Dr. Seuss' Horton Hears a Who!

இந்த வருடத்தின் மிகச் சிறந்த கார்ட்டூன் படமாக திகழப்போகிறது "ஹார்டன்" எனும் 20 நூற்றாண்டு நரியின் திரைப்படம்.

ஹார்ட்டன் என்பதொரு யானை. காட்டில் பாடம் சொல்லித்தரும் வாத்தியார். பாவம் ஈ, எறும்பிற்குக் கூட குந்தகம் நினைக்காத நல்ல ஜீவன். அது ஜாலியாகக் குளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு தூசு ப்றந்து வர அதிலிருந்து "உதவி" எனும் குரல் கேட்கிறது. யானைக்குத் தோன்றுகிறது அந்தச் சின்னத் துகளுக்குள் ஜீவன்கள் இருக்கலாம் என்று. எனவே அந்தத் துகளுடன் பேச முயல்கிறது. காட்டிலுள்ள மற்ற விலங்குகள் இதற்கு நட்டு கழண்டு விட்டது என்று கேலி செய்கின்றன. குறிப்பாக, கங்காரு ஒன்று யானையை மிரட்டுகிறது. இம்மாதிரி தூசுக்குள் யாரோ இருக்கிறார்கள் என்பது போன்ற அபத்தங்களை குழந்தைகளுக்குச் சொல்லித்தந்து கெடுக்கிறது யானை என்று.

யானை மீண்டும், மீண்டும் முயன்று தூசுக்குள் உள்ள மனிதர்களுடன் தொடர்பு கொண்டு விடுகிறது. அவர்களுக்கு தாங்கள் ஒரு தூசுக்குள் இருக்கிறோம் என்பதே தெரியாது இதுவரை. அவர்கள் உலகத்திற்கும் மேலே இன்னொரு உலகம் இருப்பதை நம்புவதற்கு முதலில் கஷ்டப்படுகின்றனர். மெல்ல, மெல்லக் கதை விரிகிறது. இப்படத்தின் முன்னோட்டம் பார்க்க கீழேயுள்ள படத்தைச் சொடுக்குக!டாக்டர் சூஸ் எழுதிய கதையிது. இவரின் பல கதைகள் பல கோடி புத்தகங்களாக விற்பனையாகி 17 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் கூட இருக்கலாம். இத்திரைப்படத்தைக் குடும்பத்தோடு போய் பாருங்கள்.

இப்படத்தை பார்த்தவுடன் டாக்டர் கார்ல் சாகன் நிகழ்த்திய ஒரு பேருரை நினைவிற்கு வந்தது. அதில் சூரிய மண்டலத்தின் கோடியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு படத்தைக் காட்டுவார். அங்கிருந்து பார்க்கும் போது பூமி ஒரு தூசு போல் தெரியும். இந்தத் தூசான உலகில்தான் அத்தனை சரித்திரமும், வன்முறையும், கொடுமைகளும், வாழ்வும் நடந்து கொண்டு இருக்கிறது. இதைக் கொஞ்சம் உணர்ந்தால் நமக்கு அடக்கம் என்பது தோன்றும் என்று முடிப்பார்.

4 பின்னூட்டங்கள்:

பிரேம்ஜி 4/28/2008 04:41:00 AM

நல்ல விமர்சனம். நானும் படம் பார்த்தேன். சுவாரஸ்யமான படம்.

N.Kannan 4/28/2008 07:54:00 AM

எங்கு பார்த்தீர்கள்? அமெரிக்காவிலா? இந்தியாவில் வெளிவந்துவிட்டதா? என்று தெரியவில்லை!

Srinivasan 5/01/2008 02:42:00 PM

yes sir
I also saw that with my son here in Perth.
Extraordinary insight.
The film stretches one's understanding in the proper perspective.
thanks for writing on that.
Good wishes and Regards,
srinivasan. v.

N.Kannan 5/01/2008 03:20:00 PM

நன்றி ஸ்ரீநிவாசன்!

குழந்தைகளுக்கு என்றாலும் பெரியவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய பாடமே இங்கு அதிகம். ஊரே எதிர்த்தாலும் தனது புரிதலுக்காக, தனது நண்பர்களுக்காக் தன் உயிரையே பணயம் வைக்கும் ஹோர்டன்.

ஓருலகிலிருந்து மற்றொரு உலகிற்கு செய்தி அனுப்பப்படும் பாடு. முதலில் அதைப் புரிந்து கொள்ளப்படும் பாடு..இப்படி எத்தனையோ நயங்கள் படம் முழுவதும்!