சேரிநாயும் கோடி ரூபாயும் (சினிமா)

இந்த ஆண்டு உலகின் கவனத்தை இந்தியா கவரப்போவது ஒரு ஆங்கிலப்படத்தின் மூலமாக. இப்படத்தின் பெயர்: Slumdog Millionaire என்பது. இப்படத்தின் விவரம்:

Details: 2008, UK, Cert 15, 120 mins, Drama / Romance, Dir: Danny Boyle, Loveleen Tandan

With: Anil Kapoor, Azharudin Mohammed Ismail, Dev Patel, Freida Pinto, Irrfan Khan, Madhur Mittal, Rubina Ali

Summary: A poor teenager from the slums of Mumbai gets on the Indian version of Who Wants to Be a Millionaire? and progresses to the 20-million-rupee question

அதற்குள் இப்படம்
Producers Guild of America Awards
Screen Actors Guild Awards
Golden Globe award
பரிசுகளையும் ஆஸ்கார் விருதிற்கு 10 தலைப்புகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இப்படத்தைப் பாராட்டியிருக்கிறார் அமைச்சர் பா.சிதம்பரம் எனில் இப்படத்தில் இந்தியாவின் பொருளாதாரம் பற்றிய ரகசியம் ஏதோவொன்று உள்ளது!இப்படம் நிச்சயம் சர்ச்சையைக் கிளப்பக்கூடியது. இந்தியாவின் வறுமையை, ஏழ்மையைக் காட்டினால் நம்மவர்க்கு அது எப்போதும் பிடிப்பதில்லை, கூடுதலாக அதுவும் வெளிநாட்டார் காட்டினால் பிரச்சனைதான்!

உள்ளதை உள்ளபடி காண்கின்ற தைர்யம் உள்ளவனுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும். உண்மைதான் இது சேரி வாழ்வு பற்றிப் பேசுகிறது. அங்குள்ள ஏழ்மை, வறுமை, கொடுமை, சூது, வஞ்சகம் எல்லாவற்றையும் பேசுகிறது. ஆயினும் இச்சூழலிலும் எதிர்நீச்சல் போட்டு வாழ்வும், காதலும் வெற்றி கொள்கிறது என்று படம் காட்டுகிறது. இதுவொரு நம்பிக்கை தரும் படம். 100 கோடியைத்தாண்டி விட்ட இந்தியா, சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் தாண்டிவிட்ட இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எண்ணும் போது 'பகீர்' என்று இருக்கும். ஆயினும் நம்பிக்கையின் பேரில்தான் நமது அடுத்த அடி இருக்கமுடியும்! என்பதை இப்படம் தெளிவாகச் சுட்டுகிறது.அருமையான படப்பிடிப்பு. Danny Boyle, Loveleen Tandan இருவரும் கஷ்டப்பட்டு இப்படத்தை எடுத்துள்ளனர். Azharudin Mohammed Ismail அருமையாக நடித்துள்ளார். Freida Pinto விற்கு அதிக வாய்ப்பில்லை என்றாலும் பாந்தமாக நடித்துள்ளார். இதில் நடித்துள்ள குழந்தைகளைப் பாராட்ட வேண்டும். அப்படியொரு நடிப்பு. ஏ.ஆர்.ரகுமான் இசை. அதற்குள் விருது பெற்றுவிட்டார். இந்த ஆண்டு ஆஸ்கார் நிகழ்வில் இசை அமைக்கப்போகிறாராம். ஒரு தமிழன் இவ்வளவு உயர்ந்துள்ளது உண்மையாகவே மனதிற்கு மகிழ்வளிக்கிறது. கட்டாயம் பார்க்க வேண்டிய படம்!

0 பின்னூட்டங்கள்: