ஆகஸ்ட் ரஷ்

அனாதைச் சிறுவன் ஒருவன். அபரிதமான இசை ஞானம் குழந்தையிலேயே. காற்றினிலே வரும் கீதத்தை உணரும் திறன். வண்டின் ரீங்காரம், புல்லின் அசைவு, ஜன்னல் கதவு இழுக்கும் ஓசை..இவையெல்லாம் அவனுக்கு இசை வடிவாய் தெரிகின்றன. இப்பிள்ளை எப்படிப் பிறந்தான்? ஒரு குழுப்பாடகன். நல்ல குரல் வளம் உள்ளவன். ஒரு சாஸ்திரீய இசைக் கலைஞி. அவளுக்கும் இசையில் அதிக ஈடுபாடு உண்டு. இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்க நேரிட. கண்டதும் காதல். காதலுடன் கூடல். ஒரேயொரு கூடல். அவள் கர்பவதியாகிவிடுகிறாள். ஆனால் அவள் தந்தைக்கு இக்காதலில் இசைவில்லை. கருக்கலைக்க முடியவில்லை. குழைந்தை பிறந்தவுடன் தாயறியாமல் குழந்தையை அநாதை ஆசிரமத்திற்குக் கொடுத்துவிடுகிறார். தாய் குழந்தையைத் தேடி. காதலன் காதலியைத் தேடி. குழந்தை பெற்றோரைத் தேடி. இவர்களை இணைப்பது இசை. இறுதியில் இசையால் ஒன்று கூடுகின்றனர்.

என்ன 1945ம் வருடத்து தியாகராஜ பாகவதர் காலத்துக் கதை சொல்கிறேன் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை 2007-ல் வெளிவந்திருக்கும் ஹாலிவுட் படக்கதையிது. போனவாரம் பெரு தேசத்திற்குப் பயணப்பட்ட போது விமானத்தில் பார்த்தேன். எனக்கே நம்ப முடியவில்லை. ஒன்று கதைக்கரு நமது பாலிவுட், காலிவுட்டிலிருந்து போயிருக்க வேண்டும், இல்லை இதைக் காப்பியடித்து நம்மவர் இந்த வருடம் ஒரு படம் வெளியிடுவர். இரண்டில் ஒன்று நிச்சயம்.

நேற்று இரவு ஒரு ஹாலிவுட் வங்கித் திருட்டுப் படம் பார்க்கிறேன், "டைட்டில் சாங்" நம்ம ஏ.ஆர் ரகுமானின் 'தய தைய்ய, தைய்ய தையா!'

இப்பெல்லாம் ஒரே குழப்பமா இருக்கு ஹாலிவுட், பாலிவு, கோலிவுட் எல்லாம் சேர்ந்து ஒரே கலக்கலான்னா இருக்கு!


2 பின்னூட்டங்கள்:

வல்லிசிம்ஹன் 4/25/2008 07:54:00 PM

இசைக்காக ஒரு படம்.
அற்புதமாகத் தான் இருக்க வேண்டும். அதுவும் ராபின் வில்லியம்ஸ் இருக்கார் என்றால் உண்மையிலேயெ சிரமப்பட்டுத்தான் எடுத்திருப்பார்கள். நன்றி கண்ணன் சார்.

மஞ்சூர் ராசா 5/07/2008 10:31:00 PM

படத்தை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களின் பதிவு விரைவில் பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

பின்குறிப்பு: எல்லா நாட்டு இசைக்கலைஞர்களும் வேறு நாட்டின் இசையை எடுத்து தங்கள் இசையாக போட ஆரம்பித்துவிட்டார்கள் என்பது உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா?