சூப்பர் சிங்கர் இரைச்சல்கள் ஓய்ந்த பொழுதில்

சூப்பர் சிங்கர் எனும் பட்டம் சாய் சரணுக்கு கொடுத்திருக்கிறார்கள் என்றவுடன் எனக்கு இயேசுநாதர்தான் நினைவிற்கு வந்தார். அவர் மலைப்பிரசங்கம் செய்து கொண்டு இருக்கிறார். முடிந்த பின் எல்லோருக்கும் ரொட்டிகள் வழங்கினார். உழைத்தவருக்கு மட்டுமின்றி மற்றோருக்கும் வழங்கினார். ஒரு உழைப்பாளி கேட்டானாம், ‘ஐயா! நாங்கள் உழைத்தோம் எங்களுக்குக் கூலியாக ரொட்டி வழங்குவது சரி! ஆனால் வேலை செய்யாத மற்றோருக்கும் ஏன் வழங்குகிறீர்கள்?’ என்று. அதற்கு இயேசு பதில் சொன்னாராம், ‘அப்பா! அவர்களுக்கும் பசியென்ற ஒன்று உள்ளதே!’ என்று. அதுபோல் தான் நடந்திருக்கிறது.

நடுவர்கள் ஓராண்டு பாடும் திறமையைப் பார்த்து தேர்ந்தெடுத்தது இருவரைத்தான். அதில் சாய் சரண் கிடையாது. இசை கேட்டு, ரசித்து அனுபவப்பட்ட காதுகளுக்கு சத்ய பிரகாஷின் இசை ஒரு விருந்து. ஆனால் ‘மூன்று ஆண்டு தவம்’ என்று சாய்சரண் போட்டியின் விதிகளை மீறி, ‘உந்து அட்டை’ (வைல்ட் கார்ட்) வழியாக உள்ளே நுழைகிறார். சந்தோஷும் அப்படித்தான். ஆனால் முதல் பரிசு சாய் சரணுக்கு அடுத்த பரிசு சந்தோசுக்கு. கடைசி இரண்டு கொசுறுப் பரிசுகள் சத்யாவிற்கும், பூஜாவிற்கும்.

இயேசுவின் பார்வையில் யாரோ இப்படித்தீர்மானித்து உள்ளனர்! ஒரு விதவைத்தாய். தன் மகனே கதியென்று, அவன் முன்னேற்றமே தன் வாழ்வின் நோக்கு என்று பெரிய தியாகங்களைச் செய்த தாய்! அதை அழகாகச் சொல்லத்தெரிந்த தாய் என்றும் சொல்ல வேண்டும்.

சந்தோஷுக்கு ஏன் பரிசு? அங்கும் ‘தாய் செண்டிமெண்ட்’தான். நடக்க முடியாத தாய். தாய்க்கேற்ற தனயன் எனும் படி சந்தோஷ்!

ஆனால் யார் இறுதிப் போட்டியில் அத்தனை பாடகர்களும் நிற்க வைத்து கரகோஷம் வாங்கியது? யார் அந்த எதிர்பார்த்த இசை இரசவாதம் செய்தது?யாருடைய இசை இந்த நால்வரில் அன்று தனித்து நின்றது? இவ்விழியமே சாட்சி.இதை போட்டி என்று சொல்வது அந்த வார்த்தைக்கு அவமரியாதை செய்வது. போட்டி என்றால் விதிமுறைகளுண்டு. அதை ஒழுங்காக செயல்படுத்த வேண்டும். விதி மீறல்களைக் கவனிப்போம்:

1. ஓராண்டாக ஒரு நடுவர் குழு மாறி, மாறி இவர்கள் திறமைய சோதித்து இருவரை இறுதிச் சுற்றுக்கு அனுப்புகிறது. ஆனால், ‘தாய் செண்டிமெண்ட்’ ஒர்கவுட் ஆகுமென்ற தெரிந்த சில சக்திகள் ‘உந்து அட்டை’யை திடீரென அறிமுகப்படுத்தி பின் கேட் வழியாக இருவரைச் சொருகுகிறது.

2. செமி பைனல்ஸ் முடிந்து பைனல்ஸ் வந்த பின் மீண்டும் ஒரு செமி பைனல்ஸ் என்று எந்த ஆட்டத்திலும் கிடையாது. வேண்டுமானால் செமிபைனல்ஸ் என்பதையே ‘உந்து அட்டை’ முறையில் நடத்தியிருக்கலாமே?

3. ’ஏதோ குரல் வளம்’ மட்டும் இருந்த பாடகர்களை தயார்ப்படுத்தி, பயிற்சி கொடுத்து மிகத்திறமையான பாடகர்களாக மாற்றித்தந்துள்ளனர். இந்த ‘உந்து அட்டை’ முறையை முதலிலேயே அறிமுகப்படுத்தியிருந்தால் அதிலும் பயிற்சி பெற்று எப்படி ஓட்டு கேட்பது என்று அறிந்திருப்பர். பாவம்! பூஜா! எதற்கெடுத்தாலும் நாங்கள் எல்லோரும் கடினமாக உழைத்திருக்கிறோம். எனக்குத்திறமை இருப்பதாக நீங்கள் நம்பினால் ஓட்டு போடுங்கள் என்கிறார். ‘தன்னை’ முன்னிருத்த வேண்டும் என்பது கூடத் தெரியாத அப்பாவி அவர். அவருடைய அம்மா அதற்கும் மேல் (அவரும் விதவைதான்). நம்ம சத்யா, ஓட்டுக்கேட்கும் போது தனது அடையான எண்ணையே மாற்றி, ‘SS 05' க்கு ஓட்டுக் கேட்கிறார்!! இவர்தான் இப்படியென்றால் இவர் அப்பா உணர்ச்சி வசப்பட்டு நெகிழ்கிறாரே தவிர, பேசவே தெரியவில்லை. உருப்படியாக இப்போட்டியில் ஓட்டுக் கேட்டவர்கள் இருவரே, ஒன்று சாய், மற்றது பிரவீன். எனவே ‘உந்து அட்டை’ப் பயிற்சி என்று கொடுத்திருக்க வேண்டும்.

4. மக்கள் ஓட்டுப்போட்டு ஒருவர் தேர்வாகிறார் என்றால் எத்தனை ஓட்டு வித்தியாசத்தில் பரிசுகள் வழங்கப்படுகின்றன எனப் பொது மக்களுக்குச் சொல்ல வேண்டியது ‘சட்ட பூர்வமான’ கடமை. இதற்காக இவர்கள் மீது வழக்குத் தொடுக்கலாம்.

5. எல்லோரும் ஏராளமாக ஓட்டுப் போடுங்கள் என்பதும், ‘கள்ள ஓட்டு’க்கூட போடலாம் (ஆங்கர் சிவா சொன்னது) என்பதும் அபத்தம். இணைய முகவரி எதற்குக் கொடுத்து எம்மைப் போல வெளிநாட்டில் இருப்பவரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறார்கள்? இணையதில் ‘எத்தனை ஓட்டு வேண்டுமானாலும் போட வசதி செய்யவில்லை விஜய் டிவி’ மூன்று ஓட்டுக்களே உச்சம்! இப்படி பொது மக்களுக்கு தவறான சேதி சொல்லி திசை திருப்பியதற்கும் வழக்குப் போடலாம்.

நான் போன பதிவில் சொன்ன படி. இதுவொரு சொதப்பல் ஷோ! மேலை நாட்டு ஷோக்களை பார்த்துவிட்டு ஏதோ நாங்களும் செய்கிறோமென்று போட்டுக்கொள்ளும் சூடு போன்றது இது. எந்த விதிமுறையும் இல்லாமல், இஷ்டத்திற்கு நடத்தப்பட்ட சொதப்பல்.

இதுவொரு விதவைகள் போராட்டம். பூஜா, சாய், கௌசிக் இவர்களின் தாய்மார்கள் போராடினர். முதலில் அவுட் கௌசிக். கடைசியில் அவுட் பூஜா. சாய் சரணின் தாய் வென்றிருக்கிறார். சாய் சரண் திறமைசாலி. கடின உழைப்பாளி. அவனின் தாய் தியாகங்கள் செய்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இத்தேர்வை ஏற்றுக் கொள்கிறேன். திறமையின் அடிப்படையில் என்பதை எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை சத்யாவின் பாடலை ’அப்படி’ அனுபவிக்கும் சாய் சரணின் தாயே ஒத்துக்கொள்வார்.

நடுவர்களுக்கும், அனந்த் வைத்யநாதனுக்கும் சிறப்புப் பாராட்டுகள். முதல் 10, 5 எனும் கூட்டத்தில் வந்த அனைவருமே திறமையான பாடகர்கள். சூப்பர் சிங்கர் என்பது சத்யப்பிரகாஷ்தான்.

16 பின்னூட்டங்கள்:

ஜெய. சந்திரசேகரன் 9/25/2011 06:00:00 PM

நன்கு சொன்னீர்கள்

நித்திலம்-சிப்பிக்குள் முத்து 9/25/2011 06:00:00 PM

தங்கள் ஆதங்கம் நன்கு புரிகிறது. சூப்பர் சிங்கர் என்ற தலைப்பிற்கே அர்த்தமில்லாமல் போய்விட்டது........ செண்டுமெண்ட்டுக்கான போட்டியோ இது என்று தோன்றுகிறது. திறமைக்குமுக்கியத்துவம் கொடுக்க மறந்த நிகழ்ச்சி...... ஏதோ பின்காட்சி நிகழ்ச்சிகள் (behind the scene) நடந்திருக்குமோ என்று தோன்றுகிறது. என்னமோ பேரம் பேசப்பட்டிருக்குமோ? இல்லாவிட்டால் நீங்கள் சொன்னது போல ஓட்டு கணக்குகளை காட்டியிருக்க வேண்டும். விஜய் டிவியின் மீது இருந்த மரியாதையே குறைகிறது. பார்வையாளர்களின் தரத்தை குறைத்து மதிப்பிட்டதற்கு வன்மையாக கண்டிப்போம்......

stalin 9/25/2011 07:14:00 PM

சார் சத்திய பிரகாசுக்கு தான் கொடுத்திருக்க வேண்டும் ....அவர் பாடியது சூப்பர் சிங்கர் வரலாறில் பதிவு செய்ய படவேண்டிய ஒன்று ...

பகிர்வுக்கு நன்றி ....

Anonymous 9/25/2011 07:21:00 PM

கடைசியில் சிறந்த பாடகர் வெற்றிபெறவில்லை.சந்தோசுக்கு இரண்டாவது பரிசு கொடுத்தது அதைவிட அபத்தம்.ஒருவர் எத்தனை ஊட்டு வேண்டுமானாலும் போடலாம் என்றால் அரசியல் தெரிந்தவன் தான் வெற்றி பெறுவான்.சத்திய பிரகாசும் ,பூஜாவும் திறமையை மட்டுமே நம்பியிருக்க சாய் சரணும், சந்தோசும் அனுதாப ஓட்டுக்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

MANO 9/25/2011 07:42:00 PM

super.... sathiya prakash is the best. reg this... read my article at

http://feelthesmile.blogspot.com/2011/09/airtel.html

G.Ragavan 9/25/2011 09:03:00 PM

சத்தியபிரகாசும் பூஜாவும் பல சுற்றுகளில் சொதப்பினார்கள். ஆனாலும் ஏதோ ஒரு ”சக்தி” அவர்களைக் காப்பாற்றிக் கொண்டேயிருந்தது.

ஒரு சுற்றில் பூஜா எப்படிப் பாடினாலும் எனக்குப் பிடிக்கும் என்று நடுவராக இருந்த சுஜாதா உளறிக் கொட்டினார். அதை அப்பொழுதே சிறப்பு விருந்தினராக வந்திருந்த டி.எல்.மகராஜன் கண்டிக்க வேண்டியிருந்தது.

சத்தியபிரகாஷ் கர்நாடக சங்கீதப் பாடல்களை நன்றாகப் பாடுவார். அவர் ஒரு ஆல்ரவுண்டர் அல்லர். பூஜாவின் பாடல் தேர்வுகள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே அமையும். அதை மீறி அவர் வர முயற்சி செய்த போதெல்லாம் தடுமாறியிருக்கிறார். இதையும் அனந்த் அவர்கள் கூறியிருக்கிறார்.

பெரும்பாலானவர்கள் கருத்துப்படி இவர்கள் இருவரும் அதிதீவிரமாக முன்னிறுத்தப்பட்டமை எரிச்சலையே தந்தது.

அதுவுமில்லாமல் தொடர்ந்து மலையாளிகளையே தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த விஜய் டீவி மீதான எரிச்சல்கள் உச்சத்தில் இருந்த நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு அழுத்தம். இவையெல்லாம் சாய்சரணுக்கு வசதியாக அமைந்தன என்பதே உண்மை. நீங்கள் சொல்லும் காரணங்கள் அல்ல என்பது என் கருத்து.

நா.கண்ணன் 9/25/2011 09:20:00 PM

ராகவன்: உங்கள் பார்வையை நான் மதிக்கிறேன். இம்மாதிரிப் போட்டிகளில் தெரிவு என்பது சார்புடையதே. ஒப்பு நோக்கி இதில் எது சிறந்தது என்றுதான் தேர்வு செய்ய வேண்டும். அப்படிப்பார்த்தால் தொடர்ந்து consistency காட்டியது பூஜா! அவரொரு முதல் வகுப்பில் தேறும் மாணவி போல. சத்யா அப்படி அல்ல! நண்பர்களின் தூண்டுதலால் உள்ளே வந்தவர். இயற்கையான குரல் வளம் கொண்டவர். நல்ல உழைப்பாளி. எல்லா தொகைகளிலும் பாட முடியும் என்று நிரூபித்துக்காட்டியவர். அவர் கடைசியாகப் பாடியது நான் இதுவரை அவர் பாடிக்கேட்டதில்லை. எங்கோ கொண்டு போகிறார். இதை ரசிக்க முடியவில்லை என்றால் இசை ஞானம் குறைவு என்று சொல்ல வேண்டியிருக்கும். திரையிசைப் பின்னணிப்பாடகர்களின் ஏகோபித்த standing ovation வேறு யாருக்குக் கிடைத்தது அன்று! நிச்சயமாக சத்யாதான் சூப்பர் சிங்கர்!

G.Ragavan 9/25/2011 09:29:00 PM

// அப்படிப்பார்த்தால் தொடர்ந்து consistency காட்டியது பூஜா! அவரொரு முதல் வகுப்பில் தேறும் மாணவி போல. சத்யா அப்படி அல்ல! நண்பர்களின் தூண்டுதலால் உள்ளே வந்தவர். //

சத்தியப்பிரகாசை விடவும் பூஜா முதலிடத்திற்குப் பொருத்தமானவர் என்பது என் கருத்து. முதலிலிருந்த உச்சரிப்புப் பிழைகளை திருத்திக் கொண்டு முன்னேறிய விதம் அருமை. மன்னவன் வந்தானடி கிளாஸ். பி.சுசீலாவே பாராட்டியிருப்பார்கள். அதை விட மற்ற மூவருமே சுமார்தான்.

//இயற்கையான குரல் வளம் கொண்டவர். நல்ல உழைப்பாளி. எல்லா தொகைகளிலும் பாட முடியும் என்று நிரூபித்துக்காட்டியவர். //

இந்தக் கருத்தில் நான் வேறுபடுகிறேன். :) உங்கள் கருத்தை மதிக்கிறேன்.

// அவர் கடைசியாகப் பாடியது நான் இதுவரை அவர் பாடிக்கேட்டதில்லை. எங்கோ கொண்டு போகிறார். இதை ரசிக்க முடியவில்லை என்றால் இசை ஞானம் குறைவு என்று சொல்ல வேண்டியிருக்கும். //

சமைக்கத் தெரிஞ்சாதான் ருசிக்க முடியும்னு சொல்றீங்க. :) பெரியவங்க சொன்னா சரிதான். :)

நா.கண்ணன் 9/25/2011 09:58:00 PM

ராகவன்: பூஜா வந்திருந்தாலும் மகிழ்ந்திருப்பேன். சாய் குரலில் எப்போதும் ஒரு கார்வை உண்டு. சத்யாவின் குரல் மெழுகு போல. பூஜா ‘குட்டி சுசீலா’ என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். அங்கு கொடுத்த பாடல்தான் தேர்விற்குக் காரணமென்று யாராவது சொன்னால் அப்பரிசு சத்யாவிற்குப் போயிருக்க வேண்டும் என்பதே இங்கு வாதம் :-) ஏனெனில் அவர் பாடல் மட்டுமே அத்தனை திரையிசைக் கலைஞர்களையும் நின்று கைதட்ட வைத்தது.

பொ.முருகன் 9/25/2011 10:12:00 PM

உண்மைதான், சிறப்பு விருந்தினர் G.V,பிரகாஷ் கூட சத்யாவுக்கு பரிசு வழங்கும் போது, இந்த மேடையில் என்னை மிகவும் கவர்ந்த பாடகர் சத்தியப்பிரகாஷ என்று கூறி தான் பரிசை வழங்கினார்.சாய் சரணும் நன்றாகத்தான் பாடினார்,சாய் சரணுக்கு கூடுதல் பிளஸ் 1.அவரது அம்மா,2.பேச்சாற்றல்,3.நடுவர்கள் கண்டிக்கும் போதெல்லாம் தடாலடியாக சாஸ்டாங்கமாக கீழேவிழுந்து மனிப்புகேட்பது .4.சூப்பர் சிங்கர் ஜுனியரில் இடம்பெற்ற அனுபவம்.

நா.கண்ணன் 9/25/2011 10:29:00 PM

சாய் சரணின் பணிவு எனக்கு எப்போதும் பிடிக்கும். கடின உழைப்பாளி. ஃபீனிக்ஸ் பறவை போல் எரிந்து விழுந்த சாம்பலிலிருந்து மீண்டும் எழும்பும் குண நலம். மேலாக, அனுதாப அலையை அவரும், அவரது அன்னையும் உருவாக்கத்தெரிந்தவர்கள். சந்தோஷ் சொல்லியது போல் சூப்பர் சிங்கர்ஸ் டைட்டில் ஒன்றையே குறியாக வைத்து களத்தில் இறங்கியவர். அரையிறுதியில் உந்துச்சீட்டு என்றெல்லாம் இல்லாமல் முறையாக இப்போட்டி நடத்தப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்?

Anonymous 9/26/2011 02:20:00 PM

சார் சத்திய பிரகாசுக்கு தான் கொடுத்திருக்க வேண்டும் ....அவர் பாடியது சூப்பர் சிங்கர் வரலாறில் பதிவு செய்ய படவேண்டிய ஒன்று ...

பகிர்வுக்கு நன்றி ....

அறிவன்#11802717200764379909 9/26/2011 02:29:00 PM

ஜி ராவின் முதல் கருத்து பெரும்பாலும் சரி.
சாய் சரணின் பல்வகைப் பாடல் திறன் மற்ற எவருக்கும் கிடையாது..சத்யபிரகாஷ் திறமையான பாடகர் என்றாலும் இந்த வெரைட்டி வகையில் அவர் சாய்க்குக் கீழ்தான்.

பூஜா இறுதிக்கு வந்ததே மோசடி என்பது எனது பார்வை..

மற்றபடி சந்தோஷ்க்கு கொடுக்கப்பட்ட இரண்டாம் இடம் சத்யாவுக்குச் சென்றிருக்க வேண்டும் என்பது சரி..

மற்ற வகையில் தீர்வு சரியானதே..

நா.கண்ணன் 9/26/2011 02:46:00 PM

அறிவன் ஐயா! பூஜாவை அவ்வளவு தூரம் குறைவாக எடை போடாதீர்கள். அவருக்கு இருக்கும் குரல், ‘பி.சுசீலா’ வகையைச் சார்ந்தது. சுஜாதா போன்ற அற்புதமான குரல்வளம் உள்ள ஒரு பாடகி இவரின் விசிறி ஆகிறார் என்றால் அது சாதாரண விஷயமில்லை. சுஜாதாவின் பெண்ணின் குரலும் அற்புதமாக உள்ளது. அதைக்கூட ஒப்பு நோக்காமல் அவர் பூஜாவைப் பாராட்டுவது உண்மையான திறமை இருப்பதால்தான். சாய் சரணை யாரும் குறைவாக மதிப்பிடவில்லை. கடந்த ஒருவருடப்பயணத்தின் மொத்த அடிப்படையிலும், அன்றைய நிகழ்விலும் முந்தி நிற்பவர் சத்ய பிரகாஷ்தான். இப்படித்தான் நடுவர் ஸ்ரீநிவாஸ்ஸும் பார்க்கிறார்.

அறிவன்#11802717200764379909 9/27/2011 11:32:00 PM

பூஜா நல்ல பாடகிதான்...

நேரடி இறுதிச் சுற்றுக்குத் தகுதியானவர் அல்ல,அதுவும் முதல் தகுதியாளராக வருவதற்கு..

அதற்கான சமன்பாடு இறுதிப் போட்டியில் நிகழ்ந்தது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்..அவர் இறுதிப் போட்டியில் நன்றாகப் பாடினாலும் கூட..

Let's agree to disagree..

கவிஞர் தியாக.இரமேஷ் 12/24/2011 01:29:00 PM

அண்ணா வணக்கம்!உங்களின் எண்ணம் சிங்கையில் இருக்கும் எங்களுக்கும் எழுந்தது..நாங்கள் எங்களுக்குள்ளே பேசிக்கொண்டதை கருத்தாக்குமாய் பதிவுசெய்தமைக்கு மகிழ்ச்சி..
அன்புடன் தியாக.இரமேஷ்..