ஒன்பது ரூபாய் நோட்டு - படம்

நண்பர் மலைநாடன் இரண்டு படங்கள் சிபாரிசு செய்து மாதமாகிறது. இப்போதுதான் பார்க்க முடிந்தது. இரண்டாவது படம் ஒன்பது ரூபாய் நோட்டு.

தங்கர்பாச்சான் தேர்ந்த சிற்பியின் நுணுக்கத்துடன் படத்தை செதுக்கி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் அற்புதம். 100% மண்ணின் மணம் வீசும் படம். இப்படியெல்லாம் கூட நிறைவான படங்களை நம்மால் எடுக்கமுடிகிறது!

பெரியாருக்குப் பிறகு சத்யராஜுக்கு இன்னொரு நிறைவான படம். எந்த சவுடாலும் இல்லாமல் அடக்கமாக நடித்திருக்கிறார் (ஆனாலும் ஒரு பிரேமில் பின்னால் எம்.ஜி.ஆர் படம் இருக்கிறது :-) அர்ச்சனா எங்கோ போய் விட்டார் நடிப்பில். கோபம் வருகிறது பாருங்கள் அவருக்கு. நாம வேட்டியை மடக்குவது போல் ஒரு ஆக்ரோஷத்தோடு முடியை சுருட்டுகிறாரே பார்ப்போம். கும்மென்று தமிழ் மணம்!!வைரமுத்துவின் ஒரு பாடல் நிறைவாக நிற்கிறது. இசை அருமை.

நிறைவான படம். நம் சந்ததியினருக்கு சிபாரிசு செய்ய வேண்டிய படம்!

4 பின்னூட்டங்கள்:

வசந்தன்(Vasanthan) 1/20/2008 06:38:00 PM

அர்ச்சனாவின் அழுகையைக் குறைசொல்லாத முதலாவது விமர்சனம் (நானறிந்த வரையில்) உங்களுடையதுதான். எனது கருத்தும் அதுவே.
தங்கர் எதிர்கொள்ளும் ஒரேயொரு விமர்சனமும் அர்ச்சனாவின் அழுகை தொடர்பானதுதான். தங்கருக்கு உச்சக்கட்டமாக கோபம் வரவழைத்துக்கொண்டிருக்கிறது இந்த 'அழுகை' விமர்சனம். அவர் கோபத்தில் நியாயமிருப்பதாகவே நான் நினைக்கிறேன்.


இடுகைக்கு நன்றி.

N.Kannan 1/20/2008 07:12:00 PM

அதை எப்படிக் குறை சொல்ல முடியும்? அவருக்குக் கிடைத்த நல்ல வாய்ப்புகளெல்லாம் அவர் கோபப்படும் போதுதான். கிராமப்புரங்களில் கோபப்படும் பெண்கள், அழுவர், கத்துவர், கூச்சலிடுவர். அவர் சாமி முன் ஒரு முறைப்பாடு வைக்கிறாரே! அடடா! தத்ரூபம். கிராமப்புரத்தில் கடவுளரும் அப்படி, இப்படி நடமாடும் "ஆ"சாமிகள் தான் :-) அர்ச்சனா அருமையாகச் செய்திருக்கிறார். தங்கர்பச்சான் கிராமத்தின் நெளிவு சுளிவு தெரிந்தவர் என்பது படம் முழுவதும் விரவிக்கிடக்கிறது!

பிரபு ராஜதுரை 1/20/2008 08:28:00 PM

தங்கள் விமர்சனத்தை நம்பி பார்க்கப் போகிறேன்...தங்கர்பச்சானை பாராட்டி இப்பொழுதுதான் ஒரு பதிவு பார்க்கிறேன்.

N.Kannan 1/20/2008 08:33:00 PM

ஐயையோ! இது என்ன வம்பாப் போச்சு! உங்களுக்குக் கிராமத்துக் கதையெல்லாம் பிடிக்கும்தானே!! ஈஸ்வரா! இவருக்குப் பிடிக்க வேண்டுமே!!