அமெரிக்கா! அமெரிக்கா!!

சுவாரசியமான விஷயங்கள் தற்செயலாக நடைபெறுகின்றன. ஈழத்துக்கவிஞர் வ.செ.ஜெயபாலன் அவர்களது பாடல்களைக் கேட்கலாமெனத் தட்ட இந்தப்படம் கிடைத்தது! இலங்கையின் மிகப்பிரபலமான "சுராங்கனி! சுராங்கனி" மெட்டில், அமெரிக்கா! அமெரிக்கா! அமெரிக்கான்னு war, war டுடா! எனும் அமர்க்களமான வீடியோ. நமது அமெரிக்க இந்தியர்கள் கூட மறுக்கமுடியாத உண்மையைப் புட்டு, புட்டு வைக்கும் இப்பாட்டு, தொழில் திறத்தில் எங்கோ நிற்கிறது! நம்ம ஆட்களின் இம்மாதிரி "புழக்கடை சினிமா" (garage cinema)சூப்பர்தான்!!


Youtube Videos

1 பின்னூட்டங்கள்:

Anonymous 9/08/2008 08:37:00 PM

நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் இலங்கை விமானங்கள் தமிழர் பகுதியில் 250 கிலோவில் இருந்து 1000 கிலோ வரையிலான 6000 குண்டுகளை இலங்கையில் வீசி இருப்பதாக பெருமிதப்பட்டிருக்கின்றார். யாராக்காவது சுராங்கனி இராகத்தில் இலங்கை குறித்து பாடத் தைரியம் வருமா? வந்தாலும் கே நாராயணன் ஐயா முகம் சுளிக்க மாட்டாரா?அமெரிக்க ஜனநாயகத்தில் புஸ் தோளில் என்ன தலையிலும் ஏறிப் பாடலாம்.

புள்ளிராஜா