பிந்திராவின் தங்கப்பதக்கம்!

இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம்!! வாவ்!! சண்டிகாரைச் சேர்ந்த பிந்திரா 10மீ துப்பாக்கி சுடுதலில் முதலாவதாக வந்து இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வாங்கித்தந்துள்ளார். இது சாதாரண வெற்றியல்ல! Near perfect shot என்று சொல்லக்கூடிய அளவில் மிகத்துல்லியமாக சுட்டு இதைப் பெற்றிருக்கிறார். இதனால் இவருடன் போட்டி போட்ட பின்லாந்துக்காரரையும், முன்னாள் சாம்பியன் சீனாவையும் இவர் ஓரங்கட்டிவிட்டார்!

இந்தியா நிச்சயம் பெருமை கொள்ள வேண்டிய வெற்றி இது.இந்தியா மேலும் பதக்கங்கள் பெற நாம் உளமார வாழ்த்துவோம்!

Bindra clinches India's first individual Olympic gold

4 பின்னூட்டங்கள்:

Anonymous 8/12/2008 11:14:00 AM

இந்தியாவிற்கு ஒலிம்பிக் தங்க பதக்கம் .....பிந்த்ரா சாகசம்... நமது தேசிய கீதம் இசைக்க மணிக்கொடி மேலோங்கி பறக்கும் பொது மெய் சிலிர்த்தது....உள்ளம் நெகிழ்ந்தது... அவர் பதக்கம் வாங்கியமைக்கு அல்ல ..... ஏன் இவ்வளவு தாமதம் ....சுதந்திர இந்தியாவின் முதல் தனி நபர் ஒலிம்பிக் தங்கபதக்கம்...

மாநில அரசுகளும் மத்திய அரசும் போட்டி போட்டுக்கொண்டு பரிசுகள் அறிவிக்கின்றனர்.... வெறும் கண்துடைப்பு ..... பிந்திராவின் தந்தை ஒரு கோடீஸ்வரர்...அதனாலே தான் அவரால் தனது மகனின் ஆர்வத்தையும் ஆசையையும் பல கோடி ருபாய் கொண்டு உலகத்தர பயிற்சி சாதனங்கள் வாங்கி தர முடிந்தது...அப்போது எங்கே போனது இந்த அரசு...

அவரைபோல ஆயிரம் பேர் - ஏன் அவரை விட திறமை சாலிகள் பலரும் ஏழை குடும்பத்தில் பிறந்து ஒலிம்பிக் கனவை கண்டு ரோட்டரத்தில் கிடக்ககூடும்.....

இன்றைக்கு இருக்கும் விளையாட்டு துறையில் எவ்வளவு பேர் நிஜமாகவே களத்தில் இறங்கி உள்ளனர்....பட்டினி கிடந்தவனுக்கு தான் உணவின் ருசி தெரியும்.... பந்தயத்தில் தோற்றவனுக்கு தான் வெற்றியின் வெறி வரும்... கேரளத்து தட கல பெண்கள் - எங்கே இப்போது காணோம்.....பாலு தூக்கும் பெண்கள் எங்கே....ஹாக்கி என்ன ஆயிற்று....

இலக்கை அடைந்த அவருக்கு பரிசு கொடுங்கள்.....இல்லை நோக்கி செல்லும் இளம் செல்வங்களுக்கு பணம் கொடுத்து அடுத்த போட்டிக்கு தயார் செய்யுங்கள்....இல்லையேல் பல முறை நடந்தார்போல வெறும் மார்தட்டி கொண்டு மீண்டும் ௨0/௨0 பார்த்துவிட்டு .....அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பரிசு விழுமா என்று லாட்டரி சீட்டு வங்கி வையுங்கள்...

நா.கண்ணன் 8/12/2008 11:20:00 AM

ஏழ்மையைக் காரணம் காட்டி இந்தியா இனிமேலும் பின் தங்க முடியாது. இந்தியாவில் இல்லாத பணக்காரர்களா? இந்தியாவில் செலவழிக்கும் போதுதான் தெரிகிறது, நகர விலைவாசி என்பது அமெரிக்காவை ஒத்து இருப்பது. விலையில் மட்டும் அமெரிக்கா போல் இருந்தால் போதாது. விளையாட்டிலும் அமெரிக்கா போல் ஆகவேண்டும்! எத்தனை மல்டி மில்லியன் கம்பெனிகள் இந்தியாவிலுண்டு. அவை ஏன் ஸ்பான்சர் செய்வதில்லை. ஏன் பிந்திரா அப்பா போல் மற்ற பணக்கார அப்பாக்கள் யோசிப்பதில்லை?

100 கோடி மக்கள் உள்ள ஒரு நாடு 20 பேரை ஒலிம்பிக்கிற்கு அனுப்புவது கேவலமாக உள்ளது! சிங்கப்பூர் டீம் இதைவிடப் பெரியது!

இந்தியா தன் காலனித்துவ தாழ்வு மனப்பான்மையிலிருந்து மீள வேண்டும்.

சீனா இந்தியாவை விட ஏழை நாடுதான். ஆனால் இன்று ஒலிம்பிக் நடத்துகிறது, இதுவரை தங்கப்பதக்கம் பெற்ற நாடுகளில் முதன்மையாக நிற்கிறது!

இந்தியர்களே விழித்தெழுங்கள்!!

Anonymous 8/12/2008 06:18:00 PM

hi friend im Jeeve from Malaysia . i love india ...... i love indains

நா.கண்ணன் 8/12/2008 08:52:00 PM

Hello Jeeva. Thanks.