கடவுள் இருக்கிறானா? மனிதன் கேட்கிறான்!

எவ்வளவுதான் இந்தியர்கள் ஆன்மீகர்கள் என்றாலும் அறிவியல் வீறுகொண்டு எழுந்த பின், கடவுளைப் பற்றிய பல கேள்விகள் முன்னெப்போதும் இல்லாத அளவு கேட்கப்படுகிறது!அதற்கு விடை சொல்வதும் பெரும் பிரச்சனையாகவே உள்ளது! அதுவும் தொழில்முறையில் ஒரு விஞ்ஞானியாக இருந்து கொண்டு கடவுள் பற்றிப் பேசுவது ஒரு சமூகக் கூச்சத்தை அளிப்பதை இல்லையென்று சொல்ல முடியாது! என் வலைப்பதிவில் இது சதா நடக்கும் விஷயம். அமித் கோஸ்வாமி என்ற கற்றையியல் விஞ்ஞானி (Quantum physicist) இப்போது கொஞ்சம் துணைக்கு வந்திருக்கிறார். அவரது 'பிரக்ஞையுள்ள பிரபஞ்சம்' (Self Aware Universe) என்ற புத்தகம் போப்பிலிருந்து அறிவியல் அறிஞர்கள்வரை எல்லோரையும் புரட்டிப் போட்டிருக்கிறது. இப்புத்தகம் வந்த பிறகு போப் ஆண்டவர் அவசர, அவசரமாக ஒரு உலக சமயப் பேரவையைக் கூட்டியிருக்கிறார். ஈதெல்லாம் பழைய சேதிகள்தான்.

மின்தமிழில் வந்த ஒரு கவிதை இதை மீண்டும் கிளப்பியிருக்கிறது! அந்தத் தொடர் சிந்தனைத் தூண்டலில் மீண்டும் அமித் கோஸ்வாமியை வாசிக்க முடிந்தது. மிகவும் பொருள் பொதிந்த அந்த நேர்காணலை தமிழ் உலகம் வாசித்து அறிந்து கொள்வது நல்லது!

Scientific Proof of the Existence of God

An interview with Amit Goswami
by Craig Hamilton

வாசிக்க இங்கே சொடுக்குக!

3 பின்னூட்டங்கள்:

தருமி 10/02/2008 06:49:00 PM

நூலைப் பற்றிய மேலதிக தகவல்கள் தரலாமா?

Karthigesu 10/04/2008 12:14:00 PM

கண்ணன்,

இந்த இடுகை, இதற்குப் பிந்தைய அமிட் கோஸ்வாமி அறிமுகம் இரண்டும் படித்தேன். தொடர்ந்து அவரின் நேர்காணலும் வலையில் படித்தேன். என்ன சொல்லலாம்! Mind blowing? அல்லது mind fogging? இரணடாவதே பொருத்தம்.

இந்த உரையாடலை மின்தமிழுக்கு எடுத்துச் செல்லக் கேட்டுக் கொள்ளுகிறேன். அங்கு இதுபற்றி விவாதிக்கவும் கருத்துக்களைக் கூட்டவும் பெருக்கவும் பலர் இருக்கிறார்கள். நானும் எழுத விருப்பம். உங்கள் வலைப்பூ அன்பர்களும் அங்கேயே வரலாமே! அங்கே உட்கார்ந்து பேச விசாலமான இடம் உண்டு என்பதால் சொன்னேன்.


ரெ.கா.

நா.கண்ணன் 10/04/2008 01:19:00 PM

ரெ.கா: இத்தலைப்பில் இல்லையெனினும் இவ்விவாதம் பல்வேறு இழைகளில் போய்க்கொண்டு இருப்பதாக உணர்கிறேன். உதாரணமாக "ஆக்கம், படைப்பு, கலை" என்பதைக் கூட அமித் கோசுவாமியின் கோட்பாடு விளக்குகிறது.

ஒரு புதிய இழை நீங்கள் தொடங்கி உங்கள் கேள்விகளை முன் வையுங்கள் தேடிப்புரிந்து கொள்வோம்!