குட்டி மொட்டைகள்!

கிண்டர்கார்டன் குழந்தைகளுக்கு மொட்டையடித்து துறவி வாழ்வு என்பது எப்படியிருக்கும்? என்று காட்ட முயல்கிறது கொரியா! வித்தியாசமான அணுகுமுறைதான். இந்தப் படத்தைப் பாருங்கள்.குழந்தைக்களின் முதல் அதிசயம் தலைமுடியே இல்லாமல் மொட்டையாக இருப்பது. நம்மை நாமே பார்த்துக் கொள்ளும் போது மிகவும் வேடிக்கையாக இருக்கும் பொழுதுகள் இந்த மொட்டை அனுபவம். எனக்கு மொட்டையே அடித்ததில்லை. இப்போது ஆசையாக உள்ளது (எடுக்க என்ன உள்ளது என்று யாரோ பின்னாலிருந்து கேட்பது புரிகிறது!) இருந்தாலும் ஒரு ஆசை. அமெரிக்காவில் நிறைய ஆப்பிரிக்க ஆண்கள் மொட்டையடித்துக் கொள்வதை நளினமாக்கி வருகிறார்கள்.ஆனால் மொட்டைத் தலையைப் பாராமரிப்பது கடினமா? என்று தெரியவில்லை! இளமையாக இருக்கும் போது முடியைப் பறி கொடுக்க யாருக்கும் மனம் வராது! அதனால்தான் மொட்டை அடித்துக்கொள்ளுதலை ஒரு நேர்த்திக்கடனாக தமிழர்கள் எண்ணுகின்றனர் போலும்!

ஆச்சர்யம் என்னவென்றால் கிறிஸ்தவ வழிமுறையில் இப்படி மொட்டையடித்தல் கிடையாது. ஆனால் வேளாங்கன்னி ஆலயத்தில் நிறையப் பேர் முடி காணிக்கையளிப்பதை சமீபத்தில் பார்த்தேன். இதுவொரு மிகப்பழமையான இந்திய ஆன்மீக வெளிப்பாடு என்று தோன்றுகிறது. அது மெல்ல, மெல்ல ஆசியா முழுவதும் பரவியிருக்கிறது! தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் தினம் காலையில் மொட்டையடித்த புத்த சந்நியாசிகள் வருகிறார்கள். பொதுமக்கள் அவர்களை வணங்கி பிட்சை கொடுத்துவிட்டு ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறார்கள்.எப்படியும் மொட்டை என்பது சுவாரசியமாகத்தான் உள்ளது! இக்குழந்தைகளின் கள்ளமற்ற சிரிப்பே அதற்கு அத்தாட்சி!

20 பின்னூட்டங்கள்:

kannabiran, RAVI SHANKAR (KRS) 5/05/2008 01:07:00 PM

நட்சத்திர வாழ்த்துக்கள் கண்ணன் சார்!
மீ த பர்ஷ்ட்டு! :-)

கோவி.கண்ணன் 5/05/2008 01:07:00 PM

நடசத்திர வாழ்த்துகள் ஐயா !

kannabiran, RAVI SHANKAR (KRS) 5/05/2008 01:08:00 PM

மொத நட்சத்திரப் பதிவிலேயே மொட்டையடிக்கத் துவங்கியாச்சா? :-))
கோவிந்தா கோவிந்தா! :-))

நா.கண்ணன் 5/05/2008 01:14:00 PM

கண்ணன் பதிவிற்கு வேறு இரண்டு கண்ணன்கள் வாழ்த்தா? சபாஷ்!

எனக்கு நாள் ஆரம்பித்து பாதி ஓடிவிட்டது. எப்போதிலிருந்து தமிழ் மணத்தின் கணக்கு என்று தெரியவில்லை!

சரி, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுட வேண்டியதான் :-)

ஏதோ பெருமாளை வேண்டி, மொட்டையடிச்சு ஆரம்பிப்போம் என்று கொள்ள வேண்டியதுதானோ?

எனது துவக்கக் கட்டுரை இனிமேல்தான் வரும் :-)!

kannabiran, RAVI SHANKAR (KRS) 5/05/2008 01:17:00 PM

மொட்டை என்பது வியப்பான ஒரு நேர்த்திக் கடன் தான்!
நாட்டுப்புற மக்களிடம் அதிகமாகக் காணப்படும் இவ்வழக்கம், மற்ற சமூகங்களிலும் பரவி உள்ளது!

முருகனுக்கு மொட்டை,
பெருமாளுக்கு மொட்டை,
மாரியம்மனுக்கு மொட்டை,
நாட்டுப்புற தெய்வங்கள் ஐயனார், சுடலை மாடன் போன்றோருக்கு மொட்டை,
என்று தான் இவ்வழக்கம் பரவியிருக்கு!

வேளாங்கண்ணி மாதாவுக்கு மொட்டை போடுவது பல நாள் வழக்கம்! என் நட்சத்திர வாரப் பதிவில், மாரியம்மனும் மேரியம்மனும்- என்று இதைப் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்!

மற்ற தெய்வங்களான சிவபெருமான், அம்பாள், ஐயப்பன், பிள்ளையார் போன்றவர்களுக்கு இவ்வழக்கம் அவ்வளவாக இல்லை என்பதும் ஒரு கருத்து!

சமணமும் பெளத்தமும் மொட்டை விஷயத்தில் இன்னும் பரவலான வழக்கம் கொண்டவர்கள்!

kannabiran, RAVI SHANKAR (KRS) 5/05/2008 01:18:00 PM

//எப்போதிலிருந்து தமிழ் மணத்தின் கணக்கு என்று தெரியவில்லை!
//

US - Eastern Time!
(எப்படி எங்க நியூயார்க்-கின் பவரு? :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) 5/05/2008 01:19:00 PM

மொட்டை முருகனுக்கும் ஃபேமஸ் அல்லவா?

அரோகரா! அரகரோகரா! :-))

நா.கண்ணன் 5/05/2008 01:22:00 PM

கண்ணபிரான்!
>>>>
US - Eastern Time!
(எப்படி எங்க நியூயார்க்-கின் பவரு?
>>>>

உங்களுக்கு இன்னும் 4ம் தேதிதானே! இந்திய நேரக்கணக்கோ?

SP.VR. SUBBIAH 5/05/2008 01:23:00 PM

இரண்டு கண்ணன்கள் வாழ்த்தா என்று சந்தோசப்ப்ட்டுள்ளீர்கள்.

இதோ ஒரு சுப்பிரமணியத்தின் வாழ்த்து!
(என் இயற்பெயர் சுப்பிரமணியன்)

நட்சத்திரவாரம் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே!

அன்புடன்
SP.VR.சுப்பையா

kannabiran, RAVI SHANKAR (KRS) 5/05/2008 01:25:00 PM

அப்பறம் கேன்சரில் அவதிப்படும் குழந்தைகளுக்காக மொட்டை அடிக்கும் Corporate Event எங்கள் வங்கியில் உண்டு!

St Patricks Day-வை சும்மா St Baldricks Day-ன்னு மாற்றி, மொட்டை அடிக்கும் வைபவம் வைத்து நிதி திரட்டுவார்கள்! முடி ஏலம் போகும்!

ஒரு முறை திருமலைக்கு வேண்டிக் கொண்டு, ரொம்ப நாள் ஆகி விடவே, இங்கேயே குழந்தைகள் உதவிக்கு மொட்டை அடித்துக் கொண்டு அனுபவமும் உண்டு!

திருமலை எம்பெருமானுக்கு எங்கு நேர்த்தி செய்தாலும், அவனை நினைத்துச் செய்தால் உகப்பு தான் அல்லவா? "எங்கும்" திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய் தானே? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) 5/05/2008 01:27:00 PM

//உங்களுக்கு இன்னும் 4ம் தேதிதானே! இந்திய நேரக்கணக்கோ?//

இல்லை இப்போ 5ஆம் தேதி! நள்ளிரவு 00:26 hours! :-)

உங்களுக்காகத் தான் முழிச்சிக்கிட்டு இருந்தேன்! ட்ரீட் கொடுங்க! :-))

நா.கண்ணன் 5/05/2008 01:28:00 PM

>>
(என் இயற்பெயர் சுப்பிரமணியன்)
>>

மால் மருகா! ஷண்முகா!! முருகா! குகா!

நா.கண்ணன் 5/05/2008 01:32:00 PM

//உங்களுக்காகத் தான் முழிச்சிக்கிட்டு இருந்தேன்! ட்ரீட் கொடுங்க! :-))//

அடடா! மிக்க மகிழ்ச்சி! உண்மையிலேயே எப்படி ஆரம்பிக்கப் போகிறதோ என்றொரு கவலை! கண்ணனும், விஜயனும் இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம் என்றொரு சொலவடையுண்டு. கண்விழித்திருந்து வாழ்த்திவிட்டீர்கள்! நன்றி! நன்றி!!

ஒரிஜினல் "மனிதன்" 5/05/2008 01:33:00 PM

மனித குலத்தின் மாமேதை வாழ்க.

நா.கண்ணன் 5/05/2008 01:37:00 PM

//
மனித குலத்தின் மாமேதை வாழ்க
//

அந்தக் குழந்தைகளைத்தானே! Child is the father of man என்பதொரு ஆங்கிலக்கவி வாக்கு :-)

சதங்கா (Sathanga) 5/05/2008 01:40:00 PM

நட்சத்திர வாழ்த்துக்கள் !!!! நல்ல பதிவுகளாகக் கொடுத்து சிறப்புறவும் வாழ்த்துக்கள்.

ramachandranusha(உஷா) 5/05/2008 02:44:00 PM

கண்ணன் சார், உங்க உள்ளத்தில் இருக்கும் திருபாற்கடலானைப் பற்றி எழுதுவீங்க, அதில் சந்தேகமில்லை. அப்படியே நீங்க ஆராய்ச்சி செய்யும் கடலைப் பற்றியும் எழுதுங்களேன்

நா.கண்ணன் 5/05/2008 04:21:00 PM

உஷா! நலமா? அறிவியல் எழுதுவது கடினம். அதிக கவனமும் தேவை. வேலைகளுக்கு நடுவே வலைப்பதிவு ஒரு சுமைகல். கொஞ்சம் பாரத்தை இறக்கி வைத்து ஜாலியாக இருக்குமிடம்! முழு அறிவியல் என்று எழுதாமல், பெரு தேசத்தில் கலந்து கொண்ட உயர் மட்டக் கூட்டத்தில் அலசப் பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

மஞ்சூர் ராசா 5/07/2008 10:16:00 PM

கொஞ்சம் தாமதமாக வந்திருக்கிறேன்.

வாழ்த்துகள் நண்பரே

மொட்டை அடிப்பதை கேலி செய்வது போய் சமீபக்காலமாக அது புதிய பாணியாக மாறிவிட்டது. பெண்களும் மொட்டையடிக்க ஆரம்பித்துள்ளார்கள். (அழகாகவும் இருக்கிறது என்பது வேறு விஷயம்)

நா.கண்ணன் 5/07/2008 10:22:00 PM

வாங்க மஞ்சூர். தாமதமானாலென்ன! வந்துட்டீங்களே! அதுதான் முக்கியம்.

கண்ணுக்கு மை அழகு!
பெண்ணிற்கு மொட்டை அழகு!

கொன்னுடுவாங்க! ஆனா, மாட்ரிக்ஸ் படத்து கதாநாயகி முடி இல்லாமல் அழகாகவே இருக்கிறாள். என்ன? பழக வேண்டும்! முன்பெல்லாம் திருப்பதி மொட்டைகளைக் கேலியாகப் பார்ப்பதுண்டு. ஆனால் அவர்கள் conviction-ஐ கிண்டல் செய்ய எனக்கென்ன உரிமை? அதில் அழகைக் காணக் கற்றுக் கொள்ள வேண்டும்!