ஆங்கிலம் பேசுங்கள்! தவறில்லாமல்....

ஆங்கிலம் என்பது மற்ற மொழிகள் போல் அழகானது, வளமானது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் அதுவொரு உலக மொழி எனும் நிலையை அடைந்துள்ளது. இதனால் ஆங்கிலம் அறிந்த இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு எளிதாகக் கிடைக்கிறது. ஆனால் ஆங்கிலக் கல்வி என்பது இந்தியாவில் இன்னும் சீராக முறைப்படுத்தப்படவில்லை. அதனால் ஆங்கிலம் தெரியும் என்ற தைர்யத்தில் வெளிநாடு வரும் பலர் சில ஆண்டுகளில் ததிகினதோம் ஆடுகின்றனர். அதுவும் சமகாலத் தமிழர்களுக்கு சீரானத் தமிழ் அறிவும் இல்லை, ஆங்கில அறிவுமில்லை. சமீபத்தில் என் ஆய்வகத்திற்கு பயிற்சிக்காக வந்திருந்த ஒருவர் பேசிய தமிழ் வருத்தமளித்தது. ஒரு உதட்டள்ளவு தமிழ், உதட்டளவு ஆங்கிலம் என்று இருக்கிறது. 'பில்லையார் எனக்குப் பிடிக்கும்' 'தமில் வரும், ஆனா..' என்பது போல். கேட்டால் தமிழ்ப் பற்று அதிகம் உண்டு என்கிறார். பற்று வைத்து என்ன பயன்? பயில வேண்டாமா?

நம் தமிழருக்கு ஒரே ஒரு வார்த்தை:

தமிழ்ப் பேச வேண்டுமென்று விரும்பினால் தமிழில் பேசுங்கள். அது கேவலமில்லை. தமிழும் ஆங்கிலம் போல் ஒரு மொழிதான்.

ஆங்கிலம் பேச வேண்டுமெனில், தெளிவாக ஆங்கிலம் பேசுங்கள். தமிழைக் கலக்காதீர்கள். ஒரு கலவை மொழியால் யாருக்கும் பிரயோசனமில்லை என்பது மட்டுமல்ல, உங்கள் எண்ணத்தைச் சீராக எந்தவொரு மொழியிலும் சொல்லத் தெரியாமல் போய்விடும். ஒரு நாகரீகத்திற்காக இப்படியொரு கலவை மொழியில் பேசப் போக, அதுவே பழக்கமாகிவிடும். நமது தொலைக்காட்சிப் பேட்டிகளில் 99% இப்படிக் கலவை மொழியிலேயே நடைபெறுகிறது. இது எவ்வளவு பெரிய நஷ்டம் என்பது நம்மவர் வெளிநாடு வரும் போது தெரிகிறது. இந்தியாவிலேயே இம்மொழிகளைத் தனித்தனியாகப் பேசி பயிற்சி பெறுங்கள்.

இந்தியன் என்று சொல்லிக் கொண்டு வெளிநாடு வந்து எல்லோருடனும் கலக்கும் போது இந்திப் பரீட்சியம் என்பது இன்றியமையாதது. முடிந்தால் இந்தி கற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம். இந்தியும், ஆங்கிலம் போல் ஒரு மொழிதான். கற்றுக் கொள்ளுங்கள். அப்போதும் இந்தியும், தமிழும் கலந்து பேசாதீர்கள்.

வாழ்க நற்றமிழர்.

13 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் 11/15/2007 12:08:00 PM

//இந்தியன் என்று சொல்லிக் கொண்டு வெளிநாடு வந்து எல்லோருடனும் கலக்கும் போது இந்திப் பரீட்சியம் என்பது இன்றியமையாதது. முடிந்தால் இந்தி கற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம். இந்தியும், ஆங்கிலம் போல் ஒரு மொழிதான். கற்றுக் கொள்ளுங்கள். அப்போதும் இந்தியும், தமிழும் கலந்து பேசாதீர்கள்.//

கண்ணன் ஐயா,

உங்களின் இக்கருத்துக்கு மறுமொழி எழுதினேன். நீளமாக இருப்பதால் தனிப்பதிவாக போட்டுவிட்டேன்.

வடுவூர் குமார் 11/15/2007 12:21:00 PM

இங்கு வந்து கடந்த 10 நாட்களாக பல தொலைக்காட்சி படைப்புகளை பார்க்கிறேன்.
தமிழ்-- நீங்கள் சொன்ன மாதிரி தான் பெரும்பாலும் இருக்கிறது.
தமிழ்நாட்டிலே இப்படியா?? என்று யோசிக்கவைக்கிறது.

N.Kannan 11/15/2007 01:19:00 PM

குமார்:

நீங்கள் அமெரிக்காவில்தானே இருக்கிறீர்கள்? ஆங்கிலம் எப்படிப் பேசப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியும். இந்த அரைகுறை ஆசாமிகளிடம் ஒரு 10 நிமிடம் சுத்த ஆங்கிலத்தில் பேசச் சொல்லுங்கள். திணறி விடுவார்கள். தமிழ் இல்லாமல் கருத்தைச் சொல்ல முடியாது. அப்ப, தமிழ் வேண்டித்தானே இருக்கிறது? அதை ஒழுங்காய்ப் பேசினால் என்ன குறைந்துவிடும்? இது என்ன உளவியல் என்றே புரியவில்லை!

N.Kannan 11/15/2007 01:34:00 PM

கண்ணன்:

பதில் அளித்துள்ளேன். நேரமின்மையால் இப்போதெல்லாம் விரிவாக எழுத முடிவதில்லை. அதனால் கருத்து பிறழ்வுபட வாய்ப்புண்டு. நம் தனித்தன்மைக்காக இன்றளவும் வடக்கத்தியர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு இருப்பவன். நமக்கு தமிழ் பற்று இருப்பதால்தான் சாவதற்குள் தமிழுக்கு உருப்படியாக எதையாவது செய்ய வேண்டுமென்று உழைத்துக் கொண்டு இருக்கிறோம்!

Anonymous 11/17/2007 02:53:00 PM

http://www.hindu.com/2007/11/08/stories/2007110857860100.htm

Anonymous 11/18/2007 01:55:00 AM

தமிழ் படிச்சு அல்லது வெட்டி தமிழ் உணர்வால் ஒரு மண்ணும் சாதிகக போவதில்லல்
கோழி கண்ணன் போல ஆளுங்க தமிழையே பிழையில்லாமல் எழுத தெரியாதவங்க :)))))

அவங்க சொல்வதை எல்லாம் கண்டு கொல்லாதீங்க

Sambar Vadai 11/19/2007 01:58:00 PM

Dr.Kannan,

You are invited.

http://sambarvadai.blogspot.com/2007/11/blog-post_16.html

thanks in advance

N.Kannan 11/19/2007 02:16:00 PM

அன்பின் சாம்பார்/வடை:

அழைப்பிற்கி நன்றி. இதற்கு முன் இந்த விளையாட்டில் கலந்து கொண்டதில்லை. என் சிபாரிசை எங்கு இட வேண்டும். என் பதிவிலா (இது சிறப்பு) அல்லது உங்கள் பதிவில் பின்னூட்டமாகவா?

Sambar Vadai 11/19/2007 08:16:00 PM

Dr.Kannan,

thanks. You post in your blog itself.
The key thing is - it should be recommendable to your children with your own reason for recommending to them. (ofcourse at an appropriate age for some of the films)

Bruno 11/19/2007 10:55:00 PM

My post on a related topic

http://bruno.penandscale.com/2006/01/importance-of-education.html

சீனு 11/20/2007 04:08:00 PM

//முடிந்தால் இந்தி கற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம். இந்தியும், ஆங்கிலம் போல் ஒரு மொழிதான். கற்றுக் கொள்ளுங்கள். அப்போதும் இந்தியும், தமிழும் கலந்து பேசாதீர்கள்.//

:)

FYI...உலகெங்கிலும் பேசப்படுவது broken english தானே தவிற spoken english இல்லை.

N.Kannan 11/20/2007 04:15:00 PM

FYI...உலகெங்கிலும் பேசப்படுவது broken english தானே தவிற spoken english இல்லை.//

மனிதனுக்கு மொழி மீறியப் புரிதல் இருப்பதால் அரைகுறை ஆங்கிலத்தில் வாழ்ந்துவிட முடிகிறது. தமிழ்த் தெரியாமலே தமிழகத்தில் வாழ்ந்துவிடவும் முடிகிறது. ஆயின் ஒரு மொழியைத் தவறில்லாமல் எழுதிப் பேசும் போது கிடைக்கும் திருப்தி என்று ஒன்று இருக்கிறதே. மற்றவர் பின்னால் சிரிக்கும் வண்ணம் ஏன் நாம் பேசவேண்டும்?

இந்தியா ஆங்கிலம் கொஞ்சம் அறிந்த நாடு. அது ஆங்கிலம் பேசும் நாடல்ல. மொழித் திறமையை வளர்த்துக் கொண்டால் ஒழிய!

Sivakumar 1/08/2008 04:19:00 PM

//ஆங்கிலம் பேச வேண்டுமெனில், தெளிவாக ஆங்கிலம் பேசுங்கள். தமிழைக் கலக்காதீர்கள். ஒரு கலவை மொழியால் யாருக்கும் பிரயோசனமில்லை என்பது மட்டுமல்ல, உங்கள் எண்ணத்தைச் சீராக எந்தவொரு மொழியிலும் சொல்லத் தெரியாமல் போய்விடும்.///

Well said Mr Kannan,
When speaking in a language speak the full sentence atleast in that language... just because of loss of words we switch or rather mix languages. One of the reasons I see is language is not just meaning of words its a part of life style. Thats why we have different dialects even inside a state of same language(many dialects in tamil). You are invited to my blog to read my view on this.