பதிவர் பட்டறை

தமிழ்ப் பதிவர்களெல்லாம் சேர்ந்து ஒரு பதிவர் பட்டறை நடத்த வருகின்ற ஞாயிறன்று (ஆகஸ்ட் 5) முடிவு செய்தியுள்ளனர். தமிழ் மண்ணிற்கே உரிய சிறப்புடன் அதை இலவசமாக நடத்துகின்றனர். வெளிநாடுகளில் இலவசம் என்றால் உள்ளடக்கம் இல்லை என்று பொருள். ஆனால் இவர்கள் நிகழ்ச்சி நிரல் பொறாமைப் பட வைக்கிறது. நான் சென்னையில் இல்லையே என்று வருத்தமாக உள்ளது. எவ்வளவு விஷயங்கள் கற்றுத்தர உள்ளார்கள். அது மட்டுமில்லை, வருகின்றவர்களுக்கு சோறு போட்டு நடத்துகிறார்கள். என்ன இது? அன்று கூரத்தாழ்வான் செய்தது. வள்ளலார் செய்தது. இன்னும் செயல்பாட்டில் உள்ளதே!

இச்செயல்பாடுகளை 90 களில் நாங்கள் வெளிநாடுகளில் நடத்தும் போது, நினைத்துக் கொள்வோம். இந்தியா இன்னும் முழித்துக் கொள்ளவில்லை. அது விழிக்கும் போது என்னவாகுமென்று. இப்போது புரிகிறது!


இந்தியாவின் வளம் பொன், பொருள் அல்ல. அங்குள்ள இளைஞர்களே! அவர்கள் நினைத்தால் உலகையே புரட்டிவிடமுடியும்.


வாழ்க தமிழ். வாழ்க தமிழர்தம் நல் முயற்சிகள்.


மேல் தொடர்பிற்கு: தமிழ்ப் பதிவர் பட்டறை

4 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 8/02/2007 09:40:00 AM

ஆமாம்,இதன் மூலம் பல நல்ல எழுத்தாளர்கள் வெளிச்சத்துக்கு வந்தால் நல்லது...தமிழுக்கு.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மாயா 8/02/2007 02:34:00 PM

வாழ்த்துக்கள்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ 8/02/2007 03:10:00 PM

வாழ்த்துக்களுக்கு நன்றிங்கோ! :)))

Anonymous 8/02/2007 05:12:00 PM

உற்சாகமூட்டும் சொற்கள். நன்றி