கொரியாவில் கல்விக்கு முதலிடம்!

கல்விக்கு முதலிடம் தரும் நாடு இந்தியா. சரஸ்வதி என்ற ஒரு கடவுளையே இத்துறைக்கென்று இந்தியா வைத்திருக்கிறது. ஆயினும் கொரியா, கல்லூரித்தேர்விற்கு தரும் மதிப்பைப் பார்க்கும் போது ஆடிப்போய்விட்டேன். சமீபத்தில் கொரியா டைம்ஸ் -இல் வந்த சேதியைக் கீழே தந்துள்ளேன்.

கல்லூரியில் மாணவர்கள் நுழைவதற்கான தகுதித்தேர்வு அங்கு நடக்கிறது. அத்தேர்வு நடக்கும் போது மாணவர்கள் தாமதமாக வந்து பரிட்சை எழுதும் வாய்ப்பை இழந்துவிடக்கூடாதென்று அரசு, அன்று எல்லோரையும் தாமதமாக வேலைக்குப் போகலாம் என்கிறது! காரணம் எல்லோரும் விழுந்தடித்துக்கொண்டு ஒரே நேரத்திற்குப் போனால் போக்குவரத்து தடைப்படும். மாணவர்கள் பஸ்ஸை, டிரெயினை விடுவர். பரிட்சை எழுதாமல் போவர், எனவே,

1. மாணவர் அற்றவர் ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு வரலாம்,
2. அன்று அதிக அளவில் குகை ரயில் ஓடும்,
3. அதிக அளவில் பஸ்கள் ஓடும்

இதற்கெல்லாம் மேலாக ஒன்று செய்கிறது கொரியா. இதை எந்த நாடும் யோசித்துக் கூடப் பார்த்திராது. அதுதான், பரிட்சை எழுதும் நேரத்தில் விமானப் போக்குவரத்திற்கு தடை என்பது. காரணம்? ஆங்கிலப் பரிட்சையில், ஒலிநாடா கேட்டு, கேள்விகளுக்கு பதில் சொல்லும் தேர்வை விமானச் சத்தம் கெடுத்துவிடுமாம்! அப்படிப் போடு அருவாளை!

நம்ம ஊர் மாணவர்களை நினைத்தால்! எவ்வளவு இடைஞ்சல்களுக்கு நடுவில் அவர்கள் படித்து முன்னுக்கு வருகிறார்கள். வீட்டில் சண்டை! பரிட்சை அன்றைக்கு பவர் கட்டு! அன்று பார்த்து பஸ் நிரம்பி வழியும். கல்லூரியில் காற்றுக்காக ஜன்னலைத்திறந்து வைத்தால் போக்குவரத்தின் நாரகாச ஹார்ன் ஒலி!

தமிழக மாணவர்களை கோயிலில் வைத்துக் கும்பிட வேண்டும். கொரிய அரசாங்கத்தையும்தான்!!


College Entrance Exam Today

By Kim Rahn Staff Reporter

The state-run exam for college entrance will take place today. More than 588,000 students will take the College Scholastic Ability Test (CSAT) at nearly 1,000 exam venues across the nation from 8:40 a.m. to 6:05 p.m., according to the Ministry of Education, Science and Technology.

Measures will be taken nationwide to help students take the exams without hitches, including traffic control and the adjustment of business hours at offices. Workers at government offices and public firms across the nation, except Jeju Island, will be allowed to arrive at work by 10 a.m., an hour later than the usual 9 a.m. This measure is to prevent traffic jams in the early morning, so that test-takers can get to the exam venues in time.
Students check the place where they will take the college entrance exam at Ewha Girls' High School in Seoul, Wednesday, a day ahead of the state-run College Scholastic Ability Test (CSAT). More than 588,000 students nationwide will take the CSAT at 996 exam venues from 8:40 a.m. to 6:05 p.m. today.


Subway operators will increase the frequency of trains between 6 a.m. and 10 a.m. as will bus companies. To prevent traffic jams, parking will be banned within a 200-meter radius of venues.

The Civil Aviation Safety Authority will restrict aircraft operations near the exam sites so that noise will not disturb students during English language listening tests.
A total of 125 flights, both domestic and international, operated by national and foreign carriers will have their takeoff schedules altered between 8:35 a.m. and 8:58 a.m. and 1:05 p.m. and 1:35 p.m. Air travelers are required to check their flight schedule in advance.

During these times, trains will not use their horns except for an emergency, Korail said.

The test results will be released on Dec. 10.

rahnita@koreatimes.co.kr

The Korea Times

3 பின்னூட்டங்கள்:

கிஷோர் 11/18/2008 08:24:00 PM

இந்த மாதிரி வசதி எல்லாம் செஞ்சு கொடுக்காம, ஸ்கூல் ஃபர்ஸ்ட் எடு, காலேஜ் ஃபர்ஸ்ட் எடுனு சொன்னா நாங்கல்லாம் எப்படி எடுக்கறது?

நா.கண்ணன் 11/19/2008 07:50:00 AM

உண்மைதான் கிஷோர். குழைந்தைகள் படிக்கும் போது வீட்டில் அமைதிகாக்க வேண்டும் எனும் சமூக நாகரீகம் கூட நம் வீடுகளில் கடைபிடிக்கப்படுவதில்லை? என்ன செய்ய? இந்தியா இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகமாக உள்ளது!

thenali 11/19/2008 09:00:00 AM

//இந்த மாதிரி வசதி எல்லாம் செஞ்சு கொடுக்காம, ஸ்கூல் ஃபர்ஸ்ட் எடு, காலேஜ் ஃபர்ஸ்ட் எடுனு சொன்னா நாங்கல்லாம் எப்படி எடுக்கறது?//

உங்களை என்ன கொரியவிலயா ஸ்கூல் ஃபர்ஸ்ட் காலேஜ் ஃபர்ஸ்ட் எடுக்க சொன்னாங்க? ஒரே சூழலில் படிக்கும் நம்மூர் பசங்களுக்கு மத்தியில்தானே? ;-)