பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் நா.கண்ணன் உரைஜீலை 1, 2010 அன்று மதியம் 2:30க்கு முனைவர் நா.கண்ணன் அவர்கள் ‘கிழக்காசிய நாடுகளில் தமிழ் ஆய்விற்கான வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் பாரதியார் தமிழ் புலம், பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையின் ஒலிவடிவம் இது. மேலே, ஒலிப்பெட்டி தெரியவில்லை என்போருக்கான புறத்தொடுப்பு இங்கே!நிகழ்வின் புகைப்படங்களைக் காண இங்கே சொடுக்குக!

13 பின்னூட்டங்கள்:

கிருஷ்ணமூர்த்தி 7/06/2010 12:10:00 AM

பிழைச் செய்தி வருகிறதே! ப[லேயர் எக்ஸ்டென்ஷனில் (.) இருப்பதாக விண்டோஸ் மீடியா ப்ளேயர் தகவல் பிழைச் செய்தி வருகிறது.

நா.கண்ணன் 7/06/2010 12:14:00 AM

I do not get such an error message! What is the problem?

Anonymous 7/06/2010 05:48:00 AM

There isn't a link to click!

ஜீவா (Jeeva Venkataraman) 7/11/2010 11:29:00 AM

தொடக்கத்தில் இம்மாதத்தின் பெயரில் தட்டச்சுப் பிழை போலும்...

Anonymous 7/11/2010 11:47:00 AM

The video is only 27 seconds long.
I didn't mean to complain. Sound's like an interesting lecture! Can't hear it unfortunately, in its entirety!

நா.கண்ணன் 7/11/2010 01:56:00 PM

அன்பின் ஜீவா: அது ஜூலை 1, 2010 ல் நடந்தது.

நா.கண்ணன் 7/11/2010 01:58:00 PM

Dear Anonymous:

The entire talk is in an audio file. I'm afraid your browser does not show the Windows Media Player (it does in my system). I have given an external link as well. The video is a short one. I'm sorry.

Anonymous 7/11/2010 05:11:00 PM

உங்கள் உரையை முழுமையாகக் கேட்க முடிந்தது.
நன்றி. சில கேள்விகள். இளங்கோவடிகள் மாற்று
மதத்தவர் என்று நினைவு. இவரால் ' நாராயணா
எனா நாவென்ன நாவே' என்று எப்படிச் சொல்ல
முடிந்தது! எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது.
எம் எஸ் குரலால். What was the context?
Did that story of churning of the Ocean went from the South to the North? Is Indra and Varuna from the
Silpadikaram days the, same ones mentioned in the vedic lore?
Next question. I feel that innocence is a prerequisite for Bakthi. Another
important thing for experiencing the Divine through Bakthi is the right atmosphere, created through rituals and
traditions. Once Innocence is lost and
when one moves away from traditions, Bakthi may be to hard to adopt. This is very true when you raise a child in the West. Appealing to their intellect becomes the alternative in introducing the divine!

நா.கண்ணன் 7/11/2010 07:02:00 PM

இளங்கோ அடிகள், வள்ளுவர் போன்றோர் உண்மையான secular outlook உள்ளவர்கள். செக்குலார் என்றால் நாத்திகம் என்பது போன்ற ஒரு மாயத்தோற்றம் வந்துள்ளது. அது பிழை. நம் சமயம் ஒன்றாக இருந்தாலும், புற சமயம் பற்றிப் புகழ்வாகப் பேசுதலே செக்குலிரிசம். எனவே இளங்கோ மிக அழகாக வைணவத்தைக் காட்சிப்படுத்துகிறார். அவர் வழியில் பின்னால் பெரியாழ்வாரும் பாடுவது கூடுதல் சிறப்பு.

சங்க காலம் என்பது வேத காலத்திற்கு பின். எனவே வேதக் கருத்துக்கள் ஆழத்தமிழ் மண்ணில் ஊன்றிவிட்ட காலமது.

பக்திக்கு முக்கியம் காதல். ஆராக்காதல். அவ்வளவுதான். அக்காதல் இருக்கும் போது கண்ணில் படும் காட்சிகளும், படாத காட்சிகளும் புலப்பட ஆரம்பிக்கும்.

Anonymous 7/11/2010 08:48:00 PM

//இளங்கோ அடிகள், வள்ளுவர் போன்றோர் உண்மையான secular outlook உள்ளவர்கள்.//
It is interesting you said that. But we Tamil Hindus never returned the favor. Or did we?

I happen to read some exchanges between Tolstoy and Gandhi. Tolstoy a devout Christian, and Gandhi a devout Hindu formed a deep friendship. Tolstoy's letter to an Indian revolutionary brought Gandhi's attention
to him. Here is the link
http://en.wikisource.org/wiki/A_Letter_to_a_Hindu.
Tolstoy even references the Kural.

I remember you writing that Narayana
is the Word Value for the Nirguna Brahman in the Vedas. I am stating this from memory. There was also a thread here in tamizmanam explaining the Tamil etymology of the word Narayana.
It made sense. To me civilization of the Tamils has to be older than the Vedas
and the Vedic civilization must have absorbed some of it. I clearly do not
mean that Silapadikaram is older than the Vedas, but the culture itself was mature before the arrival of the Vedic civilisation. Hence the Alwars didn't
feel the need to access the Divine through a foreign tongue.

நா.கண்ணன் 7/11/2010 10:44:00 PM

நாராயணன் எனும் சப்தத்திற்கு மிக ஆழமான பொருள்கள் உண்டு. சம்பிரதாயமாக காலட்சேபம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டிய நுண்பொருள்.

இந்தியக் கலாச்சாரமே அடிப்படையில் தமிழ் கலாச்சாரம்தான். வேத மரபுகள் அதிலிருந்து கிளைத்தவையே. ஆயினும் இதை ஆய்வு பூர்வமாக நிருவ நிறைய ஆய்வுகள் செய்ய வேண்டும். வைணவம் தன்னை ‘உபய வேதாந்தம்’ என்று அரசியல் காரணங்களுக்காகச் சொல்லிக் கொள்ளவில்லை. மணவாள மாமுனிகள் அகஸ்தியமும் (தமிழும்) வடமொழி போல் அநாதியான மொழியே என்று கூறுகிறார். தமிழ் மொழியின் வேர்பற்றை அறிய வைணவம் உதவலாம்.

Anonymous 7/16/2010 12:15:00 PM

காலட்சேபம் கேட்டெல்லாம் பல வருடங்கள் ஆகிவிட்டது. பழைய நினைவுகள். தெரு முனையில்,
பந்தல் போட்டு, தரையில் மணலைப் பரப்பி, உபன்யாசகர்களை வரவழைத்து, ராம நவமியை உற்சாகமாக நடத்துவார்கள். பட்டாபிஷேகம் அன்று, கண்டிப்பாக ஒலிபெருக்கியில், ஜகம் புகழும்
புண்ணிய கதை என்ற பாட்டு உண்டு. சுண்டலும் உண்டு, கல்யாணக் களை அன்று. உயர் நிலைப்
பள்ளிப் பருவத்தில் தொடர்ந்து, புலவர் கீரனை கம்ப ராமாயணச் சொற்பொழிவாற்ற அழைத்தார்கள். சின்ன வயதில் கதை கேட்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கே வரும்
பள்ளி நண்பர்களுடன் விளையாடப் போவேன். அங்கே பேசியதில், ஒரு இருபது சதம் புரிந்தததென்றால், இங்கே தமிழ் மணத்தில் படிப்பது நாற்பது சதவீதம் புரிகிறது! இந்தக் காலப்
பிள்ளைகளுக்கு இந்த அனுபவம் எல்லாம் இல்லை என்ற வருத்தம் உண்டு. புலம் பெயர்ந்தவர்கள்
பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில்தான் இதிகாசங்கள் அறிமுகமாகிறது!

Innocence என்பதை அறியாமை என்ற பொருளில் சொல்லவில்லை. சிறு குழந்தைக்கும் தாய்க்குமான உறவு என்ற
பொருளில், பக்தியைக் குறிப்பிட்டேன்.

நா.கண்ணன் 7/16/2010 01:36:00 PM

//Innocence என்பதை அறியாமை என்ற பொருளில் சொல்லவில்லை. சிறு குழந்தைக்கும் தாய்க்குமான உறவு என்ற
பொருளில், பக்தியைக் குறிப்பிட்டேன்.//

பல பா(ba)வங்கள் பேசப்படுகின்றன. எனக்கு தாச பாவம் பிடிக்கிறது. பக்திக்கு மதம் தடையில்லை என்று பாண்டியில் பேசும் போது தோன்றியது. பக்தியே மார்க்கமும், முடிவும். அவனே வழியும், வழிகாட்டுபவனும், முடிவும்.