லொள்ளு மிட்டாய்!

Wanted New Actor & Actress Mittai – New Tamil Movie Acting opportunity in new Tamil film Wanted New Actor & Actress for New Tamil Movie Mittai Contact – Director Anbu Cell - 9444732535 Please forward this message to interested your friends.

இப்படியொரு கடிதம் எனக்கு வந்திருக்குங்க! நானும் கமலும் ஒரே நாளில், ஒரே மாதத்தில், ஒரே...பிறந்தவர்கள் என்பதினால் எனக்கும் கமல் போல் ஒரு ஹீரோவாக வர வேண்டுமென்ற கனவிருந்தாலும், யோசித்துப் பார்த்தால் 'அப்பா' ரோல்தான் தருவானுக. இல்லை எம் தலைவர் சாலமன் பாப்பையாவை 'மாமா' ஆக்கியது போல் (சிவாஜி) நம்மையும் மாமா ரோலுக்கு தள்ளிவிடுவாங்கே. இது எதுக்குங்க வம்பு? இதப்பாக்கற இளவட்டங்க முருக்கு இருக்கிறதுக்குள்ளே போன் போட்டு வாய்ப்பை வாங்கிங்கிங்க.

நமக்கும் பதிவிட யோசனையே வரமா இருந்த போது இப்படியொரு லொள்ளு வந்ததும் நல்லதா போச்சு!

4 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 8/26/2007 09:49:00 PM

யோசனையே வரமா இருந்த
வராம இருந்த போதா?
காலை மாற்றி போட்டிருக்கீங்களா? :-)
நான் கூப்பிடுகிறேன் இப்போதே...

நா.கண்ணன் 8/26/2007 09:56:00 PM

குமார்: என்ன இப்படிக் காலை வாருகிறீர்கள். நான் மதுரை அல்லவா, அதனால் "கால் மாறி" விட்டது. "கால்" என்றவுடன், உடனே அந்த நம்பருக்கு "கால்" போடும் நினைவும் வந்து விட்டதா? கதாநாயகனுக்கு ஒரு தம்பி கேரக்டர் வேணுமாம். போறீங்களா?

Anonymous 8/26/2007 10:25:00 PM

Shall I Come In ???

U also started Kummi ? Super Thalaiva..

Senthazal Ravi

நா.கண்ணன் 8/26/2007 10:30:00 PM

வாங்க செந்தழல்! அது என்ன கும்மி? எனக்கு வந்தது! மாத்தி அனுப்பிச்சிட்டாங்களோண்னு ஒரு சந்தேகம். சென்னைதானே, அடித்துப் பாருங்கள். உங்களுக்குச் சான்ஸ் கிடைச்சாலும் கிடைக்கும். ஆமா! எப்ப இந்தப் பக்கம்?