வாழ்க நண்பர்கள்

ஞாயிறு, நண்பர்கள் தினமாம். அறிந்து கொண்டேன். நண்பர்கள் இல்லையெனில் வாழ்வு இவ்வளவு சுவாரசியமாக இராது. வாழ்வு புதிய, புதிய நண்பர்களை தினமும் வழங்கிய வண்ணமுள்ளது. பள்ளியில் படித்தவர் சிலர், கல்லூரியில் சுவை கூட்டியவர் சிலர், தெரு நண்பர்கள், ஊர் நண்பர்கள், உலகலாவிய நண்பர்கள் இப்படி. இன்னும் முகமே பார்த்திராத நண்பர்கள் என்றொரு வகையை இணையம் எனக்கு வழங்கி வருகிறது. இவர்கள் நிழல்வெளி மாந்தர். காலம் கனியும் போது நிழல் நிஜமாகிறது. நண்பர்கள் அபூர்வமானவர்கள். ஆச்சர்யமானவர்கள்.அரிது, அரிது எனக் கேட்கும் கந்தக் கோட்டத்து வேலோய்!

அரிது, அரிது நண்பராய் பிறத்தல் அரிது.

அதனினும் பெரிது அந்நண்பர்களை

நினைத்துப் போற்றுதலாகும்!!வாழ்க, வாழ்க! நட்பு!

3 பின்னூட்டங்கள்:

Anonymous 8/06/2007 01:52:00 AM

ஒரு நல்ல நண்பரை நீண்ட காலமாக சந்திக்க முடியவில்லை.

சரவணபவன்/ ஜேர்மனி

மதுரையம்பதி 8/06/2007 01:57:00 AM

கண்ணன் அவர்களுடன் சேர்ந்து நானும் எல்லோருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்....

துளசி கோபால் 8/06/2007 08:01:00 AM

//வாழ்க, வாழ்க! நட்பு!//


ரிப்பீட்டேய்.............. ரிப்பீட்டு:-)