முப்பதில் பேரன் பெற்றால்? (கொரிய சினிமா)

எனக்குப் பொதுவாகவே கொரியன் நகைச்சுவைப் படங்கள் பிடிக்கும். இவர்கள் ரொம்பவும் வித்தியாசமாக யோசிப்பவர்கள். மேலும் விஷுவல் மீடியா என்பதை நன்கு உணர்ந்து படம் எடுப்பவர்கள். எல்லாக் கல்லூரி மாணவர்களும் ஒட்டு மொத்தமாக ஒரு படத்தைச் சிபாரிசு செய்யும் போது பார்க்காமல் இருந்தால் எப்படி?

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். 15 வயதில் நாளமில்லாச் சுரப்பிகள் வேலை செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. பெண்களோ இப்போதெல்லாம் 9 வயதில் வயதிற்கு வந்து விடுகின்றனர். பள்ளிச் சிறார்களாக இருக்கும் போது இச்சை கூடி ஓர் கலவி நடந்துவிடுகிறது. நீங்களோ அப்பள்ளி விட்டு வேறு எங்கோ போய் விடுகிறீர்கள். உங்களுக்கு 38 வயதாகும் போது ஒரு பெண் "அப்பா! நான்தான் உங்கள் பெண். இவன் உங்கள் பேரன்" என்று வந்து நின்றால் எப்படி இருக்கும்?அதுதான் கதை! கதாநாயகன் ஒரு பிரபல வானொலியில், பிரபல நிகழ்ச்சியாளர். அவனது நிகழ்ச்சியில் ஒரு பெண் வாராவாரம் உணர்ச்சி ததும்பும் நிகழ்ச்சிகளைச் சொல்லி இவனிடம் அறிவுறை கேட்கும். இவனும் அவள் எப்படியும் தன் தந்தையுடன் சேர்ந்து வாழ வேண்டுமென்று அறிவுறுத்துவான். அதன் படியே அந்தப் பெண் ஒரு நாள் இவன் வீட்டுக்கதவைத் தட்டுவாள். அதன் பின் ஒரே வேடிக்கை என்று கொள்ளுங்கள். இவனுக்கோ இன்னும் கல்யாணமாகவில்லை. ஒரு பெண்ணை செட் அப் செய்து வீட்டிற்கு வரச் சொன்ன பொழுதில் பெண்ணும், பேரனும் வந்தால்?

முதலில் ஏற்றுக்கொள்ள மறுக்கும் இவன் எப்படி மாறுகிறான் என்பதுதான் கதை. பார்க்க வேண்டிய படம். நாங்க எங்கே கொரியா போய் பார்ப்பது என்று கேட்கிறீர்களா? கமல் எதற்கு இருக்கிறார்? அவர்தான் 'காப்பி கேட்' ஆச்சே! கொஞ்ச நாளில் தமிழில் கோலிவுட் மணத்துடன் வந்துவிடும். அதுவரை, கீழே உள்ள பாட்டைக் கேட்டு சந்தோஷமடையுங்கள். இது முழுப்படத்தின் வெள்ளோட்டம் போலுள்ளது!5 பின்னூட்டங்கள்:

Raj 1/12/2009 02:03:00 PM

ஒரு நல்ல படத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்....நன்றி...dvd கிடைக்குதான்னு தேடணும்

Raj 1/12/2009 02:06:00 PM

படத்தோட பேர் என்னங்க

மங்களூர் சிவா 1/12/2009 07:01:00 PM

படத்தோட பேரை சொன்னால் 'டோரண்ட்'களில் பிடித்துவிடலாம்.

மங்களூர் சிவா 1/12/2009 07:02:00 PM

படத்தோட பேரை சொன்னால் 'டோரண்ட்'களில் பிடித்துவிடலாம்.

நா.கண்ணன் 1/12/2009 07:16:00 PM

Speedy Scandal என்பது ஆங்கிலப் பெயர். இங்கு 'விரைவு' என்பது அவசரப்பட்டு குழந்தை பெற்றுக்கொள்வதைச் சுட்டுகிறது!

Trailer