இயற்கை - தமிழ்ச் சினிமா

நேற்று தற்செயலாக இப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது, ஷியாம் படம் பார்த்து நாளாகிவிட்டதே என்று தேடியபோது இப்படம் கண்ணில் பட்டது. ஷியாம் வித்தியாசமான ரோல்களில் துணிந்து நடிக்கிறார். அவரது 12B எனும் முதல் படமே வித்தியாசமானதுதான்.

இப்படம் சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது பெற்றிருக்கிறது. வாழ்த்துக்கள்.இப்படம் Dostoyevsky's White Nights நாவலை அடிப்படையாகக் கொண்டது.

இப்படத்தின் சிறப்பு அம்சம் cinematography தான். ஐயோ! என்ன அழகு! என்ன நேர்த்தி! ஹாலிவுட் தோற்றுப் போகும் அளவு தொழில் நேர்த்தி நம்மவர்க்கு வந்து நாளாகிவிட்டது என்பதை மீண்டும் காமிக்கும் படம். கப்பல் சார்ந்த கதை. 'கப்பலோட்டிய தமிழன்' படம் வந்த காலத்தில் ஏழை இந்தியாவில் படத்தில் காட்ட சாம்பிளுக்கு ஒரு கப்பல் கூட கிடையாது. சிதம்பரம் மும்பாயிலிருந்து கப்பல் வாங்கி வருவதாகக் காட்ட இந்திய கப்பற்படைக் கப்பலைக் காட்டுவார்கள். அதில் Navy என்பது தெளிவாகத் தெரியும். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்தியா எவ்வளவு முன்னேறிவிட்டது! எத்தனை கப்பல்கள். சண்டைக்காட்சிக்கு கருப்பர்களையும், வெள்ளையர்களையும் பயன்படுத்துமளவு நிலமை ஆகிவிட்டது.Cinematographer N.K. Ekhambram and Director S.P. Jhananathan

Photo Courtesy: Hindu

பாடல்களில் 'காதல் வந்தால்' எனும் பாடல் இதமாக உள்ளது. எடுக்கப்படவிதம் 'கவிதை'. ஆனால் திருஷ்டிப்பரிகாரம் போல் "வால்க, வால்க" (அதுதான் வாழ்க! வாழ்க!) என்று ஒரு பாட்டு. வேண்டுமென்று தமிழை இப்படி சிதைத்துவிட்டு இனவெறியைத் தூண்டும் வண்ணம் வெள்ளை, கருப்பு என்று பேச்சு வேறு. ரொம்ப poor taste!

ஷூட்டிங் லொகேசன் எங்கு என்று தெரியவில்லை? கேரளா போல் தெரிகிறது. பின்னே எங்கே இவ்வளவு சுத்தமான தேவாலயம் கிடைக்கும்?

நிச்சயம் பார்க்க வேண்டிய படம். என்.கே.ஏகாம்பரம் மிகச்சிறந்த கேமிரா மேன் என்பது இப்படத்திலிருந்து தெரிகிறது. இயக்குநர் ஜனநாதன் கவனிக்கப்பட வேண்டிய இயக்குநர். இருவருக்கும் வாழ்த்துக்கள்.

3 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 6/22/2008 10:32:00 AM

தூத்துக்குடிக்குப் பக்கத்தில் ஒரு இடத்தில்தான் படம் முழுக்க எடுத்தாங்கன்னு எங்கியொ படிச்ச நினைவு.

அதென்ன ஷியாம்? அவர் பெயர் ஷாம்.

ஷம்சுதீனின் சுருக்கம்.(சரின்னு நினைக்கிறேன்)

அருண் குமார் நடிப்பும் அருமைதான். அதென்னவோங்க அருண்குமாரை வேணுமுன்னே ஓரங்கட்டுராங்களோன்னு எனக்கு ஒரு தோணல்.

மொத்ததில் அருமையான படம்.

நா.கண்ணன் 6/22/2008 10:52:00 AM

//அதென்ன ஷியாம்? அவர் பெயர் ஷாம்.//

ஷியாம்ன்னு சொன்னாதாங்க நல்லாயிருக்கு! ;-)

மயூரேசன் 6/24/2008 12:00:00 AM

இந்த திரைப்படம் அந்தமான் தீவில் எடுக்கப்பட்டது என்று வாசித்திருந்தேன். அந்த படம் எடுத்த இடம் எல்லாம் சுனாமியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதாகவும் அறிந்தேன்.