நஞ்சுண்ட கண்டன்!

ஒலிம்பிக் பற்றிய பல்வேறு சேதிகளில் அங்கு வழங்கப்படும் சீன உணவு பற்றிய சேதியுமொன்று. ஊர்வன, பறப்பன, நகர்வன, நடப்பன என ரசிக்கத்தக்க உணவென சீன 'நளபாகம்' இருபது வகையான மிருகங்களைச் சுட்டுகிறது.

அன்று கொரியாவில் என் வங்கி முன்பாக ஒரு சிறுகடை விரித்து ஒருவன் ஏதேதோ விற்றுக் கொண்டிருந்தான். என்ன விற்கிறான் எனப்பார்க்கப்போனது தவறாகப் போய்விட்டது. அவன் கடையில் விற்பனைக்கு காய்ந்து போன தேள், பூரான், வண்டு இன்னபிற விஷஜந்துக்கள்!! இதையெல்லாம் கூட உண்பார்களா? என்ற சந்தேகத்தில் ஆய்வகம் வந்து சகாக்களை வினாவினேன். அவர்கள் சொன்ன பதில் இன்னும் தூக்கிவாரிப் போட்டது. இந்த விஷப்பிராணிகளை கொதிக்க வைத்து சூப் தயாரித்தால் சுவையாக இருக்கும் என்றனர்.

ரசனை ஊருக்கு ஊர் வேறுபடுகிறது என்ன செய்ய?

நஞ்சுண்ட கண்டன் சிவன் என்று எண்ணியிருந்தேன். அது 'சிவன்' அல்ல, 'சீனன்' என்று கண்டு கொண்டேன்.

2 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 8/22/2008 11:58:00 AM

நஞ்சுண்ட சீனர்:-)))))


ரெண்டு வருசமுன்பு கோபால் சீனா போய்வந்து சொன்னப்ப நான் நம்பவேயில்லை. அங்கே அது டெலிகஸியாம். உணவு மேசையிலேயே சூடான எண்ணெயில் அப்படியே பொரிச்சுத் தர்றாங்கன்னார்.

போதுண்டா சாமின்னு இருந்துச்சு!!!

நா.கண்ணன் 8/22/2008 02:50:00 PM

சிறுவனாக இருக்கும் போது சாகபட்சிணியான என்னைக் கேலி செய்ய "பச்சைக் கருவாடு" என்று சொல்லி பயமுறுத்துவர். இந்த சவுடால்களையும் கொரியாவிலும், சீனாவிலும் விட்டுப் பார்க்க வேண்டும். வந்தியெடுத்தே செத்து விடுவார்கள்!