வில்லுக்கு கொரியன்!

இராமாயண கதா பாத்திரங்களில் கைகேயின் வில்வித்தைத்திறன் மிகவும் சிலாகித்துப் பேசப்படுகிறது. கைகேயி மத்திய ஐரோப்பியப் பெண். காகஸ் மலைவாசி. ஆனால், ஒலிம்பிக் வில்லேந்தும் வீராங்கணைகளாக கொரியப் பெண்கள் கடந்த 6 வருடங்களாக தொடர்ந்து தங்கப்பதக்கம் பெற்று வருவது ஒலிம்பிக் ரெகார்டு மட்டுமல்ல, உலக சரித்திரமும் கூட.

தொடர்ந்து மழை பெய்த போதும் அவர்களது கவனம் சிதராமல் குறிபார்த்து வில் எய்தது மனிதத் திறமைக்கு எடுத்துக்காட்டு. கொஞ்சம் கூடப் பதறாமல், கூட்டத்தைக் கண்டு, அதன் கூச்சலைக் கண்டு (உற்சாகக் கூச்சல் என்றாலும் அது கவனத்தை சிதறடிக்கக்கூடியதே!) பதட்டமடையாமல். 'காரியமே கண்ணாயினர்' என்று இவர்கள் வில்லெய்த திறம், ஆகா!வில்லுக்கு விஜயன் என்று சொல்லுவார்கள். இனிமேல் வில்லுக்கு கொரியன் என்று மாற்றவேண்டுமென்று தோன்றுகிறது.

இதுவரை தென்கொரியா மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது! பெண்களுக்கான கூட்டு வில்லெறியும் போட்டி, நீச்சல் போட்டி, 60கிலோ ஜூடோ!

வடகொரியாவும், பிரேசிலும் ஆடிய கால்பந்தாட்டப்போட்டி எவ்வளவு சிறப்பாக இருந்தது. நான் பார்த்த பொழுது 2க்கு ஒன்று என்ற கணக்கில் பிரேசில் முன்னின்றது.

ஆணுக்குப் பெண் சளைத்தவளல்ல என்பதை நிரூபிக்கும் ஒலிம்பிக் போட்டிகள் வாழ்க.

பால் வேறுபாடு, இனவேறுபாடு, தேசிய வேறுபாடு என்று பார்க்காமல் மானுடத்திறமை ஒன்றை மட்டும் கணக்கில் கொண்டு நடக்கும் இந்த அதிசயம் காணக் கண்கோடி வேண்டும்.

வாழ்க ஒலிம்பிக்!

4 பின்னூட்டங்கள்:

பிரேம்ஜி 8/11/2008 10:21:00 AM

வணக்கம் கண்ணன் அவர்களே.
கைகேயி மத்திய ஐரோப்பிய பெண் என்று சொல்ல உதவும் காரணங்களை கூறுமாறு கேட்டுகொள்கிறேன்.

நா.கண்ணன் 8/11/2008 10:28:00 AM

கைகேயி என்ற பெயரின் வேர், காகஸ் எனும் மலையைக் குறிக்கிறது. தில்லிப் பல்கலைக்கழக சரித்திர ஆய்வு, பரதன் தன் மூத்தோரைக் காண சென்ற வருணனைகள் அப்படியே தில்லி மாஸ்கோ வழித்தடத்தில் அமைவதாகச் சொல்கிறது. இம்முறை சுவிஸ் செல்லும் போது இவ்வழித்தடத்தில் பயணித்தேன் (விமானத்தில்தான்). இராமாயண காலத்தில் சிந்து சமவெளிப்பரப்பு இந்தியாவென்றே கணக்கிடப்பட்டது. சிந்து சமவெளி நாகரீகம் ரஷ்யாவரை செல்கிறது. இது குறித்த ஒரு பேச்சை நான் ஜெர்மனியில் கேட்டிருக்கிறேன். மேலும் தமிழின் தொடக்கமும் உரால் மலைகளில் அமைகிறது. பலவகைகளில் நாம் மத்திய ஐரோப்பாவுடன் தொடர்புற்று இருக்கிறோம்.

பிரேம்ஜி 8/11/2008 11:17:00 AM

மிக்க நன்றி.கண்ணன் அவர்களே. இந்த விஷயங்கள் சுவாரஸ்யமாக உள்ளன.இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.தொடர்பான புத்தகங்கள்,இணைய தளங்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு கேட்டு கொள்கிறேன்.

டொன் லீ 8/11/2008 12:07:00 PM

அருமையான தகவல். இந்தியாவால் வில்வித்தை கூட காட்ட முடியாதது வேதனை. வால்டர் தேவாரம் சொன்னாற்போல் இந்தியா தனக்கு முடியுமான துறைகளை தேர்ந்தெடுத்து வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதுதான் நல்லது. கிரிக்கெட்டுக்கு அளிக்கும் முக்கியத்துவம், ஒலிம்பிக்குக்கு யாருமே (அரசு மட்டுமல்ல, நாங்களும்தான்) கொடுப்பதில்ல