மூர்த்தியும் கீர்த்தியும்!

தமிழில் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது! என்பார்கள். உண்மைதானே! உருவத்தில் சிறிதாக வாமனன் வருகிறான். தன் பிஞ்சுக்கால்களால் மூன்றடி கேட்கின்றான். இது ஒரு யாசகமா? என்றெண்ணி மாபலி கொடுக்க, இவன் தன் ஆட்சியை சர்வ லோகங்களுக்கும் பரப்பிவிடுகிறான். இதுதான் பாயிண்ட்.

அன்றைய கிரேக்கம், ஏதென்ஸ் நகரம் அளவில் மிகச்சிறியன. ஆயினும் கிரேக்கத்தின் தாக்கம் எகிப்து, இத்தாலி, ஐரோப்பாவென பரவலாக இருந்தது. கலை என்று பார்க்கும் போது நமது புத்தருக்கு சுருள் முடி வழங்கியது கிரேக்கக் கலைஞர்களே! இன்றைய ஆசியாவில் சிங்கப்பூர், ஹாங்க்காங்க், தைவான் போன்ற நாடுகள் சிறியனவாயினும் அதன் பொருளாதாரத் தாக்கம் அதிகம்.

1500 தொடக்கம் 1900 வரையிலான சரித்திரத்தைக் கண்டால் இத்துணூண்டு இங்கிலாந்து, நெதர்லாந்து (டச்சுக்காரர்கள்), போர்ச்சுகல் இவர்கள் உலகையே ஆளவில்லையா?

ஆனாலும் உலகில் பெரிய, பெரிய நாடுகள் உள்ளன! உலகின் எட்டுப் பெரிய நாடுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன:

AUSTRALIA
Land Area: 7,686,850 km2
Population 2007:20,434,176
Projected Population 2050:28,041,000
Arable Land: 50,304,000 ha

BRAZIL
Land Area: 8,511,965 km2
Population 2007:190,010,647
Projected Population 2050:254,085,000
Arable Land: 57,640,000 ha

CANADA
Land Area: 9,984,670 km2
Population 2007:33,390,141
Projected Population 2050:42,754,000
Arable Land: 45,810,00 ha

CHINA
Land Area: 9,596,960 km2
Population 2007:1,321,851,888
Projected Population 2050:1,408,846,000
Arable Land: 137,124,000 ha

EUROPEAN UNION
Land Area: 4,324,782 km2
Population 2007:490,426,060
Projected Population 2050:664,183,000
Arable Land: N/A

INDIA
Land Area: 3,287,590 km2
Population 2007:1,129,866,154
Projected Population 2050:1,658,270,000
Arable Land: 160,555,000 ha

RUSSIA
Land Area: 17,075,200 km2
Population 2007:141,377,752
Projected Population 2050:107,832,000
Arable Land: 124,374,000 ha

UNITED STATES
Land Area (square kilometers): 9,826,630
Population 2007:301,139,947
Projected Population 2050:402,415,000
Arable Land: 176,018,000 ha

இருசியா மிகப்பெரிய நாடுதான். உலகை தன் கைக்குள் கொண்டு வர வேண்டுமென ஆசைப்பட்ட நாடுதான். ஆனால் "சைபீரியாவின் சாபம்" என்று சொல்லுகின்ற வண்ணம் பாதி நிலப்பரப்பு பெர்மா புரோஸ்ட் என்று சொல்லக்கூடிய பனியில். மக்கள் தொகையும் அதிகமில்லை, அது கூடுவதாகவும் தெரியவில்லை. எனவே இதன் வல்லமையை இப்போதைக்கு ஒதுக்கிவிடுவோம்.அடுத்துக் கேனடாவைப் பார்ப்போம். இங்கும் இதே கதைதான், பாதிக்கு மேல் பனி மூடிய பிரதேசம்! அதனுடைய ஜனத்தொகையும் அதிகமில்லை. கூடுவதாயிருந்தால் புலம்பெயர்ந்த நம்மவர் கூட்டினாலுண்டு.

ஆஸ்திரேலியாவிலோ பாதிக்கு மேல் "இங்கே மனுஷன் இருப்பானா?" என்று சொல்லும்படியான பாலை. ஆஸ்திரேலியர்களை "விளிம்பு நிலை மாந்தர்" எனலாம் :-) ஏனெனில் இவர்கள் வாழ்வது ஆஸ்திரேலியாவின் விளிம்பில்தானே!

ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் எனும்போது எதைக் கணக்கில் கொள்வது என்பது சிக்கல்? முதலில் சேர்ந்த 6 நாடுகளா? இல்லை பின்னால் 18 ஆகி இப்போது 23 ஆகியிருக்கும் நாடுகளையும் சேர்ப்பதா? என்கின்ற கேள்வி? சில ஐரோப்பிய நாடுகளில் ஜனத்தொகை சரியத்தொடங்கியுள்ளது. உணவு என்று கொண்டால் தன்னிறைவு தெரிகிறது. சில பகுதிகளில் தேவைக்கு அதிகமே விளைகிறது. பொதுவாகப் பார்த்தால் ஐரோப்பா பிழைத்துவிடும் என்று தோன்றுகிறது. ஹிட்லர் போன்ற அசுரர்களோ, இல்லை உலகப்போரில் மூக்கை நுழைப்பது போன்ற அரசியல் பிழைகள் ஏற்படாமல் இருக்கும் வரை இந்த ஆரூடம் சரிப்படும். கீல் பல்கலைக் கழகத்தில் என் சகா சொல்வார், கடந்த 50 ஆண்டுகளில்தான் பிரான்சும், ஜெர்மனியும் மோதிக்கொள்ளவில்லையென்று. சங்ககாலம் தொட்டு நம்மவர்கள் மோதிக்கொள்வது நினைவிற்கு வருகிறது. இவன் மதுரை அழித்து மதுராந்தகம் என்று பெயர் சூட்டுவான். அவன் மீண்டெழுந்து இவன் ஊரை அழிப்பான். இப்படியே தங்களை அழித்துக் கொள்வார்கள்.

பிரேசில் ஒரு தூங்கும் யானை! மூன்றாம் உலக நாடு. ஏழைகள் அதிகமுள்ள நாடு. சூழல் பாதுகாப்பின்மை! இவ்வளவு இருந்தும் நில அளவு, மக்கள் தொகை, தீரபூமி (விவசாயத்தன்மை கொண்ட நிலம்) என்று முக்காலி இங்கு நிலையாக நிற்கிறது. நல்ல தீர்க்கமான அரசியல் அமைந்தால் இந்நாடு பிழைத்துக் கொள்ளும்!

அமெரிக்க ஐக்கிய நாடுகள். 70 களில் உலகின் பார்வையாக, எதிர்பார்ப்பாக, கனவாக இருந்த இந்த நாடு அனாவசியமாக வெளியூர் விவகாரங்களில் தலையிட்டு இன்று முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு நிற்கிறது. மேற்சொன்ன முக்காலி இங்கு மெலிதாக ஆட்டம் காணத்தொடங்கியுள்ளது. பொருளாதார பூதமென இருந்த அமெரிக்கா ஆசியாவின் வீம்பியெழும் முன்னேற்றத்தின் முன் தலை குனிந்து நிற்கிறது. தனது படைபலம் கொண்டு அங்கெல்லாம் கூட்டணிகளை அமைத்துக் கொள்கிறது. உள்நாட்டு மக்களின் எதிர்ப்பு இருந்தாலும் ஜப்பானின் ஒகினாவா, கொரியாவின் சோல் போன்ற இடங்களில் அமெரிக்க தளவாட, இராணுவக் குவிப்பு என்பது நடந்து கொண்டே இருக்கிறது. சோல் நகரில் மட்டும் 40,000 அமெரிக்கச் சிப்பாய்கள் உள்ளனர்! அமெரிக்கா தொடர்ந்து முட்டாள்தனமான அரசியலில் ஈடுபட்டால் "உலகின் காவல்காரன்" என்று நினைக்கும் நினைப்பு வீண் கனவாகவே போகும். ஆயினும் அதன் மக்கள் தொகையைப் பார்க்கும் போதும், அதன் நீர், நில வளத்தைப் பார்க்கும் போதும் ஐரோப்பாவிற்குச் சொன்ன ஆரூடத்தையே இதற்கும் சொல்லலாம்!

ஆசிய ஜோதிகளான இந்தியாவையும், சீனாவையும் காண்போம். பெரிய நாடுகள்தான். நில வளம், நீர் வளம் கொண்ட நாடுகள். ஆனால் உலகின் 40% மக்கள் இங்கு வாழ்கிறார்கள். மக்கள் தொகை குறைவதாய் தெரியவில்லை. விவசாயத்திற்கான நிலம் குறைந்து கொண்டு வருகிறது. மக்கள் பெருக்கத்தை சமாளிக்க வயக்காட்டை பிளாட் போட்டு விற்பது நமக்குத் தெரிந்ததுதானே! இந்த நாடுகளின் பெரிய வளம், மனித வளம்தான். ஆனால் அதைப் பெரும் பாரமாகவே காண்கின்றனர் மக்கள். இந்திய அரசியல் குழப்பத்தைப் பற்றி ஊரே அறியும்! எந்த அரசியல் கட்சிகளும் சூழல் பாதுகாப்பு என்பதை அதன் அரசியல் பிரகடனங்களில் சேர்த்துக் கொள்வதே இல்லை. சீனாவின் அரசியலோ இன்னும் குழப்பமாக உள்ளது. அது என்ன கம்யூனிஸ்ட் நாடுதானா? ஷாங்காய் போய் பார்த்தால் அப்படித்தெரியவில்லையே? ஹாங்காங் கூட இப்போது சைனாதான்!

இந்த நாடுகளின் ஒரே நம்பிக்கை அடிமட்டத்திலிருந்து விழித்துக் கொள்ளப் போகும் மக்களின் சக்தி. மேல் மட்டத்திலிருந்து அரசுகள் செய்யும் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருந்தால் ஆடும் முக்காலியில் நிலையாக உட்கார முயலும் முயற்சிதான்! மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் இருக்கின்ற வளங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று அறிந்து கொள்ள வேண்டும். நதி நீர்ப்பங்கீடு போன்ற அல்பமான அரசியல் செய்யாமல், பாரதி சொன்னது போல் காவிரியையும், கங்கையும் இணைக்க வேண்டும். அப்துல் கலாம் சொல்வது போல் நாளைய தலைமுறையினருக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல பழக்கங்கள் கற்றுத்தர வேண்டும். தீர்க்கமான தொலை நோக்கு என்றால் என்னவென்று சொல்லித்தர வேண்டும். நாளைய உலகு அவர்களுடையது. அதை சீர் செய்து வாழ வேண்டியது அவர்கள் கடமை என்று உணர்த்த வேண்டும். படித்த, நேர்மையான அரசியல்வாதிகளை அவர்களிடமிருந்து உருவாக்க வேண்டும். அப்போதுதான் 21ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு எனும் ஆரூடம் பலிக்கும்.

பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்,
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே!


மகாகவி பாரதி.

(விமானப் பயணத்தில் படித்த செய்தியின் விரிவு)

6 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 5/06/2008 09:25:00 AM

தென்கோடியில் இருக்கும் (யாசகம் வாங்காத) இந்த வாமனனை மறந்துட்டீங்களே.....

ப்ச்........

நா.கண்ணன் 5/06/2008 09:30:00 AM

ஆகா! Lord of the Rings நாடாச்சே! அதற்காகவே உலகப் புகழ் பெற்றுவிட்டதே! மறக்கமுடியுமா? இருந்தாலும் அது ரொம்ப அடக்கமான, அமைதியான நாடு. உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நாடுகள் பற்றிய பேச்சல்லவோ இது! இருந்தாலும் தப்பு, தப்புதான் (கன்னத்திலே போட்டுக்கிறது கேட்கிறதா!)

SP.VR. SUBBIAH 5/06/2008 09:44:00 AM

/////இந்த நாடுகளின் ஒரே நம்பிக்கை அடிமட்டத்திலிருந்து விழித்துக் கொள்ளப் போகும் மக்களின் சக்தி. மேல் மட்டத்திலிருந்து அரசுகள் செய்யும் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருந்தால் ஆடும் முக்காலியில் நிலையாக உட்கார முயலும் முயற்சிதான்! மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் இருக்கின்ற வளங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று அறிந்து கொள்ள வேண்டும். நதி நீர்ப்பங்கீடு போன்ற அல்பமான அரசியல் செய்யாமல், பாரதி சொன்னது போல் காவிரியையும், கங்கையும் இணைக்க வேண்டும். அப்துல் கலாம் சொல்வது போல் நாளைய தலைமுறையினருக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல பழக்கங்கள் கற்றுத்தர வேண்டும். தீர்க்கமான தொலை நோக்கு என்றால் என்னவென்று சொல்லித்தர வேண்டும். நாளைய உலகு அவர்களுடையது. அதை சீர் செய்து வாழ வேண்டியது அவர்கள் கடமை என்று உணர்த்த வேண்டும். படித்த, நேர்மையான அரசியல்வாதிகளை அவர்களிடமிருந்து உருவாக்க வேண்டும். அப்போதுதான் 21ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு எனும் ஆரூடம் பலிக்கும்.///

சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே! ஆனால் இன்றைய இந்திய அரசியல் கோஷ்டி சண்டைகளிடையே இது எவ்வளவுதூரம் சாத்தியம் என்று தெரியவில்லை.

கல்கி அவதாரம் எடுத்து கண்ணன் கத்தியோடு குதிரையில் அல்லது பென்ஸ் காரில் வந்தால் ஒருவேளை நடக்கும்:-))))

நா.கண்ணன் 5/06/2008 09:51:00 AM

திரு.சுப்பையா:

டாக்டர் அப்துல் கலாம் பள்ளி மாணவர்களை குறி வைத்து இந்தியா பூரா சுற்றுவதன் மர்மம், இந்திய ஜனத்தொகையின் விகிதாச்சாரத்தில் குட்டி இந்தியர்களின் விகிதம் அதிகமாகவுள்ளது. அவர்கள் கற்றுக் கொண்டுவிட்டால் இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா தலைகீழாக மாறிவிடும். சும்மா, நம்ம வாத்தியார் 'மதிய உணவுத் திட்டம்' அமுல் படுத்த படித்த பெண் குழந்தைகள் குடும்பக் கட்டுபாடு பின்னால் செய்ய 20 ஆண்டுகளில் தமிழகத்தின் ஜனத்தொகை பெருக்கத்தில் மாற்றம் உண்டானது என்பது சேதி. மாற்ற முடியும். இந்தியாவை மாற்ற முடியும். யாரிடம் சொல்ல வேண்டுமென்று இருக்கு.

துளசி கோபால் 5/06/2008 10:19:00 AM

ரொம்பப் பலமாப் போட்டுக்காதீங்க...வலிக்கப்போகுது:-)


உலக அளவில் பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுத்த முதல் நாடாச்சே.

நாங்க ரொம்ப அடக்கம். அதான் ஓசைப்படாம எல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கோம்.:-)))

அதுக்காக உடனே,'அமரர்' ஆக்கிடாதீங்க:-)

மஞ்சூர் ராசா 5/07/2008 10:28:00 PM

உலக நாடுகளின் மூர்த்தியையும் கீர்த்தியையும் நன்றாக அலசியுள்ளீர்கள்.

இந்தியாவின் மக்கள் தொகையே அதற்கு எதிரியாக இருக்கிறதே. இதற்கு என்ன செய்ய. 2050ல் இந்தியா சைனாவையும் மிஞ்சிவிடும் என்று வேறு சொல்கிறீர்கள். என்னத்தெ சொல்ல.