கங்குலும் பகலும் கண் துயிலறியாள்! பத்மாவும், மீராவும்

கங்குலும் பகலும் கண்துயி லறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்றுகை கூப்பும்
'தாமரைக் கண்' என்றே தளரும்
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட் டென்னும்
இருநிலம் கைதுழா விருக்கும்
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய்!
இவள்திறத் தென்செய்கின் றாயே?


(திருவாய்மொழி 7.2.1)

கற்றறிந்த பெரியோர் சொல்வர் பக்தி எனும் குழவி தமிழகத்தில் பிறந்து,
கர்நாடகத்தில் தளிர் நடை பயின்று, குஜராத்தில் குமரியாகி, வங்கத்தில்
முதுமை கொள்கிறாள் என்று.

எனவே மீராவின் பா(b)வத்திற்கு முன்னோடி நம்மாழ்வார் என்றாகிறது.

இதோவொரு மிக அற்புதமான நாட்டிய விருந்து. டாக்டர் பத்மா
சுப்ரமணியம் நாட்டிய உலகில் பிரவேசித்த காலங்களின் ஒரு இளம் மானாக,
மயிலாக, அன்னமாக தவழ வந்திருக்கிறார் என்பதை நிரூபிக்கும் ஆவணம்.
அப்போதெல்லாம் கரணங்கள் எவ்வளவு லகுவாகக் கை வந்திருக்கிறது! 


இதோ பத்மா எனும் ஆச்சர்யம்!
0 பின்னூட்டங்கள்: