ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

எனும் குறள் மிகவும் பொருளுள்ள குறள். தமது குழந்தைகள் பேரும் புகழும் பெற்று நிற்கும் போது அடையும் பெருமைக்கு ஈடு, இணை கிடையாது. என் பெண் வளரும் ஒவ்வொரு பருவத்திலும் இதை நான் உணர்ந்திருந்த போதிலும் இம்முறை அவள் வேல்ஸ் பல்கலைக்கழகமொன்றில் மிகச்சிறப்புடன் பட்டப்படிப்பு முடித்ததும், அந்த ஆண்டின் மிகச்சிறந்த ஆய்விற்கான பரிசைப் பெற்றதும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், சக மாணவர்களும் அவளை மகளாகப் பெற்ற காரணத்திற்காக எங்களை வாழ்த்திய போதும் உணர்ந்தேன். அதே உணர்வை இங்குள்ள தாய்மார்கள் தங்கள் பெண், பிள்ளைகள் தமிழகத்தின் ஆகச்சிறந்த 5 பாடகர்கள் தகுதியை அடைந்த போது பெற்றதை நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டபோது கண் கலங்காமல் இருக்க முடியவில்லை. இங்குள்ளோரின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னும் சலிப்படையாத தாயுள்ளம் இருப்பது, ‘இறைவன் நம்முடன் இருக்கிறான் என்பதை நிரூபணப்படுத்தும் நிகழ்வு. கௌசிக்கின் அன்னை இல்லாத குறைதான்! இந்தப் பொழுதிற்காக மிகவும் பாடுபட்டவர். எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


0 பின்னூட்டங்கள்: