ஜப்பான் விஜயம்

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் சென்ற வாரம் ஒரு கருத்தரங்கிற்காக ஜப்பான் சென்றிருந்தேன். அக்கருத்தரங்கில் பேச ஜப்பானிய இளவரசர் வந்திருந்தார். கீழே வீடியோ காண்க.ஒரு நாட்டில் சில வருடங்கள் வாழ்ந்து விட்டால் பின் அது நம் சரிதமாகிவிடுகிறது. தன்னையறியாமல் ஒரு பிடிப்பு! தோக்கியோவின் கின்சா, அசாகுசா, மெய்ஜி பூங்கா என்று சுற்றும் போதெல்லாம் நெகிழ்வாக இருந்தது. தாய் வீட்டிற்கு வருவது போல். கருத்தரங்கம் மிகப் பிரம்மாண்டமாக நடந்தது (அரசு அழைப்பு என்றால் சும்மாவா?) அந்த விருந்தில் எதிர்பாராத விதமாக 'விருந்தின் நாயகன்' என்ற பட்டம் எனக்கு சூட்டப்பட்டது. என்ன விஷயமென்றால் அக்கா கொடுத்த பைஜாமா, குர்தாவைப் போட்டுக் கொண்டு பளிச்சென்று இருந்தேன். அதுதான்! ஷாருகான் என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டார்கள் :-)

7 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 9/14/2007 05:57:00 PM

நல்ல வேளை விடியோவை கூகிளில் போட்டீர்கள் பார்க்க முடிந்தது.
ஷாருக்கானுக்கு இவ்வளவு வழுக்கை விழுந்துவிட்டதா? சமீபத்தில் பார்க்கவில்லை. :-)
உங்க அக்கா செலக்ஷன் நல்லா இருக்கு.

நா.கண்ணன் 9/14/2007 06:16:00 PM

முழு மொட்டை மேல் எனக்கொரு மோகமுண்டு. விரைவில் அந்த ஆசை நிறைவேறிவிடும் போல் தோன்றுகிறது :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) 9/14/2007 08:10:00 PM

அண்ணா!
நலமே!! அட நம்ம உடை போட்டுப் போய் ஒருகலக்குக் கலக்கிவிட்டீர்கள்.
இந்த இளவரசருக்குத் தானே நெடுநாள் குழந்தையின்றி ஒரு பெண் குழந்தை கிடைத்தது.

நா.கண்ணன் 9/14/2007 08:38:00 PM

யோகன் நலமா? முதலில் பளிச்சென்று போகக் கூச்சமாக இருந்தது. தேசிய உடைகளில் வருவதுதான் குறைந்து வருகிறதே. எல்லோரையும் ஒரு ஜீனுக்குள் தள்ளிவிட்டதே அமெரிக்க நாகரீகம். சும்மா ஒரு தேசிய நிர்ணயம் பண்ண அப்படிப் போனேன். அது என்னடாவென்றால் என்னைத் தூக்கி மேடைக்கு அனுப்பி விட்டனர். அங்கு இந்தியா பற்றி உயர்வாகப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது!

Anonymous 9/17/2007 06:52:00 PM

Kannan - you have not been writing much about your family - wife or children - how your family are managing the cultural issues while living in those countries (Japan, Germany, Korea..) and how your family is taking these cultural situations (while we all know how you have been taking these situations positively in all these countries)

நா.கண்ணன் 9/17/2007 10:17:00 PM

யோவ் அனானி! நீர் மட்டும் யார் என்று காட்டிக் கொள்ள மாட்டீர், ஆனால் என் குடும்பத்தைப் பற்றி உமக்குச் சொல்ல வேண்டும்! ரொம்ப யோக்கியம் இது? இது எனது பெர்சனல் டைரி. இங்கு என் பேச்சுதான் இருக்கும்!!

தருமி 9/18/2007 12:43:00 AM

ம்ம்...ம்...