டிவிட்டருக்கு இணைச்சொல்?

Twitter

என்பது மிகப்பிரபலமாகிவரும் ஒரு இணையப்போக்கு.
இதுவொரு குறுஞ்சேதியோடை. சின்னச் சின்ன தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் ஊடகம்.
சும்மா உட்கார்ந்து கதையளக்க முடியாது. 140 அட்சரம். அவ்வளவுதான்.
வள்ளுவருக்குப் பிடிக்கும்.
இதை 'நான் என்ன செய்கிறேன்?' எனும் கேள்விக்கு விடையாக அறிமுகப்படுத்தினாலும்,
இது சும்மா, 'நான் மதிய உணவிற்குப் போகிறேன்' 'குட்நைட், தூங்கப்போகிறேன்' என்று சொல்ல வந்ததல்ல என்று தோன்றுகிறது.
ஈரான் தேர்தல் விவரம் சுடச்சுட இவ்வோடையில் பரிமாறியிருக்கிறது.
இதை குறுவலைப்பூ என்று கருதுவோருமுண்டு. நான் அந்தப் பள்ளி.
என் நோக்கில் டிவிட்டர் என்பது சிறிய வலைப்பதிவு.
தினமொரு ஆக்கம் செய்ய உதவும் பொறி
குறிப்பிட்ட சின்ன வட்டத்திற்குள் உங்கள் ஆக்கத்திறனைக் காட்ட உதவும் பொறி.
இதில் நான் தினம் எழுதுவதை என் வலைப்பதிவில் கண்ணுறலாம் ஆனால், உள்வட்டத்திற்குள் வர வேண்டுமெனில் டிவிட்டரில் பதிவு செய்ய வேண்டும்.

சரி இதைத் தமிழில் எப்படி அழைப்பது?

குறும்பூ (குட்டி வலைப்பூ)
சின்னச்சிட்டி (சிட்டி என்றால் கடிதம்)
ஹைப்பூ (ஹைக்கூ + வலைப்பூ)


சின்னதாக அழகாக டிவிட்டர் என்பதுடன் ஒத்திசைவாக (rhym with twitter) ஒரு சொல் வேண்டும்!

8 பின்னூட்டங்கள்:

dondu(#11168674346665545885) 6/23/2009 01:47:00 PM

சுட்டர்

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவிசங்கர் 6/23/2009 04:33:00 PM

microblogging = குறும்பதிவு

நா.கண்ணன் 6/23/2009 04:45:00 PM

சிட்டி, செட்டி, சுட்டி. Twitter என்பது சிறுபறவை எழுப்பும் சிற்றொலி. தேன்சிட்டு, சிட்டுக்குருவி இவற்றிலிருந்து "சிட்டி" எனும் சொல் வருகிறது. சிட்டி எழுதுபவர் 'சிட்டர்'. இச்சொல்லாட்சி திருவாசகத்தில் வருவதை நா.கணேசன் மின்தமிழ் குழுமத்தில் சுட்டியுள்ளார். பிற இந்திய மொழிகளில் 'சிட்டி' என்றால் கடிதம் என்றும் வருகிறது. கடிதம், சேதி என்பது twitterன் முக்கியப் பயன்பாடு. இதை microblogging என்றோமெனில் "குறும்பூ" (குறுகிய வலைப்பதிவு, வலைப்பூ) என்பது என் சிபாரிசு. கொஞ்சம் ஆங்கிலவாடை தேவையெனில் "ஹைப்பூ" என்பது மாற்று (ஹைக்கூ + வலைப்பூ)! ஹைப்பூ கொஞ்சம் hype ஆகவும், trendy ஆகவும் அமையும்.

மு.மயூரன் 6/23/2009 05:30:00 PM

டிவிட்டர் ஒரு தனி நிறுவனத்தின் பெயர்.
வலைபப்திவுகளை நாம் "ப்ளாக்கர்" என்று சொல்ல முடியாதல்லவா?

டிவிட்டர் தொடக்கம் லகோனிக்கா வரை வழங்கும் இச்சேவையின் பொதுப்பெயர் microblogging தான். எனவே குறும்பதிவு என்பதே பொருத்தம் என்பது எனது கருத்து

Vasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன் 6/23/2009 10:26:00 PM

'சிட்டி' நல்ல கலைச்சொல்லாக்கம், டாக்டர் கண்ணன்.
பயன்படுத்தத் துவங்கியாச்சு!

நா.கண்ணன் 6/23/2009 10:37:00 PM

நன்று வாசு. நா.கணேசனும் இச்சொல்லை பரவலாக்கும் படி மின்தமிழில் வேண்டியுள்ளார். இது டிவிட்டரின் நேரடி சொல்லாக்கமல்ல. அதாவது, அது தனியார் கம்பெனி பெயரென்று கொண்டால். டுவிட்டர் செய்யும் செயலைக் குறித்தே இச்சொல் பயன்படுகிறது.

நா. கணேசன் 6/23/2009 10:58:00 PM

On Jun 23, 4:22 am, "N. Kannan" wrote:

> அன்பின் நா.க
> டிவிட்டர் ஒரு தனி நிறுவனத்தின் பெயர். வலைபப்திவுகளை நாம் "ப்ளாக்கர்" என்று
> சொல்ல முடியாதல்லவா?
> டிவிட்டர் தொடக்கம் லகோனிக்கா வரை வழங்கும் இச்சேவையின் பொதுப்பெயர்
> microblogging தான். எனவே குறும்பதிவு என்பதே பொருத்தம் என்பது எனது கருத்து


மைக்ரோ = நுண்- என்று மொழிபயர்ப்பது வாடிக்கை.

மைக்ரோ-ப்லாக்கிங் = நுண்பதிவிடல்.

யூனிகோட் நிறுவனம் தமிழில் ஒருங்குறி நிறுவனம் ஆவதுபோல்.
ட்விட்டர் கம்பனிச் சேவையைப் பயனிக்கும் சிட்டுகள்/சிட்டர் அனுப்பும்
நுண்மடல்கள் ”சிட்டிகள்”!

எழுத்தாளர் (“சிட்டி”)யில் இருந்து பாடகருக்கு வருவோம் :)
மைக்ரோப்லாக் நுண்மடல் = நுண்ணி/உண்ணி. (ஈரம் < நீர்-. அதுபோல் உண்ணி <
நுண்ணி).

நுணாக் காய் = சிறிய காய்வகையில் ஒன்று. இலந்தை வகை.
அப்பெயர் பெற்றது = திரு-நுணா - திரு-நணா. பவானி நதி காவிரியை
வவ்வும் வவ்வானியின் ஊர்ப்பெயர்.

மைக்ரோப்லாக் = நுண்பதிவு.
மைக்ரோபிலாக் நுண்மடல் = நுணா/நுணல்/உண்ணி என்றும் சுருங்கக் கூறலாம்.

நா. கணேசன்

இசை 6/23/2009 11:57:00 PM

Twit-Twit sound making birds are twitters.

In tamil, we say keech-keech... kuruvigal iyalbaga intha vagaiyil adakkam.

chitti enbathai vida.. chittu enbathu saala porunthum.

The small noise making bird.. Chittu.. :) Twittu-Chittu : Twitter-Chitter: