வேலியே பயிரை மேய்தல்

பள்ளியில் சிறார்களின் பாதுகாப்பு பற்றி நிறையப் பேச வேண்டியுள்ளது. விரிவாக எழுத நேரமில்லை. அமெரிக்காவில் பல விஷயங்கள் பட்டவர்த்தனப்படுகின்றன. அங்கு கூட பள்ளியில் நடைபெறும் பாலியல் வன்முறை பற்றி அதிகம் பேசுவதில்லை என்று கீழேயுள்ள சேதி சொல்கிறது. அங்கேயே அப்படியென்றால் இந்தியாவில் சொல்ல வேண்டியதில்லை. பள்ளியில் பல வகையான வன்முறைகளுண்டு. மாணவர்களுள் பலசாலி, நோஞ்சானைப் படுத்தும் வன்முறை, ஆசிரியர் மாணவர்களிடம் காட்டும் வன்முறை (அடிச்சுத் திருத்துங்க சார்!), பெரிய மாணவன் சின்னவனை பாலியல் இச்சைக்கு உட்படுத்துதல், ஆசிரியர் மாணவர்களிடம் பாலியல் உறவு கொள்ளுதல்..இது போன்று. ஆணுக்கு ஆண், பெண்ணிற்குப் பெண், மாற்றுப் பால் வன்முறைகள் என்று பலவுண்டு. இது பற்றியெல்லாம் பேச கீழுள்ள கட்டுரை நம்மைத் தூண்டுகிறது!

Sexual misconduct plagues US schools

2 பின்னூட்டங்கள்:

cheena (சீனா) 10/22/2007 12:56:00 AM

அமெரிக்கப் பள்ளிகளில் நடக்கும் எல்லாம் இந்தியப் பள்ளிகளில் நடப்பதில்லை. பதிவர் கூறும்

//பள்ளியில் பல வகையான வன்முறைகளுண்டு. மாணவர்களுள் பலசாலி, நோஞ்சானைப் படுத்தும் வன்முறை, ஆசிரியர் மாணவர்களிடம் காட்டும் வன்முறை (அடிச்சுத் திருத்துங்க சார்!), பெரிய மாணவன் சின்னவனை பாலியல் இச்சைக்கு உட்படுத்துதல், ஆசிரியர் மாணவர்களிடம் பாலியல் உறவு கொள்ளுதல்..இது போன்று. ஆணுக்கு ஆண், பெண்ணிற்குப் பெண், மாற்றுப் பால் வன்முறைகள் என்று பலவுண்டு. //

இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை. இந்தியப் பள்ளிகளில் இவை எல்லாம் நடப்பதே இல்லை. மாணவர்களிடையே பாலியல் இச்சை - ஆசிரியர் மாணவர்களிடம் பாலியல் உறவு - ஆணுக்கு ஆண் - பெண்ணுக்கு பெண் = இதெல்லாம் அமெரிக்காவிலா அல்லது இந்தியாவிலா ??

பதிவர் நடவாத ஒன்றை Hypothetical question ஆகக் கேட்கிறார்

நா.கண்ணன் 10/22/2007 08:02:00 AM

இந்தியப் பள்ளிகளில் நடப்பதே இல்லை என்று எப்படி சர்வ நிச்சயமாகக் கூற முடியும்? அமெரிக்காவிலேயே பிள்ளைகள், பெற்றோர்கள் புகார் செய்வதில்லை எனும் போது மான, அவமானம் பார்க்கும் இந்தியச் சூழலில் அதை நாம் எப்படி எதிர்பார்க்கமுடியும்? செய்தி வெளிவரவில்லை என்பதால் நடக்கவில்லை எனத் தீர்மானிக்க முடியாதல்லவா? ஏன் இப்படி யோசிக்க வேண்டும்? 1) அரசல், புரசலாக வரும் சேதிகள் கேட்டிருக்கிறேன், 2) ஆண்கள் ஹாஸ்டலில் பாலியல் வன்முறை உண்டு, 3) அமெரிக்காவிலும் சரி, இந்தியாவிலும் சரி வாழ்வது மனிதர்களே. நாம் மனிதர்கள் பொது இயல்பு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். நன்றி.