சூப்பர் சிங்கர் 3 சிந்தனைகள்....

சூப்பர் சிங்கர்ஸ் 3 எனும் தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் இப்போது காலிறுதி போட்டிக்கு வந்திருக்கிறது. ஆயிரக்கணக்கில் போட்டிக்கு வந்த குழந்தைகளிலிருந்து அலசி, அலசித் தேர்ந்தெடுத்த 5 குழந்தைகள் போட்டி போடுகின்றன. அவர்கள் வந்த புதிதில் ஏதோ சினிமாப்பாட்டு பாடத்தெரியும் என்ற அளவில் வந்து இன்று மெல்லிசையின் நுணுக்கங்களை தேர்ந்து கற்று சிறப்பான பாடகர்களாக பலர் மிளிர்வது ப்போட்டியின் வெற்றியைச் சுட்டுகிறது.

பாடும் குழந்தைகள் என்றில்லை கேட்கும் நமக்கும் இசை ஞானம் மெல்ல, மெல்ல வளர்வதைக் காண்கிறோம்.

மெல்லிசை என்பது சாஸ்திரீய சங்கீதத்தின் குறள் வடிவம் என்று சொல்லலாம். அடிப்படையில் தமிழ் மெல்லிசை கர்நாடக இராகங்களை அடிப்படையாகவும், பல்வேறு விகிதங்களில் ஹிந்துஸ்தானி, மேல்நாட்டு இசை, நாட்டுப்பாடல், கானா, குத்துப்பாடல்கள் போன்றவைகளின் கலவையாக மிளிர்கிறது.

உலகம் எவ்வளவு சுருங்கி தமிழ்நாட்டில் உருவான இசை உலகளவில் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது என்பதற்கு, இசையை முறையாகக் கற்காத தனுஷ் என்ற நடிகரும், ஒரு இளைய இசையமைப்பாளரும் உருவாக்கியளித்த, ‘வொய் திஸ் கொலவெறி டீ?’ என்ற பாடலே சாட்சி.

Dhanush - www.sensongs.com - Why This Kolaveri Di


இப்பாடலின் தாக்கம் ஏன் உலகளவில் இருக்கிறது? என்பது பற்றிய ஆய்வெல்லாம் நடக்கும் அளவிற்கு மெல்லிசை இன்று உலக ஸ்தானத்தை எட்டிப் பிடித்துவிட்டது. எனவே சுப்பர் சிங்கர்ஸ் 3 என்பது சும்மா சினிமாப்பாட்டை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது அல்ல.

குரலறிஞர் ஆனந்த் வைத்யநாதன் எப்படி இக்குழந்தைகளை மெருகேற்றுகிறார் என்பதைக் குழந்தைகளும், பெற்றோர்களும் சொல்லும் புகழாரம் சுட்டுவது போல் அவர் தரும் அருமையான விளக்கங்கள் மெல்லிசை என்பது முன்பு மக்கள் நினைத்தது போன்ற சாதாரணச் சரக்கு அல்ல என்பதை விளக்கும்.

இந்த மெல்லிசையை சமகாலத்தில் ஹாலிவுட் அளவிற்கு இட்டுச் சென்றவர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள். அவரது நெறியாள்கையில் பாடிய அனைவரும் சொல்வது, தாங்கள் பாடும் போது அறியாத ஓர் அற்புத இசை இறுதியாக அவரது சேர்க்கையில் உருமாறி வந்துவிடுகிறது என்பதுதான். ஒரு மந்திரவாதி என்றே நித்யஸ்ரீ சொல்கிறார். இந்த இசை வித்தகர் பாடல்களை பழைய மகாதேவன் பாடல்கள் போல் அவ்வளவு எளிதாக மேடைகளில் பாடிவிட முடிவதில்லை. காரணம் அவ்வளவு நுணுக்கங்களை அந்த 3 நிமிடப்பாடலுக்குள் வைக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் சுற்றில் பாடி, சாக்லெட் மழை பெற்றவர் சுகன்யா எனும் 14 வயது சிறுமி. அவரது பாடல் இதோ:Airtel Part 4 von vijayred

இவருக்கு சரியான போட்டியளிப்பர் அமெரிக்காவிலிருந்து வந்து இறங்கியிருக்கும் பிரகதி எனும் பெண். அவளது பாடல் இதோ!


Airtel Part 2 von vijayred

மேலும்..தொடர்ந்து பேசுவோம்....

0 பின்னூட்டங்கள்: