아바타 - அவதாரம் (சினிமா)

இந்த அவதாரம் எனும் பதம் இவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதைப் பார்த்தால் இவர்களைத் திருத்த ஒரு அவதாரம் எடுத்தால் தேவலை என்றிருக்கிறது :-)



ஹாலிவுட்டில் இதைப் பெயரிட்டவர்கள் 'அவடார்', 'அவடார்' என்றுதான் சொல்கின்றனர். அங்கு 'த' ஒலி இல்லையென்றில்லை. Bath எனும் போது 'த' என்று ஒலிக்கிறார்கள். ஆனால் நாம் பத்மா என்பதை Badma என்று சொல்வது போல், பூரி என்பதை Buri என்று சொல்வது போல் அவதார் என்பதை மண்டையில் அடிக்குமாறு அவடார் என்கின்றனர்.

கொரியாவில் இவர்களுக்கு 'வ' வராது. எனவே அவதார் 'அபதா (아바타)' என்றாகிவிட்டது. நல்லவேளை 'அப்பத்தா' என்று அழைக்காமல் விட்டார்களே!

முப்பரிமாணத்தில் இப்படத்தைப் பார்த்த 43 வயது தைவான் சீனர் இதயம் நின்று போய் இறந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. அதன் பின் சீனாவில் அப்பத்தா பார்க்க பயப்படுகிறார்களாம். நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு விமர்சிக்கிறேன்.

5 பின்னூட்டங்கள்:

DHIVAKAR 2/02/2010 02:27:00 PM

இதுவே புது செய்தி! நானும் இதுநாள்வரை அவதார், என்றேநினைத்துக்கொண்டிருந்தேன்..

நன்றி..

திவாகர்

நா.கண்ணன் 2/02/2010 02:50:00 PM

படம் சூப்பர் ஹிட் என்று கேள்வி. படம் எடுக்கப்பட்ட விதம் மிகவும் நூதனமானது. ஒருவகையான மெய்நிகர் உலகை உருவாக்கிய வண்ணமே நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்தனர் என்று தெரிகிறது. மெல்லிய இதயத்தார் 3D படம் பார்க்க வேண்டாம் என்பது பொதுப்புரிதல்:-)

Chithan 2/02/2010 03:51:00 PM

படம் முழுவதுமே குறியீடுதான். வெள்ளையர்களை வில்லன்களாகக் காடியதிலும், நீலர்களது நிலத்தை அபகரிக்க அவர்களைப் போன்றே உருவாக்குவதும், ஆக்கிரமிப்புக்கு எதிராக நிலத்தவர் கிளர்ந்தெழுவதும் என் பல படிமங்களில் பயணிக்கிறது திரைப்படம். அதனால் தான் சீனா தடை செய்துவிட்டது என்பதை யோசிக்கவும்
சித்தன்

KSubashini 2/02/2010 09:25:00 PM

நான் பார்த்து மிகவும் ரசித்த ஒரு படம். அதுவும் குறிப்பாக 3D version . தொழில் நுட்பம், காட்சி அமைப்பு, கதை, மனித நேயம், பிரமாண்டம் இப்படி பல அம்சங்கள் உள்ளன. இறுதியாக படத்தின் நாயகன் எடுக்கும் முடிவுதான் அவதாரம்..:-) வீட்டில் டிவியில் பார்க்க வேண்டிய படமல்ல.. தியேட்டரில் ஆங்கிலத்தில் பார்த்து ரசிக்கவும்.

KSubashini 2/02/2010 09:26:00 PM
This comment has been removed by a blog administrator.