கலக்கல் இசைஇதைக் கேட்டு விட்டீர்களோ?

தமிழும் வடமொழியும் கலப்பது மணிப்பிரவாளம். தமிழும் ஆங்கிலமும் கலப்பது 'கலக்கல்'. உண்மையில் மிகவும் மெனக்கெட்டு இவ்விசை உருவாகியிருப்பது தெரிகிறது. பல இடங்களில் கிச்சு, கிச்சு மூட்டுகிறது. பல இடங்களில் புருவத்தை உயர்த்த வைக்கிறது. இடையிடையே "சொல்றோம் இல்ல" போன்ற தூவல்கள், கடைசியில் எம்.ஆர்.ராதாவின் முத்தாய்ப்பு வசனம். நெத்தியடி சமாச்சாரம் என்னவெனில் இதுவொரு 'பக்தி இசை' !!

பெருமாளே! உன் லீலையை என்னவென்று சொல்வது? :-))

மிகவும் ரசித்தேன்!!

3 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 2/21/2008 08:46:00 AM

நன்றாக இருக்கு.

N.Kannan 2/21/2008 09:39:00 AM

குமார்: இதில் சிரிப்பு என்னவெனில் அடிக்கடி பெருமாள் படத்தைக் காட்டுவது :-)

நிமல்/NiMaL 2/23/2008 03:34:00 AM

ஏனென்றால் இது சொல்லிசை யுகம்... (எங்களை பொறுத்தவரை... ;)))

"புதிய பழைய உலகங்கள் மாற,
ஆங்கிலமும் தமிழும் கலாச்சாரங்கள் மோத,
கண்டுபிடிச்சேனடா இந்த Hip-Hop..."

இது Yogi B & Natchatra வின் வல்லவன் தொகுப்பில் இடம்பெற்ற ஒருபாடல்...!!