மின்னுலகின் நுண்கிருமி

நுண்கிருமிகள் என்பவை ஒட்டுண்ணிகள். பாசி போல் அவைகளால் தனித்து வாழ முடியாது. பாசி சூரிய் ஒளிச்சக்தியை உள்வாங்கும் திறன் பெற்றது. ஆனால் நுண்கிருமிகள் ஒட்டுண்ணிகள். இது உயிரில் உலகில் சாத்தியமென்றால் மனிதன் உருவாக்கிய மெய்நிகர் உலகிலும் இது சாத்தியப்படுவது ஆச்சர்யம்.

Malware, short for malicious software, is software designed to infiltrate or damage a computer system without the owner's informed consent. The expression is a general term used by computer professionals to mean a variety of forms of hostile, intrusive, or annoying software or program code.

இந்த மால்வேர் சமீபத்தில் கொரியாவை ஸ்தம்பிக்க வைத்தது.கொரியாவின் கூகுள் போன்ற நேவர் (www.naver.com) செயலற்றது. கொரியப் பாராளுமன்றம் வரை இத்தாக்குதல் போயிற்று. DDOS எனும் மால்வேர் (மருவூ) இதற்குக் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டு எங்கள் கணிகளுக்கு அம்மைப்பால் குத்தினர். இந்த மருவூ உங்கள் கணினியில் வந்து உட்கார்ந்து கொள்ளும். சாதுவாக இருக்கும் (ஜோம்பி என்று பெயர். சோம்பி அல்ல Zombie). தன் ரகசியக் குறிகளை மற்ற கணினிகளுக்குப் பரப்பும். ஏதாவதொரு கணினி குறிப்பிட்ட நாளில் தன்னைத்தானே அழித்துக் கொண்டு மாயும்! என்ன கொடூரமான சிந்தனை! செயற்பாடு!!
இத்தாக்குதல் வடகொரிய அரசு செய்தது என்று பத்திரிக்கை சொன்னது. பொதுவாக கொரியாவைத்தாக்கும் 10 நுண்கிருமி பரப்பும் நாடுகளென அ.ஐ.கு (அமெரிக்கா), சீனா, ரஷ்யா, ஜெர்மனி, கொரியா, உக்கிரைன், இங்கிலாந்து, துருக்கி, செக், தைவான், பிற என்று ஒரு கணக்குக் காட்டுகிறது.

இது போல் இந்தியாவை இலக்கு வைக்கும் நாடுகளும் இருக்கும்தானே?

3 பின்னூட்டங்கள்:

ஆ.ஞானசேகரன் 8/04/2009 10:00:00 AM

நல்ல பகிர்வு

kalyan kumar 8/04/2009 11:53:00 AM

அரிய தகவலை எங்களுக்கு அறிவித்ததில் மகிழ்ச்சி. இந்த கேவலமாக நுண்கிருமியிலிருந்து நம் கணினிகளை காபந்து பண்ண முன்னெச்சரிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் டிப்ஸாக சொல்ல வேண்டுகிறேன்.

நா.கண்ணன் 8/04/2009 05:20:00 PM

DDOS னால் கொரியாவில் பல கோடிகள் நஷ்டம். வடகொரிய அரசு இதற்கென ஒரு துறையே வைத்திருக்கிறது என்கின்றன சேதிகள். பாகிஸ்தான் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் தொழிலே இதுதான்! நான் பேசும் தாக்குதல், அரசு இயந்திரத்தை முடக்கவும், அரசு நிருவனங்களை செயல் இழக்கச்செய்யவும் ஏற்பட்ட முயற்சி. ஆனால், சும்மா விளையாட்டாக பலர் இம்மாதிரி கிருமிகளை இணையத்தில் தூவிய வண்ணமே உள்ளனர். பெரும்பாலானவை மின்னஞ்சல் வழியாகவே வருகின்றன. Curiosity kills the cat என்பது பழமொழி. எனவே தெரியாத நபரிடமிருந்து வரும் எக்கடிதத்தையும் திறக்க வேண்டாம். நல்ல காபந்து செயலிகளை (anti-virus) போட்டுக்கொள்ளவும். தற்காப்பு எப்போதுமில்லத அளவு இப்போது தேவைப்படுகிறது.