பொதுமகளிர் குறித்த விவேகாநந்தரின் நிலைப்பாடு

உணவு என்பது இந்தியதியத்தத்துவ மரபையும், அதன் சமூகப்படிநிலைகளையும் தீர்மானிக்கிறது. என்று பார்த்தோம்.

பசிக்கு அடுத்தது ‘கிசி’. உடற்பசியைக் ‘கிசி’ என்கிறார், கி.இராஜநாராயணன். உடற்பசி இல்லாத உயிரினமே கிடையாது. அதன் மூலமாக உயிர்கள் தன் இருப்பைத் தக்க வைக்கின்றன. இந்தக் கிசி என்பதைப் பிற உயிர்கள் மிக இயல்பாக எடுத்துக்கொண்ட போது மனிதன் மட்டும் அதையொரு சமூக, அரசியல், ஆன்மீக ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்குகிறான். பெண்களுக்கு இயல்பாக இரண்டு பெரிய வரங்கள் கிடைத்துள்ளன. ஒன்று ‘காமரூபிணி’யாக இருப்பது. அதன் மூலமாக பிள்ளைப்பேற்றைப்பெற்று உயிர்களை வாழவைப்பது. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் இல்லையெனில் இறந்துவிடும். தாய்ப்பாலில் கிருமிகளை எதிர்க்கும் சக்தி உள்ளது. இந்த இரண்டு செயல்களும் ஆண்களுக்குக் கொடுக்கப்படவில்லை. எனவே மனித சமூகத்தில் ஆணாதிக்கம் தலைப்பட்ட போது இந்த இரண்டு வரங்ளையும் சாபமாக்கிவிட்டான் மனிதன். ‘காமம்’ என்பது கீழ்த்தரமானது என்றும். படைக்கும் திறனுள்ள மனைவி கணவனுக்கு அடிமை செய்ய, அவன் இச்சைகளைப் பூர்த்தி செய்யப் பிறந்தவள் என்றும் மாற்றிவிட்டான். இராமகிருஷ்ணப் பரமஹம்சருக்கு ‘கிசி’ தோன்றவில்லையே என்று ஒரு விலை மகளை ஏற்பாடு செய்வதாக இராமகிருஷ்ண வைபவம் சொல்கிறது.

  After the vision, Ramakrishna surrendered himself to Kali. Childlike, he obeyed what he called the will of the Mother Kali in everything, no matter how trivial or philosophical. Although Rani Rasmani and her son-in-law Mathur Babu had faith in Ramakrishna and left him free do whatever he liked, they thought that Ramakrishna was suffering from the effects of unduly prolonged continence. So Mathur arranged for prostitutes to visit Ramakrishna, but their attempts to seduce Ramakrishna only failed. 

விவேகாநந்தரிடம் விலைமகளிரை கோயிலுக்குள் அனுமதிக்கலாமா? என்று கேட்டபோது மிகவும் கொதித்துப்போகிறார்.

  I bequeath to you, young men, this sympathy, this struggle for the poor, the ignorant, the oppressed. Go now this minute to the temple of Parthasarathi, and before Him who was friend of the poor and lowly cowherds of Gokula, who never shrank to embrace the pariah Guhaka, who accepted the invitation of a prostitute in preference to that of the nobles and saver her in His incarnation as Buddha - yea, down on your faces before Him and make a great sacrifice, the sacrifice of a whole life for them, for whom He comes from time to time, whom He loves above all, the poor, the lowly and the oppressed. Thus Spake Vivekananda

 மிக, மிக அழகாக எடுத்துச் சொல்கிறார். நீர்மை என்பதே அவதாரமாகக் கொண்ட கிருஷ்ண, புத்தச் சரிதங்களை மேற்கோள் காட்டுகிறார். மேலும் இது குறித்து விரிவாகவே பேசுகிறார்:

  1. If public women are not allowed to go to such a great place of pilgrimage as Dakshineswar, where else shall they go to? It is for the sinful that the Lord manifests Himself specially, not so much for the virtuous. 
 2. Let distinctions of sex, caste, wealth, learning, and the whole host of them, which are so many gateways to hell, be confined to the world alone. If such distinctions persist in holy places of pilgrimage, where then lies the difference between them and hell itself? 
 3. Ours is a gigantic City of Jagannâtha, where those who have sinned and those who have not, the saintly and the vicious, men and women and children irrespective of age, all have equal right. That for one day at least in the year thousand of men and women get rid of the sense of sin and ideas of distinction and sing and hear the name of the Lord, is in itself a supreme good. 
 4. If even in a place of pilgrimage people's tendency to evil be not curbed for one day, the fault lies with you, not them. Create such a huge tidal wave of spirituality that whatever people come near will be swept away. 
 5. Those who, even in a chapel, would think this is a public woman, that man is of a low caste, a third is poor, and yet another belongs to the masses — the less be the number of such people (that is, whom you call gentlemen) the better. Will they who look to the caste, sex, or profession of Bhaktas appreciate our Lord? I pray to the Lord that hundreds of public women may come and bow their heads at His feet; it does not matter if not one gentleman comes. Come public women, come drunkards, come thieves and all — His Gate is open to all. "It is easier for a camel to pass through the eye of a needle than for a rich man to enter the Kingdom of God." Never let such cruel, demoniacal ideas have a place in your mind.

 //Those who, even in a chapel, would think this is a public woman, that man is of a low caste// எனும் விவேகாநந்தரின் பாவத்தை திருமாலை எனும் பிரபந்தத்தில் விப்ரநாராயணன் என்ற அந்தணரும் சொல்கிறார்.

அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதி 
தமர்களில் தலைவ ராய சாதியந் தணர்க ளேலும் 
நுமர்களைப் பழிப்ப ராகில் நொடிப்பதோ ரளவில்ஆங்கே 
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகரு ளானே.

பொருளுரை:

ருக்கு, யஜூஸ், ஸாமம், அதர்வணம் என்று வேதங்கள் நான்கு; சீக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜியோதிஷம், கல்பம் என்று வேதாங்கங்கள் ஆறு; இவற்றை யெல்லாம் கண்டபாடம் பண்ணி அவற்றின் பொருள்களையும் அறிந்து, அவ்வறிவுக்குப் பலனாக பகவத் கைங்கர்யத்தில் முதன்மையாக ஊன்றியிருக்கும் சிறந்த அந்தணர்களா யிருந்தபோதிலும் அவர்கள், கீழ்க்கூறிய யோக்யதைகளெல்லாமில்லாமல் கேவலம் பகவத்தைங்கர்ய மொன்று மாத்திரமுடைய ஒரு ஸ்ரீவைஷ்ணவரை (அதாவது சண்டாளஜாதியிலே பிறந்தவரை) அந்தப் பிறவியைப் பற்றி இகழ்வாக நினைத்து தூஷிப்பார்களானால் தூஷிக்குமவர்கள் தாங்களே ப்ராஹ்மண்யம் கெட்டுக் கர்மசண்டாளராயப் போவர்கள். இப்படி போவது ஜந்மாந்தரத்திலோ வென்னில்; அன்று தூஷித்த அந்த க்ஷணத்திலேயே சண்டாளராயொழிவர்.

English Translation

 What though they study the six Angas, and the four Vedas, rank ahead of all, and pride themselves in their Andanar lineage, if they but speak ill of your devotees, that very moment, right there, they become worse than the Pulaiyar. O Lord of Arangama-nagar!

 பண்டைய மனோபாவம் இன்னும் முழுமையாய் மாறாத நிலையில் நாம் இன்னும் அரசியல் நடுவுநிலைமையின்றி பெண்களைக் கேவலமாகப்பேசும் ஒரு ஆன்மீக நோக்குடன்தான் செயல்படுகிறோம். மேலை உலகில் ஒருவரின் பால், அவரின் பாலியல் நோக்கு (sexual orientation) இவை தடையாக இருத்தல் கூடாது என்ற பொது நிலைப்பாடு வந்து கொண்டு இருக்கிறது. ஆம்ஸ்டர்டாம் போன்ற பெரு நகரங்களில் விலைமகளிர் மிக ஆரோக்கியமான சூழலில், மருத்துவக் காப்பீட்டு உதவியுடன் செயல்படுகின்றனர் அங்கு கணிகையர் நாகரீகமாக நடத்தப்படுகின்றனர். ஆண்களுக்கு உதவி செய்யும் தொழிலாக அது பார்க்கப்படுகிறது. பாரதி இதைச் சுட்டிப்பேசும் போது ஆண்களுக்கு இச்சை வரவில்லையெனில் பொதுமகளிர் எங்கிருந்து உருவாகுவர் என்று கேட்கிறான்.

 எனவே வேறு எங்கு பாசாங்குத்தனம் அனுமதிக்கப்படுகிறதோ இல்லையோ, ஆன்மீகத்தில் பாசாங்கிற்கு இடமே இல்லை என்று கூறலாம்.

2 பின்னூட்டங்கள்:

Anonymous 9/17/2012 05:17:00 PM

2012/9/16 Mohanarangan V Srirangam

> ஐயா! கண்ணன் அவர்களே! The Gospel of Sri Ramakrishna என்பதில்
> ஸ்ரீராமகிருஷ்ணரின் வாய்மொழியாகவே வரும் பகுதி இது. இதை இங்கு ஒப்பிட்டால்...??
>
> --- >
> The Master was conversing with Mahimacharan. He asked him: "Isn't feeding
> people a kind of service to God? God exists in all beings as fire. To feed
> people is to offer oblations to that Indwelling Spirit. But then one
> shouldn't feed the wicked, I mean people who are entangled in gross
> worldliness or who have committed heinous crimes like adultery. Even the
> ground where such people sit becomes impure to a depth of seven cubits. Once
> Hriday fed a number of people at his native place. A good many of them were
> wicked. I said to Hriday: 'Look here. If you feed such people I shall leave
> your house at once.'
> http://www.ramakrishnavivekananda.info/gospel/volume_1/23_festival_at_surendras.htm
>

நன்றி ஐயா!

இந்த சந்நியாச ஆஸ்ரமம் என்பது எதற்குத் தோன்றியது? என்றொரு கேள்வி அடிக்கடி என் மனதில் வருவதுண்டு. நான் கிரஹஸ்தன், சம்சாரி. பிள்ளை, குட்டி என்று என்னைக் கட்டிப்போட பல விஷயங்கள். ஆனால் சநியாசம் வாங்கிக்கொண்டால் இத்’தளை’களிலிருந்து எனக்கு விடுதலை என்று பொருள். அதாவது சந்நியாசம் ஒருவனுக்கு விடுதலை அளிக்கிறது. ஆனால், இந்த விடுதலையும் பூரண விடுதலை அல்ல. அதுவும் சமூக, கலாச்சார, அரசியல் காரணிகளுக்குக் கட்டுப்பட்டதே! உதாரணமாக இந்தியாவில் ஒரு சாது பாஸ்போர்ட் இல்லாமல் சுற்ற முடியும். ஆனால் இதே சாது அமெரிக்காவில் அப்படிச் சுற்ற முடியாது. பிடித்து ‘உள்ளே’ தூக்கிப்போட்டுவிடுவான். அதாவது ஒரு சாதுவின் சுதந்திரம் இந்தியாவில் ஒரு மாதிரி, அமெரிக்காவில் ஒரு மாதிரி வெளிப்படுகிறது. அவ்வகையில்தான் இராமகிருஷ்ணரின் துறவறமும். அவருக்கு செக்ஸில் ஈடுபாடு இல்லை. ஆச்சர்யமாக சிலருக்கு அப்படி அமைவதுண்டு. சிலர் தூங்குவதே இல்லை என்று படித்திருக்கிறேன். பிறவியிலேயே சாப்பாடு, தண்ணி இல்லாத மனிதர்கள் பற்றி அவ்வப்போது சேதிகள் வருவதுண்டு. இவருக்கு செக்ஸில் ஈடுபாடு இல்லை என்பதால், ‘சாரதாதேவி’யையும் அப்படியே இவர் எடுத்துக்கொண்டது ஒருவகையான வன்முறை என்றே காணவேண்டும். அது இந்தியாவில் மட்டுமே செல்லுபடியாகும். அது நமது அமைப்பு. அந்த அம்மாவும் இவரைப் போலவே காலத்தைக் கழித்துவிட்டுப் போய்விட்டது. இந்த சந்நியாசிகள் பற்றிய ஒரு தெளிவு அந்த அம்மைக்கு இருந்திருப்பது, விவேகாநந்தர் அமெரிக்கா போகும் முன் சாரதாதேவியை வணங்கி ஆசி கேட்கும் போது வெளிப்படுகிறது. இவளும் முற்றும் துறந்த சந்நியாசி போல், ‘போய் வா! மகனே!’ என்று ஆசீர்வதிக்கவில்லை. ‘உங்க அம்மாவைப் பார்த்தாயோ?’ என்று கேட்கிறார். எனவே சந்நியாசம் அது இது என்பதெல்லாம் ஒரு பாவலா! என்று அவருக்குத்தெரிகிறது. ஆயினும் சமூக, கலாச்சார நியதிகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறார்.

எனவே, இராமகிருஷ்ணர் மேலே சொல்லியிருப்பது போல் பகர்ந்தார் என்றால் அவரது சந்நியாசம் ‘கட்டுப்பட்டதே’ என்பது உணர்த்தப்படுகிறது. Unconditional Freedom என்பது பற்றி விரிவாக ஜே.கிருஷ்ணமூர்த்தி பேசுவார். செக்ஸ் ஒருவனை கட்டுப்படுத்தக்கூடாது. ஒருவனது sexual orientation என்பதை ஆன்மீக விழுமியத்தால் கட்டுப்படுத்தக்கூடாது. ஏனெனில் இவரே முழுசுதந்திரம் அடையாத போது இன்னொரு மனிதனின் சுதந்திரத்தைப் பற்றி பிரஸ்தாபிக்க வேண்டிய காரணமென்ன?

விவேகாநந்தர் இவ்விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் புரிதல் உள்ளவர் போல் படுகிறது. இயேசுவிற்கும், மேரிமெக்டலேனுக்கும் உள்ள உறவு பற்றிப்பேசும் போது, இயேசுவால் மட்டுமே அவ்வுறவைப் புரிந்து கொள்ளமுடியும். நமக்கு விமர்சிக்கும் யோக்யதை இல்லை என்கிறார் [ only Jesus could understand Mary Magdalene] இது ஏற்றுக்கொள்ளக்கூடியது.

Nanmaran M 9/06/2016 04:31:00 PM

அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதி
தமர்களில் தலைவ ராய சாதியந் தணர்க ளேலும்
நுமர்களைப் பழிப்ப ராகில் நொடிப்பதோ ரளவில்ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகரு ளானே

இதில் நுமர் என்பது இந்த இடத்தில் ரங்கனுடைய பக்தர்களையே மட்டும் குறிப்பதோடல்லாமல் புலையர்களை குறிக்கவில்லை. ரங்கனுடைய பக்தர்களை பழிப்பவர்களே புலையர் என்றே பாடலின் பொருள் வருகிறது.