். எல்லோருக்கும் அடிப்படைக் கல்வி கட்டாயமாக வேண்டும்.

5. A Nation which is the best destination for the most talented scholars, scientists, and investors.

இது இப்போதே தகவல் துறையில் தொடங்கிவிட்டது! பலகாலமாகவே ஆப்பிரிக்க, இந்திய உபகண்டத்துணை நாடுகள் இந்தியாவை உயர்வாக நம்பியே கல்விச் சேவைக்கு வருகின்றன.

6. A Nation where the best of health care is available to all.

நமது பொது மருத்துவ மனைகளில் லஞ்ச ஊழல் களைந்தெடுக்கப்பட்டு எல்லோருக்கும் மருத்துவ வசதி அளிக்கப்பட வேண்டும்.

7. A Nation where the governance is responsive, transparent and corruption free.

லஞ்சம் என்பது இந்தியாவின் ஒட்டுண்ணி, புற்று நோய். பயிர் வளர்வதற்கு முன்பே வாட வைக்கும் நோய். தேசத்தை வளர்த்து விட்டு பின்னால் சுரண்டலாம் என்ற எண்ணம் வர வேண்டும்.

8. A Nation where poverty has been totally eradicated, illiteracy removed and crimes against women and children are absent and none in the society feels alienated.

குற்றமற்ற சமுதாயம். நேர்மை, நாணயம் இவைகளை மதிக்கும் சமூகம். இவை கடின இலக்குகள் அல்ல. ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் இது நடைமுறை சாத்தியம்.

9. A Nation that is prosperous, healthy, secure, peaceful and happy and continues with a sustainable growth path.

குறும்பார்வை போய் நெடும்பார்வை வர வேண்டும். மாற்றங்கள் நிரந்தரமாகவேண்டும். அரோக்கியமான, பாதுகாப்பான, அமைதியான, மகிழ்வான இந்தியா என்பதே நம் கனவு. நோக்கு.

10. A Nation that is one of the best places to live in and is proud of its leadership.

எம் தந்தையர் நாடு எனும் போதினிலே, இன்பத்தேன் வந்து பாய வேண்டும்.


Dr. A. P. J. Abdul Kalam
www.presidentofindi a.nic.in

7 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 7/26/2007 09:38:00 AM

நாடாளுபவர்கள் மனதில் இருக்கவேண்டியது.

நா.கண்ணன் 7/26/2007 09:42:00 AM

குமார்! இந்த மனிதரின் திறத்தை எப்படிப் பாராட்டுவது? இந்தியா செய்த நல்லூழ் பயன் இவர் நமக்குக் கிடைத்தது. இவர் மக்கள் மனதில் கனவை விதைத்து விட்டுப் போயிருக்கிறார். அதுவும் இளைஞர் (மாணவர்) மனதில். இந்தியா கட்டாயம் மாறும் பாருங்கள்!

ஜீவா (Jeeva Venkataraman) 7/26/2007 10:00:00 AM

Salutes to Him!

+ போட்டாச்சு!

நா.கண்ணன் 7/26/2007 10:03:00 AM

நன்றி ஜீவா! அப்படியே அவர் கனவு நனவாக உங்கள் மனதிலும், உங்கள் நண்பர்கள் மனதிலும் ஒரு நம்பிக்கை நட்சத்திரத்தைப் பதியுங்கள்!

Anonymous 7/27/2007 11:59:00 PM

//தேசத்தை வளர்த்து விட்டு பின்னால் சுரண்டலாம் என்ற எண்ணம் வர வேண்டும்.//

நாட்டைச் சுரண்டலாம் என்று அப்துல் கலாம் சொன்னதாக யாரும் புரிந்து கொள்ளப் போகிறார்கள் !!!!

நா.கண்ணன் 7/28/2007 06:41:00 AM

பாவம்! அவர் ஏன் சொல்லப்போகிறார்? அவரது கட்டளைகள் என்னுள் எழுப்பிய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டேன்.

லஞ்சம், ஊழல் என்பது இல்லாத தேசமில்லை. அது மனிதக்குறை. அதை முற்றும் நீக்கவியலாது. ஆனால் மற்ற நாடுகளில் அது நாட்டின் வளர்ச்சியைப் பாதிப்பதில்லை. நன்றாக வளர்ந்துவிட்டால் நன்றாகச் சுரண்டலாம் என்றாவது எண்ணுகிறார்கள். நம்மவர் செய்வதோ படு கிட்டப்பார்வை. ரோடு போட மாட்டான், ஆனால் மந்திரி மெர்சிடஸ் பென்ஸ் வைத்திருப்பான். அது ஓட நல்ல தார் ரோடு முதலில் போட வேண்டும் என்று தோன்றாது! சேலை இனாமாகக் கொடுப்பார்கள். 6 முழமென்றால் அதில் ஒரு முழத்தை வெட்டி, அதில் லாபம் பார்ப்பார்கள். அல்பம்! படு அல்பம்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) 7/28/2007 06:45:00 AM

தலைவனுக்கு அழகே இதுதான்!!1