தென்கொரியத் துயரம்

அதிபர் ரோ இப்படித் திடீரென அரசியல் காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்று இளங்கோ எழுதியது கொரியாவில் நடைமுறைப்படுகிறது, ஆனால், தமிழ்நாட்டில் நடைபெறுவதில்லை. அதுவே அரசியல் நாணயம் எங்கு இருக்கிறது என்பதைச் சுட்டுவதாக உள்ளது. அரசியல் என்றாலே ஊழல் இருக்கும். ஒது பொது அறிவு. புஷ் எவ்வளவு பெரிய ஊழல் பேர்வழி? ஆனால், அமெரிக்காவும் சிரித்துக்கொண்டு அவரை மன்னித்து (ஒருமுறை அல்ல, இருமுறை) வழி அனுப்பிவிட்டது.சரி, அடுத்து வந்த ஒபாமா, வஞ்சம் வைத்து அவரைப் பழி வாங்கவில்லை. அவர் பாட்டுக்கு தன் வழியில் அரசியல் செய்கிறார். ஆனால் ஆசியாவில் பாருங்கள்! ஒரு ஆட்சி மாறியவுடன் அடுத்த ஆட்சி கங்கணம் கட்டிக்கொண்டு பழி வாங்கக் காத்திருக்கிறது. ஜே.ஜே கருணாநிதியை வேட்டியை உருவி கேவலப்படுத்தியும், அவரை சட்ட சபையில் சேலையை உருவியதும், எவ்வளவு தூரம் நாம் அரசியல் செய்யும் வழிமுறைகளையும், குடியாட்சி இறையாண்மையையும் அறிந்துள்ளோம் என்று காட்டுகிறது. கொரியாவும் இவ்வழியிலேயே இப்போது செயல்பட்டு இருக்கிறது. அதிபர் ரோ அவர்கள் ஆளும் போது வாயைப் பொத்திக் கொண்டிருந்தவர்கள், அவர் பதவியை விட்டு இறங்கியதும் இம்சைப்படுத்தி, கேவலப்படுத்தி, தற்கொலை உணர்வை அவருளூட்டி அவரைக் கொன்று விட்டனர். அப்படித்தான் இங்குள்ள பெரும்பாலோர் கருதுகின்றனர்.

மிகவும் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்து ஒரு நாட்டின் உயர் பதவியைப் பெற்ற கடும் உழைப்பாளி ரோ. அவரது இழப்பு, கொரியாவின் இழப்பு. அவர் சாகத்துணியும் முன் எழுதிய குறிப்பு இதோ:

(I am) indebted to too many people.

Many have suffered too much because of me.

The pain that will come is unfathomable.

The rest of (my) life would only burden others.

(I) cannot do anything due to bad health.

(I) cannot read nor write.


Do not grieve too much.

Aren't life and death a piece of nature?

Do not feel sorry.

Do not blame anyone.

It is fate.


Cremate (me).

And just leave a very small stone slab near home.

(I) have thought (about it) for a long time.


(Saved on his home computer file at 5:44 a.m. Saturday. File titled, "Many have suffered too much because of me.")மாணவர்கள் துயர் பகிர்தல்
துக்கச் சேதிப்பகிர்வுகாகிதக்கொக்கு. கொக்கு விண்ணுலகம் சென்று மறந்தவருக்கு சமாதானம் வழங்கும் என்பது நம்பிக்கை

2 பின்னூட்டங்கள்:

வனம் 6/01/2009 03:36:00 PM

வணக்கம் கண்ணன்

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" ஒத்தவரியில மொத்த பதிவையும் சொல்லீட்டிங்க

ஹம்ம்ம்ம..... அவருக்கு மனசாட்சி இருக்குது

இராஜராஜன்

கிருஷ்ணமூர்த்தி 6/02/2009 01:30:00 PM

கொஞ்சம் உப்புப் போட்டு சாப்பிடுகிறவர் போல, பாவம்!

இங்கே தமிழ்நாட்டில், அதெல்லாம் எடுபடாது. சிலப்பதிகாரக் கண்ணகிக்கு முச்சந்தியில் சிலை வைத்து விட்டு, எவ்வளவு தப்பு வேண்டுமானாலும் செய்யலாம். மகன், பேரன், துணைவியார் மகள் என்று பரம்பரை, பரம்பரையாக, மாநிலம், மத்தியில் பதவி சுகம் தந்து,நெஞ்சுக்கு நீதி சொல்லிக் கதைக்க முடியும்!