போக்குவரத்து!

மூன்றாம் உலகநாடுகளின் போக்குவரத்தை இறைவன் நேரடியாக தன் பார்வையில் வைத்திருக்கிறான் என்று எண்ணுகிறேன். இதை இவ்விடுகை சான்று பகரும்!Bangkok நகருக்கு போன போதும், வியட்நாம் தலைநகரான ஹனோய் நகரிலும், கம்போடியா பினாம்பெங்கிலும் இதே கதிதான். உலகம் ஓர் ஒழுங்குடன் நடக்கிறது என்று காண்போர் உளர். அது ஒழுங்கற்று நகர்கிறது என்று சொல்வோருமுளர். ஒழுங்கற்ற முறைக்கு செலவு குறைவு. போக்குவரத்தை சீர்மையுடன் வைத்திருக்க வெளிநாடுகளில் நிறைய செலவழிக்கிறார்கள். அச்செலவு இந்தியாவில் இல்லை. ஆனால், மகிழ்வுந்து என்று சத்தியமாய் நாம் இப்பயணங்களை நகர்விற்கும் உந்திற்குச் சொல்லக்கூடாது. இப்போக்குவரத்து நெருப்பில் நடப்பது போன்றது! இந்தியாவில் உயிருக்கு அதிகம் மதிப்புக்கிடையாது. என் சகாக்களில் பலரை நான் போக்குவரத்து விபத்தில் இந்தியாவில் இழந்திருக்கிறேன். வாழ்விற்கு மதிப்பு வேண்டுமெனில் நாகரீகமாக நம் செயல்பாடுகளை வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. நாகரீக வாழ்விற்கு பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டியுள்ளது, பின் மக்களுக்கு நாகரீக வாழ்வைச் சொல்லித்தர வேண்டியுள்ளது, அதை நடைமுறைப்படுத்த சட்டம் ஒழுங்கு கொண்டுவர வேண்டியுள்ளது. உலகில் ஓசிச்சோறு என்பது இந்தியாவில் மட்டுமே சாத்தியம். உயிரும் ஓசியாக வந்ததுதானே!!

2 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 11/15/2008 10:12:00 AM

வீட்டை விட்டு வெளியில் காலடி வச்சால் திரும்பி வருவோமா என்பது நமது 'விதி'யைப் பொருத்து இருக்கு.

ஆனாலும் நம்ம மக்களுக்குப் பொறுமை கூடுதல்தான்.

நா.கண்ணன் 11/15/2008 10:26:00 AM

இதன் தாத்பரியம் என்னவென்று யோசித்தேன். ஒழுங்கற்ற வழியில் செலவு குறைச்சல். தனி மனித கவனத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது நமது போக்குவரத்து. கொஞ்சம் ரிப்லெக்ஸ் குறைவாய் இருந்தால் அடிபட வேண்டியதுதான். எனது சித்தி பையன் இப்படித் தப்பிப்பிழைத்தான்.

ஒழுங்கான முறையில் தனிமனித உயிர் மேலாகக் கருதப்படுகிறது. அங்கு பொது ஒழுங்கு மதிக்கப்படுகிறது. போக்குவரத்து ஒரே சீராக இருக்கிறது. தனிமனித ஓய்ச்சல் குறைவு. 3ம் உலக நாடுகள் எது நல்லது என்பதை தேர்வு செய்ய வேண்டும்!