பறவைக்கிரங்கல்


உலகம் எவ்வளவு மாறி வருகிறது. அலெக்ஸ் எனும் பேசும் பறவை இறந்துவிட்டது என்று சி.பி.எஸ் நியூஸ் இரங்கல் செய்தி வெளியிடுகிறது! இப்பேசும் பறவை பற்றிய சின்ன ஆவணப்படம் இருக்கிறது!

உலகில் அதிசயப்பட எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. அறிவு என்பது மனிதனுக்கு மட்டும் எனும் மமதை என்று ஒழிகிறதோ அன்று அடக்கமும், அன்பும் பீரிட்டு எழும். இப்பறவை பேசுகிறது, கணக்குப் போடுகிறது, கல்லா? மரமா என்று உணர்ந்து சொல்கிறது! கொரியத் தொலைக்காட்சியில் ஒரு நாய் குட்டி ஒற்றை ரூபாய்க்கும், நூறு ரூபாய்க்கும் வித்தியாசம் காட்டியதைக் கண்டு அதிசயத்தேன். இவையெல்லாம் எப்படி சாத்தியப்படுகிறது? அறிவே மயமான ஒன்று உள்ளே இருந்து கொண்டு செயல்படுவதால்தான். பாகவதம் சொல்லிய சுகமுனி கூட ஒரு கிளி தான். வாழ்க!

6 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 9/13/2007 04:07:00 PM

ஆவணப் படம் பார்க்கலாம் என்றால்...
"Sorry, the page you requested was not found." இது தான் வருகிறது.

நா.கண்ணன் 9/13/2007 04:21:00 PM

குமார்: சரி செய்து விட்டேன். யாகூ இன்னும் வீடியோ தொழில் நுட்பத்தில் பின்தங்கியுள்ளது. கூகுள் போல் எம்பெட் செய்ய முடியவில்லை. இப்போது கூட தட்டி விட்டுக் காத்திருந்தால் ஒன்றும் நடக்காது. ப்ளே பொத்தானை அமுக்க வேண்டியிருக்கிறது!

செந்தழல் ரவி 9/13/2007 04:28:00 PM

வணக்கம் நா.கண்ணன்...

நேற்று மதியம் லஞ்ச் முடித்து வரும்போது பறக்க முடியாத ஒரு சின்னப்பறவை சுவற்றில் மோதி விழுந்தது...

அதை கொஞ்ச நேரம் கையில் வைத்திருந்தபோது நிறைய உணர்ச்சிகள்..

பிறகு கொஞ்சம் காபி கொடுத்தேன்...தெம்பாகி பிறகு பறந்தது...

:)))))))))))

- சோல்ல தான் இருக்கேன்...தோக்ஸன்ல...

நா.கண்ணன் 9/13/2007 05:22:00 PM

வாங்க ரவி: எனக்கு பறவைகளிடம் பரிச்சயம் கிடையாது. கிளி ரொம்பப் பிடிக்கும். ஆனால் நறுக்கென்று கடித்துவிடும். அதனால் பயம். சில பேர் முதலை வாயில் கூடத் தலையை விடுகிறார்கள். எப்படித்தான் முடிகிறதோ? பாம்பு என்றாலும் பயம். புலிக்குட்டியுடன் விளையாட வேண்டுமென்று ஆசை! ஆனால், நடைமுறையில் நாயுடன் மட்டும்தான் பரிட்சயம் (அதுவும் பழக்கப்படுத்திய நாய்களுடன்தான் :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) 9/13/2007 07:19:00 PM

நானும் மிருகங்கள் பற்றிய விபரணப்படங்கள் விரும்பிப் பார்ப்பேன்; இந்த அலெக்ஸ் ஐயும் பார்த்துள்ளேன். இதில் தெய்வீகம் உள்ளதோ என்னவோ தெரியாது; ஆனால் பழக்கம் படுத்தி
வசப்படுத்தலாம்.சர்க்கஸ் கொம்பனிகள் இதைத் தானே செய்கின்றன.
அடுத்து ஆயிரத்தில் ஒன்று இப்படி அதீத உணர்வுடன் உள்ளது...
என் சிறு வயதில் உறவினர் வீட்டு நாய்,சாப்பாட்டுக்கு தன் தட்டைத் தூக்கி வருவதைக் கண்டுள்ளேன்.

நா.கண்ணன் 9/13/2007 07:34:00 PM

வாங்க யோகன், நலமா?

நம்மவர் சொல்லும் கோட்பாடு ஏற்புடையதாகவே உள்ளது. இக்கிளி போன ஜென்மத்தில் கணக்கு வாத்தியாராக இருந்திருக்கும் (அப்பாடா! என்னைக் கிள்ளி இம்சைப் படுத்திய கணக்கு வாத்தியாருக்கு ஒரு வழி கண்டுபிடிச்சாச்சு!)