இச்சேவை சாத்தியமா?மிக ஆச்சர்யமான வகையில் இங்கொரு பெருமாள் சேவை காட்டப்படுகிறது! திவ்யமாக உள்ளது என்பதில் கேள்வி இல்லை. இவன் வேங்கடேசனா என்பதே கேள்வி? இவ்வளவு நெருக்கமாகப் போய், மூலஸ்தானத்தில் இருந்து கொண்டு பக்தர்களை எடுத்திருக்கும் விதம், நம்பும்படியாக இல்லை. இவ்வளவு உரிமை யாருக்கு இருக்கிறது? மறைத்து வைத்தும் எடுத்திருக்க நியாயமில்லை. கேமிரா கைக்கு மேல் உயரத்தில் இருப்பதாகக் கோணம் சொல்கிறது! இது திருப்பதி என்று தலைப்பிடப்பட்டு உன் கூண்டு (YouTube)-ல் வலம் வருகிறது. பலர் ஆச்சர்யப்பட்டுப்போய் கேள்வி கேட்டுள்ளனர். தெரிந்தவர் விளக்கவும்!

15 பின்னூட்டங்கள்:

Anonymous 8/10/2007 01:04:00 AM

Could this be New Jersey PerumAL?

நா.கண்ணன் 8/10/2007 07:57:00 AM

You mean Bridge waters? Possible, but the video is in black & white, an older shot? may be?

துளசி கோபால் 8/10/2007 08:14:00 AM

சாத்தியதையை விடுங்க. இன்னிக்கு உங்க தயவால் இச்சேவை சாதிச்சது எங்கள் பாக்கியம்.
இன்னிக்கு ஆடி வெள்ளிக்கிழமை.

குமரன் (Kumaran) 8/10/2007 08:34:00 AM

Kannan Sir. I think it is from an old movie.

நா.கண்ணன் 8/10/2007 08:56:00 AM

துளசி: பெருமாள் எப்படி slim-ஆ, handsome-ஆ இருக்கார்! அச்சோ! என் அழகியவா! என்று சொல்கிறார் போல!

kannabiran, RAVI SHANKAR (KRS) 8/10/2007 09:01:00 AM

பெருமாளை அனுபவிக்கணும், ஆராயக் கூடாது - அப்பிடின்னு சொல்லலாமா? :-))))
மிக அழகான காட்சி கண்ணன் சார்!

குழல் அழகன், வாய் அழகன், எழு கமலப் பூவழகன்....அச்சோ என அழகியவா...என்னுடைய அழகியவா!
இஞ்சி இடுப்பழகா
மஞ்ச சிவப்பழகா
கள்ளச் சிரிப்பழகா
மறக்க மனம் கூடுதில்லையே!!!

ஜீவா (Jeeva Venkataraman) 8/10/2007 09:02:00 AM

பார்த்தால் பழைய படம் ஒன்றின் செட் போலத் தெரிகிறது. செட் ஆக இருந்தால் என்ன, எங்கும் இருப்பான் எம் கோவிந்தன்!

நா.கண்ணன் 8/10/2007 09:15:00 AM

கண்ணபிரான்: கொஞ்சம் ஆராய்ச்சிக்கு வருவோம் :-) நீர்தானே வேங்கடவன் எக்ஸ்பெர்ட். என்ன சொல்லறீங்க? எனக்கும் இது சினிமாப்பட செட்டோன்னு ஒரு சம்சயம். போனா போகட்டும், ரொம்ப அழகா இருக்கார். அது நிச்சயம்.

kannabiran, RAVI SHANKAR (KRS) 8/10/2007 09:42:00 AM

பெரும்பாலும் பல பழைய தமிழ் தெலுங்குப் படங்களில் இது போல் செட் போட்டு, காட்சி எடுப்பார்கள் கண்ணன் சார். கருப்பு வெள்ளை என்பதால் பழைய படமாக இருக்கலாம்!
அன்னமய்யா படத்தில் இதே போல் திருமஞ்சனக் காட்சி கலரில் வரும்!

பெருமாளை நல்லா உத்துக் கவனிச்சா, திருமலை இல்லை என்பது கொஞ்சமா தெளீவாகும்!

மார்பில் ஸ்வர்ணலக்ஷ்மி பதக்கம் மட்டும் தான் இருக்கிறது! அலர்மேல்மங்கை என்னும் பூமிதேவியும், மகால்க்ஷ்மி என்னும் ஸ்ரீதேவியும் மிஸ்ஸிங்! :-)

பெருமாளை விட்டு நொடிப் பொழுதும் நீங்காத மகரகண்டி, லக்ஷ்மீ ஹாரம் இல்லை. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கருடசேவையில் இருக்கும் உற்சவருக்கு இவை அணிவிக்கப் படுகின்றன.

பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்விப்பவர் என்றுமே நைச்சிக பிரம்மச்சாரி தான்! தலைப்பாகையோடு சேர்ந்த வாய்த்துணியும் கட்டிக் கொண்டு தான் அபிஷேகம் செய்வார்கள்.

பெருமாளின் காலடியில் என்றும் இருக்கும் போக ஸ்ரீநிவாசர் என்னும் குட்டி பஞ்சலோக மூர்த்தியும் மிஸ்ஸிங். இவருக்கும் மூலபேரத்துக்கும் இடையேயான தங்கக் கயிறு/பட்டுக் கயிறு மந்திரப் பூர்வமாக எப்போதும் கட்டப்பட்டு இருக்கும்!

ஆக கேமிராவை மறைத்து வைத்து எடுத்திருக்கவும் முடியாது. ஆலயத்திலும் இப்படி அனுமதி தந்திருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது!

எது எப்படியோ, சினிமாவாய் இருந்தாலும், சிரிப்பழகன் சிரிப்பழகன் தானே! :-)

நா.கண்ணன் 8/10/2007 09:49:00 AM

கண்ணபிரான்: இதுக்குத்தான் கேட்டது. இந்த விவரமெல்லாம் உங்ககிட்டதான் உண்டு. வாழ்க.

வடுவூர் குமார் 8/10/2007 10:30:00 AM

வீடியோ இங்கு/இப்போது பார்க்கமுடியாது.
யாரப்பா இது?! இஞ்சி இடுப்பழகா என்கிறார்,தங்கக்கயிறு இல்லை என்கிறார்.
ரசிக்க ஒரு அளவு இல்லை? :-))

நா.கண்ணன் 8/10/2007 10:34:00 AM

ஐயோ! குமார்! வம்புல மாட்டிக்கிறீங்க. பரகால நாயகி, பாராங்குச நாயகி, நாச்சியார் இவங்க பாசுரங்களை எடுத்துவிட்டு கலக்கிடுவாரு! ஜாக்கிரதை :-)

வடுவூர் குமார் 8/10/2007 04:20:00 PM

நா.கண்ணன்
எல்லாவற்றையும் இவரே அனுபவித்து எழுதிவிட்டால் நாம் ரசித்ததை எங்கே சொல்வது? :-))
தாலாட்டின் மூலமே பலவற்றை கற்றவர் என்று தெரியுமே!!!
தமிழ் வலைப்பதிவுகளிலே புக் மார்க் செய்ய வேண்டியவர்களில் ஒருவர்,அவர்.

kannabiran, RAVI SHANKAR (KRS) 8/11/2007 10:16:00 AM

// வடுவூர் குமார் said...
இஞ்சி இடுப்பழகா என்கிறார்,
தங்கக்கயிறு இல்லை என்கிறார்.
ரசிக்க ஒரு அளவு இல்லை? :-))
//

குமார் சார்...சிரிச்சிட்டேன் போங்க!
நான் எப்பமே இப்பிடித் தான் சினிமாப் பாட்ட எல்லாம் நைசா பெருமாள் மேலே ஏத்திடுவேன் :-)

//எல்லாவற்றையும் இவரே அனுபவித்து எழுதிவிட்டால் நாம் ரசித்ததை எங்கே சொல்வது? :-))//

அதானே...அடியவருக்குத் தான் மொதலிடம்...நீங்க ரசிச்சதை சொல்லுங்க சார்!

இன்னொன்னு தெரியுமா...
பெருமாளை நான் சைட் அடிப்பது எல்லாம் சும்மா தான்!
அடியார்களைப் பாத்து விட்டா, பெருமாளே bye for now ன்னு சொல்லிட்டு அவங்களோட ஓடிடுவேன்! :-)))

குமார் சார்...நீங்க சொல்றது எல்லாம் ரொம்ப பெரிய வார்த்தைகள்...நான் எப்பமே அடியேன் தான்! உங்க அன்புக்கு மிக்க நன்றி.

Sathia 8/13/2007 10:45:00 PM

முதல்ல வீடியோ போட்ட கண்ணன் நன்றி,
விவரமா கூறின கண்ணபிரானுக்கும் நன்றி ;-)