புவியன்பு உரை - ஒபாமா (ஓவல் அலுவலகம்)ஓபாமாவின் இந்த உரை உலகிற்கோர் விழிப்பு!

ஊழலும், வஞ்சமும், குறும் பார்வையும் நிறைந்த அரசியல் உலகில் இப்படிப் பட்ட தலைவர்கள் கூட இருப்பது நமக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. எண்ணெய் கசிவால் அமெரிக்கா மாசு பட்டுள்ளது. இச்சூழல் பிரச்சனையை ஒரு இராணுவப் பிரச்சனை போல் கருதி ஒபாமா அளித்திருக்கும் இவ்வுரை 21ம் நூற்றாண்டின் ‘உரத்த சிந்தனை’ யின் வெளிப்பாடு என்று சொல்லிவிடலாம். 70கள் தொடக்கம் சூழலியல் விஞ்ஞானிகள் தொடர்ந்து பேசி வந்த அறிவியல் உண்மைகள் கால் நூற்றாண்டுகளுக்குப் பின் அரசியல் தளத்திற்கு வந்திருக்கிறது. இச்சூழல் விழிப்புணர்வில் என் ஆய்வுகளும் இடம் பெறுகின்றன என்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். தொடர்ந்து விழிக்கும் மூன்றாம் உலகிற்கு ஒளியூட்ட பயிலரங்கள் நடத்தி வருகிறேன் என்று சொல்வதிலும் ஆனந்தம். இது நாம் ஒவ்வொருவரும் இணைந்து செயல்பட வேண்டிய பிரச்சனை. மற்றோரைக் கை காட்டுவதால் ஓடிப்போய் விடக்கூடிய பிரச்சனை அல்ல. ஒபாமா தனது பேச்சில் ஒளிவு மறைவின்றிச் சொல்வது போல், நம் பிழைகளை ஒப்புக்கொண்டு, திருந்தும் வழிகள் பற்றி யோசித்து, ஒளிமயமான எதிர்காலம் அமையும் எனும் நம்பிக்கையை ஊட்டும் வண்ணம் செயல்பட வேண்டும்.

வறட்டுத்தனமான நாத்திகம் ஒரு அரசியல் மாட்சிமையாகிப் போன தமிழகச் சூழலில், இறைமை உணர்வுடன் பேசும் ஒபாமாவின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது. இறைவன் கஷ்டங்களை நீக்குவதற்காக உருவான ஆசாமி இல்லை, கஷ்டங்கள் வரும் போது நமக்கு தெம்பு அளித்து அக்கஷ்டங்களில் இருந்து எப்படி மீண்டு எழுவது என்று ஊக்கமளிக்கும் நல்ல நண்பனே இறைவன். இதை ஒபாமா எவ்வளவு அழகாக சித்தரிக்கிறார்.

21ம் நூற்றாண்டை அமெரிக்காவின் நல்லிதயங்கள் வழி நடத்தட்டும்! இறைவன் அருள் எல்லோர்க்கும் கிட்டுக!

0 பின்னூட்டங்கள்: