ஆலவட்டம் 6

நந்துவின் சிந்தனாமொழி தமிழாக இருந்ததால் ஜே.கிருஷ்ணமூர்த்தி முதல் பார்வையில் உவப்பளிக்கவில்லை. ஜேகேயும் நம்ம வீட்டுப் பிள்ளைதான். ஆனால் பசுவிடமிருந்து கன்றைப் பிரிப்பது போல் வெள்ளையர் ஆதிக்கம் அடையாறு கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த கள்ளமற்ற சிறுவனை அவன் தாயிடமிருந்து, உறவுகளிடமிருந்து, தாய் மண்ணிடமிருந்து பிரித்துத் தனித்து கொடுமை செய்துவிட்டது. கிருஷ்ணமூர்த்தி சுந்தரத்தெலுங்கில் பேசிக்கொண்டு இருந்திருக்க வேண்டியவர். அவர் கடைசிவரை சொன்ன ஒரே தெலுங்குச் சொல், ‘அம்மா’ என்பது. அதுவும் தன் தாயைக் குறித்து அல்ல. அன்னிபெசண்ட் அம்மையாரை நோக்கி!! இந்தப் பிரிவினை, இத்தனிமை அவர் வேண்டிப் பெற்றதன்று. அவர் மேல் திணிக்கப்பட்டது. தங்கத்தைப் புடம் போடுவது போல் அவர் புடம் போடப்பட்டார். அவர் இந்திய மண்ணில் இயற்கையாக மலர்ந்திருக்க வேண்டிய மலர். இந்திய ஆன்மீக மரபின் ஒரு வித்து அவர். செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழம் அவர். வெள்ளையர் உலகம் கண்ட கோயில் யானை அவர்!!

இவர் கிடைத்ததால் இந்திய ஞான மரபு என்பது எவ்வளவு தீவிரமானது என்பதை முதன்முறை மேற்குலகம் கண்டது. இவரிடம் சமரசமே கிடையாது. ‘என்னை நீ தனிமைப் படுத்தினாயா! உலகே! நீயும் படு அந்த அவதியை!! என்று பழி தீர்த்துக் கொண்ட மார்க்கம் ஜே.கே மார்க்கம்! கொஞ்சம் மூர்க்கமானதும் கூட. பயித்தியமான சில கேசுகளுண்டு. ஆனால், அவர் கடைசிவரை சமரசம் செய்து கொள்ளவில்லை. இவரை ‘கிழக்கின் நட்சத்திரம்’ என்றனர். இவரை அவதார புருஷராக்கி கோயில் கட்டினர் (தேவாலயம்-சர்ச்). இவர் அது தோற்றுவிக்கப்பட்ட கணத்திலேயே அழித்துவிட்டார். இவரை உருவாக்கி காத்து வந்தஅன்னிபெசண்டின் நெஞ்சம் உடையும் வண்ணம் இவர் தியசோபிகல் சொசைடியை விட்டு விலகினார். Truth is a pathless land என்று நடக்க ஆரம்பித்துவிட்டார். அப்போது இவர் பதின்ம வயதினர். எங்கிருந்து வந்தது அந்த திடம்? அது வெறும் கோபம் தரும் பலமா? இல்லை, ‘அத்தைத்தின்று அங்கே கிடக்கும்’ இவ்வுலகை வெறுத்த மெய்மை தந்த திடமா (வைராக்கியம்)? குஜராத்தில் சுவாமி நாராயண் எனும் குழந்தை! இறைவனை நம்பி உலகைத் துறந்து வெளியே வந்துவிட்டது. இமயமலையெல்லாம் தனியே அலைந்தது. கல்லுக்கும் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் காவலன் யார்? ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியிடம் அறக்கட்டளை நிர்வாகிகள், ‘தாங்கள் இறந்துவிடும் பக்ஷத்தில் தங்கள் உடலை என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டனர். நம்மவூர் குருமார்களாக இருந்தால் ஒரு நீண்ட பட்டியல் தந்திருப்பர். தலையில் தேங்காய் உடை என்பதிலிருந்து ஆரம்பித்து சமாதி கட்டும்வரை. ஜேகே சொன்னார், ‘கடலில் எறிந்துவிடுங்கள்!’ என்று! கடைசிவரை அவர் எதிலும் சமரசம் செய்து கொள்ளவே இல்லை.

இவரை சமூகப் புரட்சியாளர் என்று காண்போருமுண்டு. இவ்வளவும் அவர் சாதித்ததற்கு அவர் மொழியிலிருந்து பெற்ற விடுதலை ஒரு காரணம். சமூகப் பதப்படுத்தல்கள் அதிகமற்ற தனிமை ஒரு காரணம். மொழியின் உண்மை வடிவைக் கண்டு மெய்சிலிர்த்தவர் ஜே.கே. ஆனால், அதை அடைவதற்கு முன் மொழியைச் சமூகம் பயன்படுத்தி வைத்திருக்கும் பதப்படுத்தலிலிருந்து விடுதலை பெற வேண்டும். ஜே.கேயின் பேச்சுக்களில் பெரும்பாலும் ஆங்கில மொழியின் வேர்ச்சொல் பற்றிய ஆய்வு இருக்கும். வேர்ச்சொல் மிக அர்த்த புஷ்டியாக இருக்கும். ஆனால் சமூகம் அதைப் பொருளற்ற இயந்திர கதியில் பயன்படுத்திவரும். ஜேகே அடிக்கடி சொல்வார் உலகில் மிகவும் கொஞ்சைப் படுத்தப்பட்ட சொல், ‘காதல்/அன்பு (Love)' என்பது என்று!!

ஆனால், பாவம் நந்து அப்போதுதான் தமிழை சுவைக்கத் தொடங்கியிருந்தான். இவன் படிப்பில் தமிழ் இலக்கியம் என்பதற்கே இடமில்லாமல் போன போது, இவனுக்கு ஆறுதலாக வந்து சேர்ந்தான் தாமரைச் செல்வன். ஒரு வருடம் சீனியர். வேறு துறை (பொருளாதாரம்). பேரா.நெடுமாறனின் மருமான். அவர் வாங்கும் அத்தனை புதுக்கவிதை நூல்களும் அவர் வாசிப்பிற்குப் பின் நேரடியாக நந்துவின் கைக்கு வந்துவிடும். நந்து கவிதை செய்த போது எழுதப்படாத ஸ்லேட்டுபோல் அவன் மனது இருந்தது. இவன் புதுக்கவிதை செய்தது பின்னால் பல தமிழ்த்துறை மாணவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது! ஒரு ஆய்வு மாணவர் சொல்லியே விட்டார், ‘நந்து நீவீர் கொடுத்து வைத்தவர். சங்கம் தொடங்கி காளமேகம் வரை எல்லாச் சிலுவையையும் சுமந்து கொண்டு நாங்கள் அலைகிறோம். நீர் சுமைதாங்கியாக இல்லாமல் சுதந்திரமாக எழுதுகிறீர். நாங்கள் எழுதினால் அத்தனை புலவரின் ஆவிகளும் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு மிரட்ட ஆரம்பிக்கின்றன!!’ என்று சொல்லிச் சிரித்தார். நந்து ஜே.கேயை அறிந்து கொண்டபின் அதன் அர்த்தம் புரிந்தது! சுதந்திரம் என்பது இழப்பதற்கு ஒன்றுமில்லை எனும் நிலை! நந்து புதுக்கவிதை இயக்கத்தைப் பெரிதும் ஆதரித்தான். ஏனெனில் தமிழ்த் தாகமுடைய, ஆனால் தமிழ்த்துறை சாராதோருக்கு புகல்தரும் தருவாக அது இருந்தது!

Freedom and Authority can possibly never go together. Freedom and Intelligence can go together instead!(சின்ன விழியம்)

நந்து கல்லூரி நாட்களில் ஜெயகாந்தன் முழுவதையும் படித்து முடித்திருந்தான். ஜெயகாந்தன் மதுரையில் வாழ்ந்தவர் என்பது அவனுக்கு ஒரு ஆறுதல். புதுக்கவிதை ஆசிரியர்கள் எல்லோரும் பழக்கமாகியிருந்தனர். ஆயினும் அவனுக்கு உண்மையான நவீன இலக்கியம் பரிட்சயமானது பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்த போதுதான். இவன் தன் சகோதரி வீட்டிலிருந்து நாகமலை புதுக்கோட்டைக்கு ரயிலில் தினம் வருவான். பல்கலைக் கழக ஆய்வு என்பது ஒரு கொத்தடிமை முறையில் அப்போது நடந்து வந்தது. கல்லூரிகளில் உயர் மதிப்பெண் பெற்று வரும் மாணவர்கள் மேலும் படிக்க வேண்டுமென்ற ஆவலில் பல்கலைக் கழகம் விரிக்கும் ஆய்வு வலையில் சிக்கிக் கொண்டனர். முதல் இரண்டு வருடங்களுக்கு எந்த ஸ்டைபண்டும் கிடையாது. தன் காலிலேயே நின்று பேராசிரியர்களுக்கு தங்கள் தனியாத ஆர்வத்தைக் காட்டி மெய்ப்படுத்த வேண்டும். எனவே, பெரும்பாலும் பணக்கார வீட்டுப் பையன்களே அக்காலத்தில் ஆய்வு செய்து வந்தனர். நல்லவேளை நந்து ஒரு வருடம் கல்லூரியில் வேலை பார்த்து காசு சேர்த்துவைத்திருந்தான். இப்படி இவன் சம்பாதிக்காமல் மேலே படிக்கப் போனதில் குடும்பத்தில் கொஞ்சம் வருத்தம். கல்யாணமாகாத சகோதரிகள் இருக்கும் போது வேலைக்குப் போய் கல்யாணம் செய்து வைக்காமல் இவன் தாந்தோன்றியாக ‘டாக்டர் பட்டம்’ வாங்கியே தீர்வது என்று பழிகிடக்கிறானே! என்று!

இவனுக்கு வழித்துணையாக வந்து சேர்ந்தாள் ராதா. அவளுக்கு இவனைப் பிடித்திருந்தது. அவள் இவனது பேராசிரியரிடம் காரியதரிசியாக வேலை பார்த்து
வந்தாள். அவளுக்கு தி.ஜானகிராமன் கதைகளில் ஆய்வு செய்யும் ஒரு சௌராஷ்டிரக் கல்லூரி ஆசிரியரைத் தெரியும். எனவே அவரிடமுள்ள அத்தனை புத்தகங்களையும் நந்துவிற்கு ஒவ்வொன்றாய் கொண்டு வந்து கொடுத்தாள். தி.ஜானகிராமன் நந்துவிற்கு புதியதோர் உலகைக் காண்பித்தார். அவர் காட்டிய உலகு மென்மை உணர்வுகள் கொண்டதோர் உலகு. வீட்டிற்குள் கிடக்கும் மறைவான அழகைக் காட்டினார். உறவுகளில் புதைந்துள்ள மறை பொருள்களைக் காட்டினார். மோகமுள் எனும் பிரம்மாண்டம் மூலம் பிஞ்சில் தைத்த மோகமுள் என்னென்ன பாடு படுத்தும் என்று காண்பித்தார். நந்து பாபுவாகி யமுனாவிற்காக அலைந்தான். இவன் பார்த்திராத கும்பகோண வீதிகளில் மானசீகமாய் அலைந்தான். ரசனை, ருசி என்பது தீவிரமாக உட்புகுந்து இவன் அழகியலை முற்றும் முழுதுமாய் மாற்றியது. ராதாவே இவனுக்கு லா.ச.ராவையும் காட்டினாள். நந்துவின் முற்றும் படித்த பட்டியலில் ஜெயகாந்தன், தி.ஜா, லா.ச.ரா போன்றோர் சேர்ந்தனர். நந்துவிற்கு தி.ஜாவைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை. அவரது மரப்பசு கதாநாயகி போல் அவர் கையைத் தொட்டு உணர ஆசை. ஆனால், இவன் ஆசை நிறைவேறுவதற்கு முன் அவர் இறந்துவிட்டார். எனவே, லா.ச.ரா போகும் முன் அவரைக் காண இவன் புறப்பட்டான்.

நந்துவின் பல்கலைக் கழகம் லா.ச.ராவைக் கௌரவித்தது. புசு, புசுவென்ற புருவமும், தீர்க்கமான கண்களும் கொண்ட அந்த மனிதர் மேடையில் இப்படிச் சொன்னார். ‘என்
ஆக்கத்தின் மேல் ஆய்வு செய்வதாகப் பேராசிரியர்கள் சொல்கிறார்கள். லா.ச.ராவைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அவன் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாலும் அதில் பொருள் இருக்கும் என்பதை அறிய வேண்டும்’ என்றார். இப்படி சிந்திப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. மிகப்பின்னால் அவரை இவன் சந்தித்த போது, வாசற்கதவைத் திறந்து கொண்டே, ‘நீர் வைஷ்ணவரோ?’ என்றார். இதை எப்படி இவர் கண்டு பிடித்தார்? என்று நோக்கியபோது, ‘உனது கடுதாசியில் இந்தத் தேதி ‘தோதுப்படுமா?’ என்று கேட்டிருந்தாய். அப்பயன்பாடு வைஷ்ணவர்களுடையது!’ என்று சொன்ன போது இவன் விக்கித்துப்போகவில்லை. இதை எதிர்பார்த்து அனுபவிக்கத்தான் அவன் வந்திருந்தான். ஆறுமாதமாக ஒரு சிறுகதை எழுதுவதாகச் சொன்னார். வார்த்தை, வார்த்தையாக செதுக்கிக்கொண்டு இருக்கிறாராம். மதியம் முழுவதும் பேசிக்கொண்டு இருந்தனர். அவரோடு இருப்பது ஏதோ இறைச் சந்நிதியில் இருப்பது போல் பட்டது நந்துவிற்கு. மாலையாகிவிட்டது. பெரியவர் சாப்பிட வேண்டும். ‘மாமா! உத்தரவு கொடுங்கோ! கிளம்பறோம்!’ என்றான் நந்து (கூட வந்தது இவன் மருமான் கோபிநாத்). ‘நந்து உன்னை விடவே மனசு வரலைடா! சரி உள்ளே வா!’ என்று அழைத்துப் போனார். ‘மாமியையும் கூப்பிடுங்கள்! சேவிக்கிறோம்’ என்றனர். இவர் பழுத்த சிவனாகவும், மாமி அப்படியே அகிலாண்டேஸ்வரியாகவும் நந்துவிற்கு தோற்றமளிக்க அப்படியே சாஷ்ட்டாங்கமாக விழுந்து சேவித்தான். கையில் திருநீறு தட்டும் அதுவுமாக அவர் ஏதோ சித்த புருஷர் போல் இருந்தார். மீண்டும் வாசற்கதவுவரை வந்து வழி அனுப்பியவர், ‘நந்து, இது இந்த ஜென்ம உறவில்லைடா! நமக்கு முன்னாலேயே தொடர்பு இருக்கு! நன்னா இரு!’ என்று மீண்டும் ஆசீர்வதித்து வழி அனுப்பினார்.

நந்துவின் முதற்கதை முன்னமே வெளிவந்து இருந்தது. ஆய்வுக் கொத்தடிமை வாழ்வில் இவனைத் தளிர்ப்பித்துக் கொண்டிருந்தது தமிழ். தமிழ்த்துறை மாணவர்களுடம் பழக
ஆரம்பித்தவுடன் அவர்கள் இன்னும் சீரிய இலக்கிய கர்த்தாக்களை அறிமுகப்படுத்தினர். முதன்முதலாக ‘ஒரு புளியமரத்தின் கதை’ படித்தான். நல்ல இலக்கியம் படைக்க என்னென்ன வேண்டும் என்பதை நந்து புரிந்து கொண்டான். அவன் கவிதைகள் கணையாழியில் தொடர்ந்து வெளியாகத் தொடங்கின. சுஜாதாவின் தேர்வில் கூட
இவன் கவிதைகள் தேறின. அது அவனுக்கு நம்பிக்கையை அளித்தது. அதே நேரத்தில் இவன் தமிழ் அறிவியலுக்கும் பயன்பட்டது. முதன்முறையாக ஒரு அறிவியல் நாடகம் எழுதி கணையாழிக்கு அனுப்பினான். அது வெளிவந்தது. திருச்சி வானொலி நிலையத்தில் அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்தித்தரும்படி அழைப்பு வந்தது. தான் கற்ற அறிவியலை பிறருக்குச் சொல்வதற்காக தமிழ் கற்ற நந்து அதை நன்கு பயன்படுத்தினான். நட்சத்திர நிகழ்ச்சியாக ஐன்ஸ்டைன் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சியொன்றை தயாரித்துத்தர நந்து அழைக்கப்பட்டான். அப்போது ஒரு பெரும் பட்டாளத்தையே நந்து அழைத்துக் கொண்டு திருச்சி போனான். அதில் பாடல்களும் இடம் பெற்றன. பாடல்களை எழுதி இசையமைத்தது விவேகாநந்தாக் கல்லூரியில் பின்னால் முதல்வராக இருந்த வா.வே.சு (வி.வி.எஸ்). இவனது சகோதரியும் பாடினாள். கொத்தடிமை முறையில் 7 ஆண்டுகள்
பிடித்தன இவன் ஆய்வு செய்து முடிக்க. இவன் பிறந்த சாதி அங்கும் வந்து அழிச்சாட்டியம் பண்ணியது. இவனது ஆய்வு நூலை அனுப்புவதில் எதிர்பாராத தாமதங்கள். பல்கலைக் கழகக் கொத்தடிமை முறையில் ஜாதிக்கு மிக முக்கிய பங்கு இருந்தது. துறைகளுக்கு அறிவியல் பேர் இருந்தாலும் நடைமுறையில் ஐயர் துறை, செட்டியார் துறை, நாடார் துறை, பிள்ளைமார் துறை என்றே இருந்தது. பல்கலைக் கழக நிர்வாகமும் அதற்கேற்றவாறே செயல்பட்டது.

இத்தனை கஷ்டங்களிலும் நந்துவிற்குத் துணையாக இருந்தது தமிழும், அவன் ஆக்கமுமே! இந்நிலையில் மொழி மேவிய ஒரு தேடல் என்பது நந்துவினால் செய்ய முடியாததாக இருந்தது. மேலும் மொழியின் ஆளுமை என்பது இன்னும் பிடிபடாமல் இருந்ததால் நந்து மேலும் மேலும் நவீன இலக்கியத்தில் தோய்ந்தான்.

A short introduction to J.Krishnamurti

நந்துவின் சிந்தனாமொழி தமிழாக இருந்ததால் ஜே.கிருஷ்ணமூர்த்தி முதல் பார்வையில் உவப்பளிக்கவில்லை. ஜேகேயும் நம்ம வீட்டுப் பிள்ளைதான். ஆனால் பசுவிடமிருந்து கன்றைப் பிரிப்பது போல் வெள்ளையர் ஆதிக்கம் அடையாறு கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த கள்ளமற்ற சிறுவனை அவன் தாயிடமிருந்து, உறவுகளிடமிருந்து, தாய் மண்ணிடமிருந்து பிரித்துத் தனித்து கொடுமை செய்துவிட்டது. கிருஷ்ணமூர்த்தி சுந்தரத்தெலுங்கில் பேசிக்கொண்டு இருந்திருக்க வேண்டியவர். அவர் கடைசிவரை சொன்ன ஒரே தெலுங்குச் சொல், ‘அம்மா’ என்பது. அதுவும் தன் தாயைக் குறித்து அல்ல. அன்னிபெசண்ட் அம்மையாரை நோக்கி!! இந்தப் பிரிவினை, இத்தனிமை அவர் வேண்டிப் பெற்றதன்று. அவர் மேல் திணிக்கப்பட்டது. தங்கத்தைப் புடம் போடுவது போல் அவர் புடம் போடப்பட்டார். அவர் இந்திய மண்ணில் இயற்கையாக மலர்ந்திருக்க வேண்டிய மலர். இந்திய ஆன்மீக மரபின் ஒரு வித்து அவர். செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழம் அவர். வெள்ளையர் உலகம் கண்ட கோயில் யானை அவர்!!

இவர் கிடைத்ததால் இந்திய ஞான மரபு என்பது எவ்வளவு தீவிரமானது என்பதை முதன்முறை மேற்குலகம் கண்டது. இவரிடம் சமரசமே கிடையாது. ‘என்னை நீ தனிமைப் படுத்தினாயா! உலகே! நீயும் படு அந்த அவதியை!! என்று பழி தீர்த்துக் கொண்ட மார்க்கம் ஜே.கே மார்க்கம்! கொஞ்சம் மூர்க்கமானதும் கூட. பயித்தியமான சில கேசுகளுண்டு. ஆனால், அவர் கடைசிவரை சமரசம் செய்து கொள்ளவில்லை. இவரை ‘கிழக்கின் நட்சத்திரம்’ என்றனர். இவரை அவதார புருஷராக்கி கோயில் கட்டினர் (தேவாலயம்-சர்ச்). இவர் அது தோற்றுவிக்கப்பட்ட கணத்திலேயே அழித்துவிட்டார். இவரை உருவாக்கி காத்து வந்தஅன்னிபெசண்டின் நெஞ்சம் உடையும் வண்ணம் இவர் தியசோபிகல் சொசைடியை விட்டு விலகினார். Truth is a pathless land என்று நடக்க ஆரம்பித்துவிட்டார். அப்போது இவர் பதின்ம வயதினர். எங்கிருந்து வந்தது அந்த திடம்? அது வெறும் கோபம் தரும் பலமா? இல்லை, ‘அத்தைத்தின்று அங்கே கிடக்கும்’ இவ்வுலகை வெறுத்த மெய்மை தந்த திடமா (வைராக்கியம்)? குஜராத்தில் சுவாமி நாராயண் எனும் குழந்தை! இறைவனை நம்பி உலகைத் துறந்து வெளியே வந்துவிட்டது. இமயமலையெல்லாம் தனியே அலைந்தது. கல்லுக்கும் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் காவலன் யார்? ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியிடம் அறக்கட்டளை நிர்வாகிகள், ‘தாங்கள் இறந்துவிடும் பக்ஷத்தில் தங்கள் உடலை என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டனர். நம்மவூர் குருமார்களாக இருந்தால் ஒரு நீண்ட பட்டியல் தந்திருப்பர். தலையில் தேங்காய் உடை என்பதிலிருந்து ஆரம்பித்து சமாதி கட்டும்வரை. ஜேகே சொன்னார், ‘கடலில் எறிந்துவிடுங்கள்!’ என்று! கடைசிவரை அவர் எதிலும் சமரசம் செய்து கொள்ளவே இல்லை.

இவரை சமூகப் புரட்சியாளர் என்று காண்போருமுண்டு. இவ்வளவும் அவர் சாதித்ததற்கு அவர் மொழியிலிருந்து பெற்ற விடுதலை ஒரு காரணம். சமூகப் பதப்படுத்தல்கள் அதிகமற்ற தனிமை ஒரு காரணம். மொழியின் உண்மை வடிவைக் கண்டு மெய்சிலிர்த்தவர் ஜே.கே. ஆனால், அதை அடைவதற்கு முன் மொழியைச் சமூகம் பயன்படுத்தி வைத்திருக்கும் பதப்படுத்தலிலிருந்து விடுதலை பெற வேண்டும். ஜே.கேயின் பேச்சுக்களில் பெரும்பாலும் ஆங்கில மொழியின் வேர்ச்சொல் பற்றிய ஆய்வு இருக்கும். வேர்ச்சொல் மிக அர்த்த புஷ்டியாக இருக்கும். ஆனால் சமூகம் அதைப் பொருளற்ற இயந்திர கதியில் பயன்படுத்திவரும். ஜேகே அடிக்கடி சொல்வார் உலகில் மிகவும் கொஞ்சைப் படுத்தப்பட்ட சொல், ‘காதல்/அன்பு (Love)' என்பது என்று!!

ஆனால், பாவம் நந்து அப்போதுதான் தமிழை சுவைக்கத் தொடங்கியிருந்தான். இவன் படிப்பில் தமிழ் இலக்கியம் என்பதற்கே இடமில்லாமல் போன போது, இவனுக்கு ஆறுதலாக வந்து சேர்ந்தான் தாமரைச் செல்வன். ஒரு வருடம் சீனியர். வேறு துறை (பொருளாதாரம்). பேரா.நெடுமாறனின் மருமான். அவர் வாங்கும் அத்தனை புதுக்கவிதை நூல்களும் அவர் வாசிப்பிற்குப் பின் நேரடியாக நந்துவின் கைக்கு வந்துவிடும். நந்து கவிதை செய்த போது எழுதப்படாத ஸ்லேட்டுபோல் அவன் மனது இருந்தது. இவன் புதுக்கவிதை செய்தது பின்னால் பல தமிழ்த்துறை மாணவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது! ஒரு ஆய்வு மாணவர் சொல்லியே விட்டார், ‘நந்து நீவீர் கொடுத்து வைத்தவர். சங்கம் தொடங்கி காளமேகம் வரை எல்லாச் சிலுவையையும் சுமந்து கொண்டு நாங்கள் அலைகிறோம். நீர் சுமைதாங்கியாக இல்லாமல் சுதந்திரமாக எழுதுகிறீர். நாங்கள் எழுதினால் அத்தனை புலவரின் ஆவிகளும் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு மிரட்ட ஆரம்பிக்கின்றன!!’ என்று சொல்லிச் சிரித்தார். நந்து ஜே.கேயை அறிந்து கொண்டபின் அதன் அர்த்தம் புரிந்தது! சுதந்திரம் என்பது இழப்பதற்கு ஒன்றுமில்லை எனும் நிலை! நந்து புதுக்கவிதை இயக்கத்தைப் பெரிதும் ஆதரித்தான். ஏனெனில் தமிழ்த் தாகமுடைய, ஆனால் தமிழ்த்துறை சாராதோருக்கு புகல்தரும் தருவாக அது இருந்தது!

Freedom and Authority can possibly never go together. Freedom and Intelligence can go together instead!

http://www.youtube.com/watch?v=w0cjoOIWi9U (சின்ன விழியம்)

நந்து கல்லூரி நாட்களில் ஜெயகாந்தன் முழுவதையும் படித்து முடித்திருந்தான். ஜெயகாந்தன் மதுரையில் வாழ்ந்தவர் என்பது அவனுக்கு ஒரு ஆறுதல். புதுக்கவிதை ஆசிரியர்கள் எல்லோரும் பழக்கமாகியிருந்தனர். ஆயினும் அவனுக்கு உண்மையான நவீன இலக்கியம் பரிட்சயமானது பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்த போதுதான். இவன் தன் சகோதரி வீட்டிலிருந்து நாகமலை புதுக்கோட்டைக்கு ரயிலில் தினம் வருவான். பல்கலைக் கழக ஆய்வு என்பது ஒரு கொத்தடிமை முறையில் அப்போது நடந்து வந்தது. கல்லூரிகளில் உயர் மதிப்பெண் பெற்று வரும் மாணவர்கள் மேலும் படிக்க வேண்டுமென்ற ஆவலில் பல்கலைக் கழகம் விரிக்கும் ஆய்வு வலையில் சிக்கிக் கொண்டனர். முதல் இரண்டு வருடங்களுக்கு எந்த ஸ்டைபண்டும் கிடையாது. தன் காலிலேயே நின்று பேராசிரியர்களுக்கு தங்கள் தனியாத ஆர்வத்தைக் காட்டி மெய்ப்படுத்த வேண்டும். எனவே, பெரும்பாலும் பணக்கார வீட்டுப் பையன்களே அக்காலத்தில் ஆய்வு செய்து வந்தனர். நல்லவேளை நந்து ஒரு வருடம் கல்லூரியில் வேலை பார்த்து காசு சேர்த்துவைத்திருந்தான். இப்படி இவன் சம்பாதிக்காமல் மேலே படிக்கப் போனதில்
குடும்பத்தில் கொஞ்சம் வருத்தம். கல்யாணமாகாத சகோதரிகள் இருக்கும் போது வேலைக்குப் போய் கல்யாணம் செய்து வைக்காமல் இவன் தாந்தோன்றியாக ‘டாக்டர் பட்டம்’ வாங்கியே தீர்வது என்று பழிகிடக்கிறானே! என்று!

இவனுக்கு வழித்துணையாக வந்து சேர்ந்தாள் ராதா. அவளுக்கு இவனைப் பிடித்திருந்தது. அவள் இவனது பேராசிரியரிடம் காரியதரிசியாக வேலை பார்த்து
வந்தாள். அவளுக்கு தி.ஜானகிராமன் கதைகளில் ஆய்வு செய்யும் ஒரு சௌராஷ்டிரக் கல்லூரி ஆசிரியரைத் தெரியும். எனவே அவரிடமுள்ள அத்தனை புத்தகங்களையும் நந்துவிற்கு ஒவ்வொன்றாய் கொண்டு வந்து கொடுத்தாள். தி.ஜானகிராமன் நந்துவிற்கு புதியதோர் உலகைக் காண்பித்தார். அவர் காட்டிய உலகு மென்மை உணர்வுகள் கொண்டதோர் உலகு. வீட்டிற்குள் கிடக்கும் மறைவான அழகைக் காட்டினார். உறவுகளில் புதைந்துள்ள மறை பொருள்களைக் காட்டினார். மோகமுள் எனும் பிரம்மாண்டம் மூலம் பிஞ்சில் தைத்த மோகமுள் என்னென்ன பாடு படுத்தும் என்று காண்பித்தார். நந்து பாபுவாகி யமுனாவிற்காக அலைந்தான். இவன் பார்த்திராத கும்பகோண வீதிகளில் மானசீகமாய் அலைந்தான். ரசனை, ருசி என்பது தீவிரமாக உட்புகுந்து இவன் அழகியலை முற்றும் முழுதுமாய் மாற்றியது. ராதாவே இவனுக்கு லா.ச.ராவையும் காட்டினாள். நந்துவின் முற்றும் படித்த பட்டியலில் ஜெயகாந்தன், தி.ஜா, லா.ச.ரா போன்றோர் சேர்ந்தனர். நந்துவிற்கு தி.ஜாவைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை. அவரது மரப்பசு கதாநாயகி போல் அவர் கையைத் தொட்டு உணர ஆசை. ஆனால், இவன் ஆசை நிறைவேறுவதற்கு முன் அவர் இறந்துவிட்டார். எனவே, லா.ச.ரா போகும் முன் அவரைக் காண இவன் புறப்பட்டான்.

நந்துவின் பல்கலைக் கழகம் லா.ச.ராவைக் கௌரவித்தது. புசு, புசுவென்ற புருவமும், தீர்க்கமான கண்களும் கொண்ட அந்த மனிதர் மேடையில் இப்படிச் சொன்னார். ‘என்
ஆக்கத்தின் மேல் ஆய்வு செய்வதாகப் பேராசிரியர்கள் சொல்கிறார்கள். லா.ச.ராவைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அவன் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாலும் அதில் பொருள் இருக்கும் என்பதை அறிய வேண்டும்’ என்றார். இப்படி சிந்திப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. மிகப்பின்னால் அவரை இவன் சந்தித்த போது, வாசற்கதவைத் திறந்து கொண்டே, ‘நீர் வைஷ்ணவரோ?’ என்றார். இதை எப்படி இவர் கண்டு பிடித்தார்? என்று நோக்கியபோது, ‘உனது கடுதாசியில் இந்தத் தேதி ‘தோதுப்படுமா?’ என்று கேட்டிருந்தாய். அப்பயன்பாடு வைஷ்ணவர்களுடையது!’ என்று சொன்ன போது இவன் விக்கித்துப்போகவில்லை. இதை எதிர்பார்த்து அனுபவிக்கத்தான் அவன் வந்திருந்தான். ஆறுமாதமாக ஒரு சிறுகதை எழுதுவதாகச் சொன்னார். வார்த்தை, வார்த்தையாக செதுக்கிக்கொண்டு இருக்கிறாராம். மதியம் முழுவதும் பேசிக்கொண்டு இருந்தனர். அவரோடு இருப்பது ஏதோ இறைச் சந்நிதியில் இருப்பது போல் பட்டது நந்துவிற்கு. மாலையாகிவிட்டது. பெரியவர் சாப்பிட வேண்டும். ‘மாமா! உத்தரவு கொடுங்கோ! கிளம்பறோம்!’ என்றான் நந்து (கூட வந்தது இவன் மருமான் கோபிநாத்). ‘நந்து உன்னை விடவே மனசு வரலைடா! சரி உள்ளே வா!’ என்று அழைத்துப் போனார். ‘மாமியையும் கூப்பிடுங்கள்! சேவிக்கிறோம்’ என்றனர். இவர் பழுத்த சிவனாகவும், மாமி அப்படியே அகிலாண்டேஸ்வரியாகவும் நந்துவிற்கு தோற்றமளிக்க அப்படியே சாஷ்ட்டாங்கமாக விழுந்து சேவித்தான். கையில் திருநீறு தட்டும் அதுவுமாக அவர் ஏதோ சித்த புருஷர் போல் இருந்தார். மீண்டும் வாசற்கதவுவரை வந்து வழி அனுப்பியவர், ‘நந்து, இது இந்த ஜென்ம உறவில்லைடா! நமக்கு முன்னாலேயே தொடர்பு இருக்கு! நன்னா இரு!’ என்று மீண்டும் ஆசீர்வதித்து வழி அனுப்பினார்.

நந்துவின் முதற்கதை முன்னமே வெளிவந்து இருந்தது. ஆய்வுக் கொத்தடிமை வாழ்வில் இவனைத் தளிர்ப்பித்துக் கொண்டிருந்தது தமிழ். தமிழ்த்துறை மாணவர்களுடம் பழக
ஆரம்பித்தவுடன் அவர்கள் இன்னும் சீரிய இலக்கிய கர்த்தாக்களை அறிமுகப்படுத்தினர். முதன்முதலாக ‘ஒரு புளியமரத்தின் கதை’ படித்தான். நல்ல இலக்கியம் படைக்க என்னென்ன வேண்டும் என்பதை நந்து புரிந்து கொண்டான். அவன் கவிதைகள் கணையாழியில் தொடர்ந்து வெளியாகத் தொடங்கின. சுஜாதாவின் தேர்வில் கூட
இவன் கவிதைகள் தேறின. அது அவனுக்கு நம்பிக்கையை அளித்தது. அதே நேரத்தில் இவன் தமிழ் அறிவியலுக்கும் பயன்பட்டது. முதன்முறையாக ஒரு அறிவியல் நாடகம் எழுதி கணையாழிக்கு அனுப்பினான். அது வெளிவந்தது. திருச்சி வானொலி நிலையத்தில் அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்தித்தரும்படி அழைப்பு வந்தது. தான் கற்ற அறிவியலை பிறருக்குச் சொல்வதற்காக தமிழ் கற்ற நந்து அதை நன்கு பயன்படுத்தினான். நட்சத்திர நிகழ்ச்சியாக ஐன்ஸ்டைன் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சியொன்றை தயாரித்துத்தர நந்து அழைக்கப்பட்டான். அப்போது ஒரு பெரும் பட்டாளத்தையே நந்து அழைத்துக் கொண்டு திருச்சி போனான். அதில் பாடல்களும் இடம் பெற்றன. பாடல்களை எழுதி இசையமைத்தது விவேகாநந்தாக் கல்லூரியில் பின்னால் முதல்வராக இருந்த வா.வே.சு (வி.வி.எஸ்). இவனது சகோதரியும் பாடினாள். கொத்தடிமை முறையில் 7 ஆண்டுகள்
பிடித்தன இவன் ஆய்வு செய்து முடிக்க. இவன் பிறந்த சாதி அங்கும் வந்து அழிச்சாட்டியம் பண்ணியது. இவனது ஆய்வு நூலை அனுப்புவதில் எதிர்பாராத தாமதங்கள். பல்கலைக் கழகக் கொத்தடிமை முறையில் ஜாதிக்கு மிக முக்கிய பங்கு இருந்தது. துறைகளுக்கு அறிவியல் பேர் இருந்தாலும் நடைமுறையில் ஐயர் துறை, செட்டியார் துறை, நாடார் துறை, பிள்ளைமார் துறை என்றே இருந்தது. பல்கலைக் கழக நிர்வாகமும் அதற்கேற்றவாறே செயல்பட்டது.

இத்தனை கஷ்டங்களிலும் நந்துவிற்குத் துணையாக இருந்தது தமிழும், அவன் ஆக்கமுமே! இந்நிலையில் மொழி மேவிய ஒரு தேடல் என்பது நந்துவினால் செய்ய முடியாததாக இருந்தது. மேலும் மொழியின் ஆளுமை என்பது இன்னும் பிடிபடாமல் இருந்ததால் நந்து மேலும் மேலும் நவீன இலக்கியத்தில் தோய்ந்தான்.

A short introduction to J.Krishnamurti

0 பின்னூட்டங்கள்: