பர்மாவில் புயல்

நான் நட்சத்திரப் பதிவாளனாகின்ற நேரத்தில் 1 லட்சம் மக்கள் பர்மாவில் உயிரிழந்துள்ளனர் எனும் சேதி இன்றுதான் எனக்குத் தெரியவந்தது! வங்காள விரிகுடாவில் உருவான புயல் மணிக்கு 190 கிமி வேகத்தில் பர்மாவைத் தாக்கி நிலைகுலைய வைத்துள்ளது! சுமார் 1.5 மில்லியன் மக்கள் உண்ண உணவின்றி இருக்க இடமின்றி தவிக்கின்றனராம். கொடுமை என்னவெனில் உதவிக்கரம் நீட்டும் வெளிநாட்டு நிருவனங்களை உள்ளே நுழையாதே என்கிறது ஜண்டா கொடுங்கோன்மை அரசு. பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது எவ்வளவு உண்மை! செப்டம்பரில் சுதந்திரம் கேட்டுப் போராடிய புத்த பிட்சுக்களை கொடுவதை செய்து அடக்கிவிட்டது இந்த அரசாங்கம். இப்போது குடிக்கத் தண்ணீர் கூட இல்லாத மக்களுக்கு உதவ முன்வரும் கரங்களை மடக்கலாமா?

நம்மால் என்ன செய்ய முடியும் என்று எண்ணுகிறீர்களா? உதவும் கரங்கள் எனும் ஒரு அமைப்பு ஒரு மின்னஞ்சல் மனு தயாரித்துள்ளது. இதன் மூலம் உலக மக்கள் உங்கள் துயரில் பங்கு கொள்ள ஆவலாய் உள்ளனர். ஐக்கியநாடுகள் சபை போன்ற நிருவனங்களின் உதவியையாவது வாங்கிக் கொள்ளுங்கள் என்று அது பர்மா அரசாங்கத்தைக் கேட்கிறது. இதில் நீங்களும் கையெழுத்திட வேண்டுமெனில், கீழே தட்டவும்:

Help the Burmese People Receive Aid in Cyclone Aftermath

வின்வெளிக் கண்காணிப்பு & எச்சரிக்கை!

புயலடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ!

1 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 5/10/2008 02:36:00 PM

உதவியை மட்டும் அனுப்பு. கூடவே உதவும் ஆளை அனுப்பாதேன்னு சொல்லும்போது நாமென்ன செய்ய முடியும்?

அதான் பின்னூட்டமிடக்கூட யாரும் வரலை போல இருக்கு.