வேறொரு மனவெளி

திரு.பாலு மணிமாறன் 20 சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து "வேறொரு மனவெளி" என்ற புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார். புத்தக வெளியீடு சமீபத்தில் திரைப்பட இயக்குநர் அமீர் அவர்களை வைத்து நடந்தது. அமீரது படங்கள் இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் பரிசு பெற்றிருக்கின்றன. (RAM - Cyprus Film festival 2006, PARUTHIVEERAN - Berlin film festival -2008) அவரை சிறப்பிக்கும் முகமாகவும் இவ்விழா நடைபெற்று இருக்கிறது. சிங்கப்பூரில் 20 பெண் எழுத்தாளர்களா? என்று வியந்த அமீர் பெண்கள் தைர்யமாக எழுத வேண்டுமென்றார். விமர்சனங்களுக்குப் பயப்படக் கூடாது என்றார். 20 பெண் எழுத்தாளர்களில் 17 பேர் வந்திருந்தனர். வேலை நாளாக இருந்த போதும் 250 பேருக்கு மேல் விழாவிற்கு வந்திருந்தது சிறப்பு என்கிறார் பாலு! அமீர் தவிர, திரு.ராம கண்ணபிரான், திருமதி.ஸ்ரீலட்சுமி, திரு.பீர் முகமது போன்றோரும் பேசினர். மலேசிய எழுத்தாளர் சங்கத்தலைவர் ராஜேந்திரன் அவர்கள் பேசும் போது சிங்கப்பூர், மலேசிய பெண் எழுத்தாளர்கள் பங்கேற்கும் சிறப்புப் பட்டறை ஒன்றை நடத்த வேண்டுமென்ற தன் விருப்பதைச் சொன்னார். சிங்கப்பூர் ஊடகத்துறையைச் சேர்ந்த முகமது அலி அவர்கள் "நூலாய்வு" செய்தார். இப்புத்தகத்திற்கு மதிப்புரை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சுவாரசியமான பல கதைகளைக் கொண்ட இப்பதிப்பு நம் எல்லோர் இல்லங்களிலும் இருக்க வேண்டிய ஒன்று. இப்புத்தகம் கீழ்க்கண்ட இடங்களில் கிடைக்கும்:

In India :
C-54, 1st Floor, Anna Nagar Plaza,
II Avenue,Anna Nagar,
Chennai 600 040

In Singapore:
BlK 325B, #14-655,
Sengkang Eastway,
Singaporeதிரு.அமீர் புத்தக வெளியீடு செய்கிறார்.
விழாவிற்கு வந்திருந்த பெண் எழுத்தாளர்களில் சிலர், அமீருடன்
திரு.அமீர் உரையாற்றுகிறார்

5 பின்னூட்டங்கள்:

மாதங்கி 5/08/2008 07:09:00 PM

Vanakkam thiru na kannan avargale,

neengal ezhuthiya mathippurai nandraka irundhathu.
veroru manaveliyaip patri valaippuuvil arimugappaduthiyatharku nandri

anbudan
Mathangi

நா.கண்ணன் 5/08/2008 07:45:00 PM

ஓ! அந்த அறிவியற் சிறுகதை 'புரு' எழுதிய மாதங்கியா? வித்தியாசமான கதை நன்றாக இருந்தது. அறிவியல் சிறுகதை எழுத தமிழில் அதிகம் பேரில்லை. தொடர்ந்து இத்துறையில் நீங்கள் முயல வேண்டும். வாழ்த்துக்கள்.

வடுவூர் குமார் 5/08/2008 09:30:00 PM

இந்த விழாவை எப்படி விட்டேன்!!!

பாலு மணிமாறன் 5/09/2008 12:05:00 PM

Thanks a lot for giving an insight into the event.

Mr.Kumar, we have done our best to bring this event to the public through Radio, TV and News papers.

Normally i blog these events, this time , i missed it out. Thats the reason why some of bloggers gave it a miss...lol.. Anyway, if any one of you need this book, plesse do contact me @ paalumani@gmail.com.

துளசி கோபால் 5/09/2008 07:10:00 PM

என் தோழிகள் சிலரின் கதைகள் இவ்வெளியீட்டில் வந்துள்ளன.

அவர்களுக்கும் இப்பதிவின் மூலம் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.