தசாவதாரம் - விமர்சனம்

கமலுக்கு நடிப்பதற்கு இனி சவால் இல்லை போல் தெரிகிறது. அதுதான் தசாவதாரம் எடுத்திருக்கிறார். கமல் பற்றி நிறைய ப்ளஸ் பாயிண்ட் உண்டு. அதற்காகவல்ல இது. கொஞ்சும் சுப்புடு பாணி விமர்சனம் :-)

கமல் ஒரு காப்பி கேட். அவரது ஹாலிவுட் ஆசையை, அவஸ்தையை அப்படங்களைக் காப்பி அடிப்பதன் மூலம் நிறைவேற்றிக் கொள்வார். அதில் தேறிய படங்களுமுண்டு (தெனாலி நல்ல உதாரணம்). புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல்தான் தசாவதாரம். எட்டிமர்பி 'நட்டி புரொபஸர்' என்றொரு படம் எடுத்தார். அதில் பல வேடங்களில் நடித்தார். ஆனால் படத்தின் டைட்டில்ஸ் போடும் போதுதான் தெரியும் 'அட! இந்த வேஷம் கூட, அவர் போட்டதா?' என்று. கமல் வந்த்வுடனேயே தெரிந்து விடுகிறது, அவர்தான் சர்தார், அவர்தான் புஷ், அவர்தான் வில்லன், அவர்தான் ஜப்பானியர் இப்படி! மட்டமான மேக்கப். அசிங்கமாக இருக்கிறது. ஹாலிவுட் குவாலிடி தமிழ்த் திரைக்கு வர இன்னும் நாளாகும் என்று தெரிகிறது! அப்புறமென்ன கோடானகோடி பணம் போட்டு படமெடுக்க வேண்டும்?கமல் இனிமேல் ஹீரோ ரோலில் எல்லாம் நடிக்க வேண்டாம். மிகவும் மிகவும் கிழடு தட்டிப் போய்விட்டது. நல்ல ஜனரஞ்சக ரோல்களில் நடித்துக் காலத்தை ஓட்டலாம். அசின், ஜோ போன்ற நடிகள் கூட நடிக்கும் போது தந்தையும், மகளும் நடிப்பது போலுள்ளது!

கதை மசாலோ மசாலா!! வைஷ்ணவ-சைவ பேதம், கிருஸ்தவ, இஸ்லாம் ஒருங்கிணைப்பு, கலைஞர், பெரியார், ஜேஜே சமரச சன்மார்க்கம், சயின்ஸ், பிக்ஸன் மசாலா இப்படி ஒரே கறி கலாட்டாவாகப் போய்விட்டது படம்.

பாடல்கள் அனைத்தும் சொதப்பல்!

பெருமாள் வந்தவுடன் படார்!படார்!! என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்களே? இது என்ன இராமானுஜ சம்பிரதாயம்? சரி, பெருமாளைத் தூங்கப் பண்ண சுப்ரபாதமா பாடுவார்கள். இவ்வளவிற்கும் கமல், வாலி இரண்டும் ஐயங்கார்கள்! பேஷ், பேஷ்!!

கமல் ஒரு வன்முறை, ஒரு காமெடி என்று எடுப்பார். இதில் இரண்டும் கலப்பு (மசாலா!). கிரேசி மோகன் இல்லாமலே அவர் வாடை வீசும் படம். எனக்கு அந்த தெலுங்கு ரெட்டி பாத்திரம் மிகவும் பிடித்தது. அவ்வளவுதான்.

கமல் ஹாலிவுட் கனவை விட்டு, தமிழ்ப்படம் எடுக்கலாம்.

கொரிய உயர்மட்டக்குழுவில் தமிழர்

கொரியாவின் புதிய ஜனாதிபதி லீ அவர்களுக்கு ஆலோசனை வழங்க உலக அளவில் ஒரு உயர் மட்டக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ்சுக்கு சமமாக ஒரு தமிழரும் இருக்கிறார். அவர்தான் இன்போசிஸ் நாராயணமூர்த்தி. வருகின்ற நூற்றாண்டில் இந்தியாவின் உயர் ஸ்தானத்தை உறுதிகூறும் இம்மாதிரி செயற்பாடுகள் மகிழ்ச்சியளிக்கின்றன.

மூலம்: The Korea Times