தசாவதாரம் - விமர்சனம்

கமலுக்கு நடிப்பதற்கு இனி சவால் இல்லை போல் தெரிகிறது. அதுதான் தசாவதாரம் எடுத்திருக்கிறார். கமல் பற்றி நிறைய ப்ளஸ் பாயிண்ட் உண்டு. அதற்காகவல்ல இது. கொஞ்சும் சுப்புடு பாணி விமர்சனம் :-)

கமல் ஒரு காப்பி கேட். அவரது ஹாலிவுட் ஆசையை, அவஸ்தையை அப்படங்களைக் காப்பி அடிப்பதன் மூலம் நிறைவேற்றிக் கொள்வார். அதில் தேறிய படங்களுமுண்டு (தெனாலி நல்ல உதாரணம்). புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல்தான் தசாவதாரம். எட்டிமர்பி 'நட்டி புரொபஸர்' என்றொரு படம் எடுத்தார். அதில் பல வேடங்களில் நடித்தார். ஆனால் படத்தின் டைட்டில்ஸ் போடும் போதுதான் தெரியும் 'அட! இந்த வேஷம் கூட, அவர் போட்டதா?' என்று. கமல் வந்த்வுடனேயே தெரிந்து விடுகிறது, அவர்தான் சர்தார், அவர்தான் புஷ், அவர்தான் வில்லன், அவர்தான் ஜப்பானியர் இப்படி! மட்டமான மேக்கப். அசிங்கமாக இருக்கிறது. ஹாலிவுட் குவாலிடி தமிழ்த் திரைக்கு வர இன்னும் நாளாகும் என்று தெரிகிறது! அப்புறமென்ன கோடானகோடி பணம் போட்டு படமெடுக்க வேண்டும்?கமல் இனிமேல் ஹீரோ ரோலில் எல்லாம் நடிக்க வேண்டாம். மிகவும் மிகவும் கிழடு தட்டிப் போய்விட்டது. நல்ல ஜனரஞ்சக ரோல்களில் நடித்துக் காலத்தை ஓட்டலாம். அசின், ஜோ போன்ற நடிகள் கூட நடிக்கும் போது தந்தையும், மகளும் நடிப்பது போலுள்ளது!

கதை மசாலோ மசாலா!! வைஷ்ணவ-சைவ பேதம், கிருஸ்தவ, இஸ்லாம் ஒருங்கிணைப்பு, கலைஞர், பெரியார், ஜேஜே சமரச சன்மார்க்கம், சயின்ஸ், பிக்ஸன் மசாலா இப்படி ஒரே கறி கலாட்டாவாகப் போய்விட்டது படம்.

பாடல்கள் அனைத்தும் சொதப்பல்!

பெருமாள் வந்தவுடன் படார்!படார்!! என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்களே? இது என்ன இராமானுஜ சம்பிரதாயம்? சரி, பெருமாளைத் தூங்கப் பண்ண சுப்ரபாதமா பாடுவார்கள். இவ்வளவிற்கும் கமல், வாலி இரண்டும் ஐயங்கார்கள்! பேஷ், பேஷ்!!

கமல் ஒரு வன்முறை, ஒரு காமெடி என்று எடுப்பார். இதில் இரண்டும் கலப்பு (மசாலா!). கிரேசி மோகன் இல்லாமலே அவர் வாடை வீசும் படம். எனக்கு அந்த தெலுங்கு ரெட்டி பாத்திரம் மிகவும் பிடித்தது. அவ்வளவுதான்.

கமல் ஹாலிவுட் கனவை விட்டு, தமிழ்ப்படம் எடுக்கலாம்.

8 பின்னூட்டங்கள்:

ஆ.ஞானசேகரன் 7/26/2008 10:27:00 PM

//இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை// கமலுக்கு நடிப்பதற்கு இனி சவால் இல்லை போல் தெரிகிறது. அதுதான் தசாவதாரம் எடுத்திருக்கிறார்///
ஹெலோ அண்ணே!!!
ஹாலிவுட் அளவிற்க்கு இல்லை என்றாலும், தமிழ் படத்தை எடுத்துச்செல்லும் முதல் படி தாங்க...எந்த இதயத்தின் மொழிகளை புரிந்துக்கொண்டீரோ?.....

Anonymous 7/26/2008 10:27:00 PM

கமல் ஐயங்காரா? ஐயர் என்று தான் நினைத்திருந்தேன்.

நா.கண்ணன் 7/26/2008 10:33:00 PM

ஞானம்! நான் கமல் ரசிகன்தான். இப்படி காப்பி அடித்து, அவலை நினைத்து உரலை இடிப்பதற்குப்பதில் அவர் முழுத்திறமையும் தெரியும் படி சிம்பிளாக நல்லவொரு படமெடுக்கலாம். புஷ்ஷாக நடிப்பதில் என்ன பெருமை? கமலுக்கு உள்ளூர சிவாஜியைத் தாண்டிவிட எண்ணம். செய்து விட்டார்.

குமார சூரியன் 7/26/2008 11:15:00 PM

கமலுக்கும் உங்களுக்கும் ஒரே வயசாமே :)

நா.கண்ணன் 7/27/2008 12:25:00 PM

//கமலுக்கும் உங்களுக்கும் ஒரே வயசாமே :)//

:-)
என்ன இடக்கடறடக்கலா?
நல்லவேளை நான் படத்தில் நடித்து நீங்களெல்லாம் சகித்துக்கொள்ளும் நிலை இல்லை :-)
ஒரே நாள், ஒரே மாசம். அவருக்கு என்ன நட்சத்திரமென்று தெரியவில்லை? அவர் தூரத்து உறவு கூட.

Anonymous 7/27/2008 08:35:00 PM

//கமலுக்கு வயசாயிடுச்சு
மேக் அப் நல்லாவேயில்லை
எட்டிமர்பி 'நட்டி புரொபஸர்' என்றொரு படம் எடுத்தார்
கதை மசாலோ மசாலா
பாடல்கள் அனைத்தும் சொதப்பல்//

இப்படி பல புதிய விஷயங்களை கண்ணன் கண்டுபிடித்துள்ளதால் யாராவது இவரை பாராட்டுங்கப்பா..!

Karthigesu 7/30/2008 12:56:00 PM

சரியான கருத்துத்தான். ஆளவந்தானும் இப்படித்தான் சொதப்பல்.

அன்றைக்கு "றீவி"யில் அபூர்வ சகோதரர்கள் பார்த்தேன். பதிவுத் திருமண அலுவலகத்தில் ஏமாற்றத்தைக் காட்டும் நடிப்பு என்ன அருமை! அது பழைய, இளைய, யதார்த்தமான கமல்.

ஆனால் அந்த முதல் பகுதியில் விஷ்ணுதாசராக வரும் கமல் அசல் கமல் அல்லவா? அந்தப் பகுதி எனக்குப் பிடித்திருந்தது. எல்லாரும் அதைப் பாராட்டியிருக்கும்போது, நீரொருத்தர் அதைப் புறக்கணித்தென்னவோ?

நாயுடுவின் தெலுகு விசுவாசம் அருமை. ஆனால் அவ்வளவு பெரிய அதிகாரிக்குக் கொஞ்சம் கோமாளி வேஷம் போட்டது போல இல்லை?

Eddyக்கும் Nuttyக்கும் தமிழில் எழுதும்போது ட்டி என்றே குழம்புகிறது. ம்... பழைய பிரச்சினைதான். என்ன செய்ய?

ரெ.கா.

நா.கண்ணன் 7/30/2008 01:31:00 PM

அன்பின் ரெ.கா:
கமல் என்றவுடன் நம் எதிர்பார்ப்பு கூடி விடுகிறது. அவன் தரமுள்ள கலைஞன். இராமானுஜதாசனாக வரும் கமல், தலித் சூழல் போராளியாக வரும் கமல் இருவரும் பிடித்திருந்தது. எப்படி அநாயசமாக பல்வேறு வட்டார/ஜாதிய தமிழ் வழக்குகளை பலுப்பமுடிகிறது இவரால்! இன்னொன்றும் பிடித்திருந்தது. பல்வேறு பாத்திரங்களின் உயர, உடல் அளவுகள். இதை எப்படிச் செய்யமுடிகிறது இவரால்? அந்த மொட்டைப்பாட்டி ஓர் உதாரணம்.

தரமான படமென்றால் பெரிய பட்ஜெட் படமாக இருக்க வேண்டுமென்றில்லைதானே. அன்று "பேசும்படம்" பார்த்தேன். எவ்வளவு நேர்த்தியான இயல்பான நடிப்பு! ரஜனியுடன் போட்டி வேறு. அவருடன் ஒரு ஜப்பானியப் பெண் நடித்தால் இவர் ஒரு ஜப்பானியப் பெண்ணைக் கொண்டுவந்து அவளின் அப்பாவாகவேறு இதெல்லாம் தேவையா?