பால் நினைந்தூட்டும்...

இந்த வீடியோ அமெரிக்காவில் அதிகம் பேசப்படுகிறது. காரணம், ஒரு வெள்ளையினத்தாய் ஒரு கருப்பினக் குழந்தைக்கு முலைப்பால் ஊட்டுகிறாள். கதையைக் கீழே கொடுத்துள்ளேன்.

இப்படி வாடும் குழவி கண்டு முலைப்பால் சுரப்பதுதான் உண்மையான தாய்மை. இப்பெண் அழகான தாய். கிராமப்புரங்களில் இன்றளவும் இப்படிப் பால் கொடுக்கும் தாய்மார்களுண்டு. நகர்புர வாழ்வில் இது குறைந்து, வழக்கொழிந்துவிட்டது.

நம்மிடமுள்ள தாய்மையைத் தொலைத்துவிட்டு, "பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து" என்று கோயிலில் தேவாரம் பாடிக்கொண்டிருக்கிறோம்.Salma Hayek's Generous Breasts

Salma Hayek's breasts are in the news again, but not for what you might think. Famous for being "busty," Hayek was filmed breastfeeding a sick child in Sierra Leone by ABC News. Hayek was in Sierra Leone to support a tetanus-vaccination project and had this to say during her interview about her action:

"I thought about it, am I being disloyal to my child by giving your milk away? And I actually think that my baby would be very proud to share her milk. And when she grows up, I'm going to make sure that she continues to be a generous, caring person. And I think that's the best thing I can give her as a mother."

Hayek then recounts a family story in which her great grandmother breastfed a stranger's child in the street of her small village because the baby's mother had no milk, and how affected she was by that story.

According to the Time article, men discourage women from breastfeeding because they believe women cannot have sex if they are still nursing. Hayek was consciously trying to promote breastfeeding in Africa through her actions because breastfeeding is the single most important strategy to lower infant mortality rates in Africa.

We'll see if Hayek's actions have any effect on attitudes about breastfeeding in Sierra Leone. In the United States, Hayek's public "cross-feeding" of another woman's child sparked all kinds of debate from unconditional support to concerns over the class and race implications. Yes, and yes. However, what seems most important is that at that moment, a hungry child was fed.

As Hayek says during the interview: "I was able to feed a baby who was very hungry"

Sometimes it can be that simple.

என் சினிமா (இது சினிமா அல்ல)

நான் நிறைய சினிமாப் பார்ப்பேன். இப்போதெல்லாம் என் வலைப்பூவில் ஒரே சினிமா விமர்சனமாப் போச்சு. அதே போல் நிறையக் கனவு காண்பேன். இவை என் வாழ்வை இவ்வளவு ஆக்கிரமிப்பதால் அது பற்றி ஆழ யோசிப்பதுண்டு. சில நேரம் கனவிலேயே யோசித்து கனவின் பொருளை உணர்ந்து கொள்வேன். பரனூர் பெரியவரும் அடிக்கடி கனவு நிலையை உதாரணமாக எடுத்தாள்வார். எனவே வேதாந்தத்தை நன்குணர இவை எனக்கு உதவுகின்றன.

ஆதியில் மண்ணோடு, மண்ணாக ஆத்துமா 'சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்து முடிவில் பெரும் பாழாய்' கிடந்தது. ஜீவனின் மேல் இறக்கம் கொண்டு இவனுக்குக் கொஞ்சம் சினிமாக்காட்டலாமென்று இறைவன் பிரபஞ்சத்தை உருவாக்குகிறான். ஒரு நீண்ட பரிணாமத்திற்குப் பின் ஜீவனுக்குதன்னுணர்ச்சி வருகிறது? தான் யார் என்ற கேள்வி வருகிறது? தான் காண்பது நிஜமா? இல்லை கனவா? எனும் கேள்வி. கனவில் காண்பதை நிஜம் என்பதா? இல்லை நிஜத்தில் காண்பதைக் கனவென்பதா? கனவு நிஜத்தின் நீட்சியா? இல்லை நிஜம் கனவின் நீட்சியா?

காண்கின்ற கனவு நிஜமில்லை என்றாலும் கனவில் படும் அவஸ்தையை உண்மை என்றே உணர்கிறோம்.கனவு எனும் சினிமாவை யார் ஓட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. கனவு நிஜத்தின் பிரதிபலிப்பு என்று கொண்டாலும் நிஜத்தில் காணாத் பல காட்சியில் கனவில் வந்து நிற்கின்றன. கனவின் பரிமாணம் நிஜத்தை விட அகலமாய் உள்ளது. நிஜத்தின் நியதிகள் கனவில் பலிப்பதில்லை. எனவேதான் கனவு சுவாரசியமாக உள்ளது.

கனவுச் சினிமாவை நான் ஓட்டவில்லை என்றால், நிஜ வாழ்வின் சினிமாவை மட்டும் நான் ஓட்டுகிறேன் என்று ஏன் நம்பவேண்டும்? நாம் எண்ணிச் சில காரியம் செய்கிறோம். நல்ல பலனும் வருகிறது, தீய பலனும் வருகிறது. நல்லது வந்தால் அது நான் செய்தது என்று சொல்லும் நாம் கெட்டது நடக்கும் போது இறைவனை ஏன் பழிக்கிறோம் என்று தெரிவதில்லை. ஈழத்துப்பிரச்சனை ஆரம்பித்த காலத்திலிருந்து நண்பர்கள் கேட்கும் கேள்வி இது? ஏன் இன்னும் ஓர் அவதாரம் நிகழவில்லை? என்று! ஏன் நிகழ வேண்டும்? என்றும் கேட்கலாம்தான். நாம் செய்யும் செய்கைகளின் முழுப்பொறுப்பை ஏற்கும் திடம் நமக்கு இல்லாதவாறு வாழ்வு சிக்கலாக (complex) உள்ளது. ஒரு சின்ன வேதியல் சேர்க்கைகூட ஏன்
அவ்வாறு நிகழ்கிறது என்று விளக்கமுடியாத அளவு வாழ்வு சிக்கலாய் உள்ளது. இந்நிலையில் நான் செய்யும் காரியங்கள் என்னால் நடந்தது என்று எண்ணுவதைவிட
அதுவாக நடந்தது, நான் ஓர் உபகரணமாக இருந்தேன் எனும் போது வாழ்வின் பாரம் குறைகிறது. எத்தனை பேர் தீக்குளித்துச் சாகின்றனர்? எவ்வளவு அவலம்? இந்த பாரத்தைத்தாங்கும் திறன் நமகுள்ளதா? என்றால் இல்லை என்பதே உண்மை. புனரபி மரணம், புனரபி ஜனனம். தன் மகனைக் கொடுத்த தாய் அடுத்த வேளை சோறு உண்ணாமல் இருக்க முடியவில்லை. துக்கம் ஒரு பக்கம், வாழ்வு ஒரு பக்கம் என ஓடிக்கொண்டே இருக்கிறது. பார்த்துக் கொண்டே இருந்த நாம் திடீரென்று ஒரு நாள் போய்விடுகிறோம். ஆனால் கனவு தொடர்கிறது. என் கனவு, உன் கனவு என்றில்லை. பொதுவாய் கனவு தொடருகிறது. சினிமாவில் பாதியில் எழுத்து போனவனுக்காக சினிமா நிற்பதில்லை, என்பது போல்.

பார்த்தன் பெரிய சைதன்யத்தைக் கண்ட போது மிரண்டு போய் நான் கொல்ல மாட்டேன், நான் கொல்ல மாட்டேன் என்றான். அட அசடே! நீ என்று உருவாக்கினாய், இன்று கொல்ல? நான் உருவாக்கினேன் நான் கொல்கிறேன். நீ சும்மா உட்கார்ந்து வேடிக்கை பாரு! என்கிறான் கண்ணன்.

வாழ்வே ஓர் வேடிக்கைதான். அண்டப்பெரும் பாழில் ஆழ்ந்து கிடந்த ஜீவனுக்கு இறைவன் நடத்தும் சினிமா, நம் வாழ்வு. நம் வாழ்வில் அன்னை வருகிறாள், போகிறாள், தந்தை வருகிறார் போகிறார், உறவு, நண்பர்கள்..இப்படி..ஆயிரமாயிரம்..வந்து போகின்றனர். நாமும் பலர் வாழ்வில் வந்து போகிறோம். எல்லாம் நடத்தும் இயக்குநர் எங்கோ மறைவில்.

நாம் நாடகமாடுகிறோம் என்று தெரியாமலே நடிக்கும் நடிகர்கள் நாம். ஒரு நடிகை நாடகம் பார்ப்பது போல். நடிப்பிற்குள் நடிப்பு, நாடகத்துள் நாடகம். நிஜத்துள் கனவு, கனவுள் கனவு. அடுக்கடுக்கு வாழ்வில் ஒன்றில் விழுந்தால் இன்னொன்றில் எழுகிறோம். என்ன அதிசயம்?

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு


சபாஷ்!

ஏழு பவுண்ட்டு (ஆங்கிலப்பட்ம்)

பிரபல ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித் நடித்திருக்கும் அருமையான படம் ஏழு பவுண்டு. கதைச்சுருக்கம், பட வெள்ளோட்டம் இவைகளைக் கீழே தந்துள்ளேன். கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு சிறப்புப் பெறும். இப்படத்தின் சிறப்பு அதன் கதைதான். ஓர் பாபம் செய்துவிட்டுப் பரிகாரம் தேடும் கதை. இதுவும் கமல் பிராண்டில் வரவேண்டிய படம்தான்.

செல்பேசியினால் ஓர் விபத்திற்கு உள்ளாக 7 பேர் சாவிற்குக்காரணமாகிப் போகிறார் ஓர் விண்வெளி விஞ்ஞானி. இப்பாவத்தைக் கழிக்க அவர் தன் உடலிலிருந்து ஒவ்வொரு உறுப்பாக ஒவ்வொருவருக்குத்தானம் பண்ணி அவர்களை உயிர்வாழ வைக்கிறார். உண்மையில் நமது உடல் நாம் இறந்த பின்னும் வாழும் வகை என்பது உறுப்பு தானம் செய்வதே. வாழும் போதே மற்றோரை வாழவைக்க வேண்டுமெனில் இரத்ததானம், சிறுநீரகதானம் (இரண்டில் ஒன்றைக் கொடுக்க முடியும்), எலும்புநீர், நுரையீரல் பகுதி இப்படிப்பல கொடுக்க முடியும். நம்மவர்கள் உயிரைக்கொடுத்த சாமிக்கு வெறும் மயிரைக்கொடுக்கவே தயங்குபவர்கள். அந்த வகையில் இப்படம் மிகவும் தேவையான மனோபாவத்தைத் தரக்கூடிய நல்ல படம்.
Seven Pounds is a 2008 film, directed by Gabriele Muccino. Will Smith stars as a man who sets out to change the lives of seven people. Rosario Dawson, Woody Harrelson, and Barry Pepper also star. The film was released in theaters in the United States and Canada on December 19, 2008 by Columbia Pictures.


Plot


Two years ago Tim Thomas (Will Smith) was in a car crash, which was caused by him using his mobile phone; seven people died: six strangers and his fiancée, Sarah Jenson (Robinne Lee).

A year after the crash, and having quit his job as an aeronautical engineer, Tim donates a lung lobe to his brother, Ben (Michael Ealy), an IRS employee. Six months later he donates part of his liver to a child services worker named Holly (Judyann Elder). After that he begins searching for more candidates to receive donations. He finds George (Bill Smitrovich), a junior hockey coach, and donates a kidney to him, and then donates bone marrow to a young boy named Nicholas (Quintin Kelley).

Two weeks before he dies he contacts Holly and asks if she knows anyone who deserves help. She suggests Connie Tepos (Elpidia Carrillo), who lives with an abusive boyfriend. Tim moves out of his house and into a local motel taking with him his pet box jellyfish. One night, after being beaten, Connie contacts Tim and he gives her the keys and deed to his beach house. She takes her two children and moves in to their new home.

Having stolen his brother's credentials, and making himself known by his brother's name Ben, he checks out candidates for his two final donations. The first is Ezra Turner (Woody Harrelson), a blind meat salesman who plays the piano. Tim calls Ezra Turner and harasses him at work to check if he is quick to anger. Ezra remains calm and Tim decides he is worthy.

He then contacts Emily Posa (Rosario Dawson), a self-employed greeting card printer who has a heart condition and a rare blood type. He spends time with her, weeding her garden and fixing her rare Heidelberg printer. He begins to fall in love with her and decides that as her condition has worsened he needs to make his donation.

His brother tracks him down to Emily's house. Ben then demands that Tim return his IRS ID to him. Tim leaves and returns to the motel. He fills the bathtub with ice water to preserve his vital organs, climbs in, and then pulls his poisonous jellyfish into the water with him. The jellyfish stings him and he dies. His friend Dan (Barry Pepper) acts as executor to ensure that his organs are donated to Emily and Ezra. Ezra Turner receives his corneas and Emily receives his heart. Afterwards, Emily meets Ezra at a concert and they begin to talk.

Source: Wikipedia

கொரிய ஊடகத்தில் இந்தியப்பள்ளி