தாயாகும் ஆண்!

பெண்மை அம் பூ அது!

பெண்ணாய் பிறந்து ஓர் ஆணாகிப் பின் தாய்மையால் பெண்மை கொண்டு மலரும் ஓர் பூ!
அமெரிக்காவில் எல்லாமே சேதிதான், எல்லாமே சோதனைதான். 'இது என் உடல், என் சொத்து' எனும் கருத்தாக்கமுள்ள அமெரிக்காவில் டிரேஸி எனும் பெண் 20 வயதில் தானொரு ஆண் பெண் உடலில் இருப்பதாக உணர்ந்தாள். எனவே நாளமில்லா சுரப்பிகளை ஏமாற்றி மீசை வைத்துக்கொண்ட ஆணானாள். ஆயினும் அவளது பெண் உறுப்பை அவள் மாற்றிக் கொள்ளாமலே ஒரு பெண்ணைத்திருமணம் செய்து வாழத்தலைப்பிட்டாள். பின் தன் மனைவிக்கு மகப்பேறு கிடையாது என்று அறிந்தபின். செயற்கை கருத்தரிப்பு முறையில் கருவுற்றாள். இவளது மனைவி இவனைச் சினைப்படுத்தினாள். இப்போது தாமஸ் எனும் ஒருகாலத்து டிரேஸி தாயாகி உள்ளாள். அவளைப் பொறுத்தவரை அவள் இன்னும் தன்னை ஆண் என்றுதான் சொல்லிக்கொள்கிறாள். பின் 'கருவுறுதல்'? "அதுவொரு இயற்கை இயல்பு" என்னால் முடிகிறது, நான் கருவுறுகிறேன். அவ்வளவே. குழந்தை பிறந்த பின் நான் அக்குழந்தைக்கு அப்பன், என் மனைவி தாய் என்கிறா(ள்)ன் 'தாமஸ்'

ஏதோ பட்டி விக்கிரமாதித்தியன் கதை போல் உள்ளது இந்நிகழ்வு!

It's My Right to Have Kid, Pregnant Man Tells Oprah

0 பின்னூட்டங்கள்: