சூப்பர் சிங்கர் சிந்தனைகள்

சின்னத்திரையின் நல்ல நிகழ்ச்சிகளிலொன்று சூப்பர் சிங்கர் 3 எனும் தமிழகத்தின் ‘செல்லக்குரலுக்கான தேடல்’ நிகழ்ச்சியாகும்! மெல்லிசை என்பது நீண்ட பரிணாமத்தைத் தமிழ் மண்ணில் கண்டிருக்கிறது! ’கூத்தாடிகள்’ என்று சமூகம் புறக்கணித்த ஒரு துறை மெல்ல, மெல்ல வளர்ந்து சமூக, அரசியல் வளர்ச்சிக்குத் துணை போகும் அளவிற்கு இக்காலக்கட்டத்தில் மாறியிருக்கிறது. தமிழகத்தின் அரசியல் தலையெழுத்தே சினிமாவால் மாறிவிட்டது. எம்.ஜி.ஆருக்குப் பின் தான் ஒரு ரொனால்டு ரீகனும், Arnold Schwarzenegger ம். அடுத்து கர்நாடக மெட்டில் மட்டுமே அமைந்திருந்த சினிமா இசை மெல்ல, மெல்ல பிற இசை பாணிகளையும் தனதாக்கிக் கொண்டு இன்று மெல்லிசையாக மலர்ந்திருக்கிறது. இவ்வளர்ச்சியின் உச்சம்தான் ஏ.ஆர்.ரகுமானின் ஆஸ்கார் பரிசுகள். இது தமிழ்ச் சினிமா இசையின் உலக அங்கீகாரம். எனவே இந்தச் சினிமா இசையை கிளிப்பிள்ளை போல் வந்து ஒப்புவிக்கும் போட்டியல்ல சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சி. மெல்லிசையின் நெளிவு சுளிவுகளை முறையாகப் புரிந்து கொண்டு அதைக் கிரகித்து வளரும் கலைஞர்களின் பரிணாமத்தைக் காட்டும் நிகழ்ச்சியே சூப்பர் சிங்கர் 3. 

எனவே இனிமேலும் தந்த கோபுரத்தில் நின்று கொண்டு இது பற்றிப் பேசுவது இழிவு என்பது போன்ற அறிவுஜீவிதப்பார்வை தவிர்க்கப்பட வேண்டும்.  வெறும் மொட்டுக்களாக இந்நிகழ்ச்சிக்கு வரும் சிறுவர், சிறுமிகள் இன்று உலகம் முழுவதும் மணம் வீசும் மலர்களாக இந்நிகழ்ச்சியால் மலர்ந்துள்ளர். நல்ல உதாரணம், எவ்வித இசைப்பின்னணியும் இல்லாத ஆஜீத் இன்று சூப்பர் சிங்கராக உலா வருவது. வெறும் கனவை மட்டும் கையில் வைத்து மழலை பேசும் சிறுமியாக நுழைந்து இன்று சூப்பர் சிங்கராகியிருக்கும் யாழினி.  பாலக்காட்டு குக்கிராமம் ஒன்றிலிருந்து சின்ன முடிச்சுடன் வரும் சிறுமி போல் உள்ளே நுழைந்து வெற்றியின் உச்சத்தில் இருக்கும் சுகன்யா!

வன அட்டை (wild card) முடிவுகள் வந்துவிட்டன. எதிர்பார்த்தது போலவே ஆஜீத்தும், யாழினும் தேர்வாகியுள்ளனர். அது எப்படி எதிர்பார்த்த படியே முடிவு வருகிறது? ஏதோ சில்மிஷம் இருக்கிறதோ? விஜய் டிவி என்றுமே இந்த விஷயத்தில் ஒளிவு மறைவின்றி நடந்து கொண்டதில்லை. சென்ற பருவத்திலும் சொதப்பியது. மக்கள் ஓட்டு என்று அது சொல்லும் எண்ணிக்கைகளை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். வெளிநாடுகளில் நடக்கும் இத்தகைய நிகழ்வில் ஓட்டு போடப்போட எல்லோருக்கும் தெரியவரும். இதை மறைக்கத்தான் புதிய நடுவர்கள் மதிப்பீடு எனும் கோல்மால். Anyway, both Aajeeth and Yazini deserve this honour! 

இந்த செட்டுப் போடுவது, கேமிரா அமைப்பது இதிலெல்லாம் இன்னும் விஜய் டிவி வளரவேண்டும். மேடை இவ்வளவு இருட்டாக எங்கும் கண்டதில்லை. Pretty gloomy! The zooming by the camera man is  very dizzy!

ஆனாலும் இந்த நிகழ்ச்சியின் இசைத்திறம் அளவிட முடியாத உயர்ந்த இடத்தில் நிற்கிறது. அது தமிழ்நாட்டின் இசைப்பாரம்பரியத்தைச் சுட்டுவதாகத் தோன்றுகிறது! வெளிநாட்டு நிகழ்ச்சிகளோடு ஒப்பு நோக்கும் போது இது எங்கோ உயரத்தில் நிற்கிறது. எத்தனை திறமைகள், என்னென்ன குரல்வளம். தமிழ்நாடே பெருமிதப்படும் அளவிற்கு இருக்கிறது. சங்கம் தொடங்கி இன்றுவரை வந்தாரை வாழவைக்கும் பூமியாக தமிழ்நாடு உயர்ந்தோங்கி நிற்கிறது. இந்நிகழ்ச்சியிலும் கனவுகளோடு ஆந்திரா, கேரளா, இலங்கை (வெளிநாட்டு இலங்கையர்) போன்ற இடங்களிலிருந்து குழந்தைகள் வந்து நல்ல தமிழ் பேசக்கற்றுகொண்டு, தமிழ்ப் பாடல்களை நல்ல உச்சரிப்போடு பாடுவது பெருமைக்குரிய விஷயம். இந்திய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக தமிழகம் திகழ்வது இந்தியத் தேசியத்தின் நல்லூழ்!

இந்நிகழ்ச்சி மிகவும் தோழமையோடு நடைபெறுவது சிறப்பு. போட்டி இருந்தாலும் பொறாமை இல்லாமல் குழந்தைகளும், தாய்மார்களும் நடந்து கொள்வது தமிழகம் எவ்வளவு முன்னேறிவிட்டது என்பதைக் காட்டுகிறது! காதல் திருமணம் என்ற ஒரே காரணத்திற்காக கேரள முஸ்லிம் குடும்பமொன்று தன் பெண்ணை தூர விலக்கிவிடுகிறது. இக்காதலர்களை தமிழகம் வாழ வைத்து, அவர்களது குழந்தையை சூப்பர் சிங்கராக்கி, இன்று இக்குடும்பத்தை இப்பிரபல நிகழ்ச்சியின் மூலம் ஒன்று சேர்த்து வைத்துள்ளது. அந்த வகையில் குடும்பத்தோடு காணத்தக்க ஒரு நிகழ்ச்சி இது!


Airtel Part 4 von khajal

முறையான தேர்வில் பாலக்காட்டு பாட்டுக்குயில் சுகன்யா, அமெரிக்காவின் அபூர்வக்குரல் பிரகதி, தூத்துக்குடியின் இசை முத்து கௌதம் இருக்கின்றனர். இன்று இம்மூவருடன் யாழினி, ஆஜீத் சேர்கின்றனர். நல்ல தேர்வு. போட்டி கடுமையாக இருக்கும். ஆஜீத்தும், யாழினும் crowd pullers. இவர்களோடு தாக்குப்பிடிக்கக்கூடியவர் பிரகதி மட்டும்தான். ஆனால் சில நேரம் அவரை நம்ப முடிவதில்லை. சுகன்யா தத்தித்தத்தி நடந்து ஒரு தேர்ந்த இசைஞராகிவிட்டார். முறையான அளவு கோலில் இவரும், பிரகதியும் தான் சம அளவில் நிற்கின்றனர். பிரகதிக்கு ‘டைட்டில்’ முக்கியமில்லை. அதுவே அவரது ப்ளஸ் பாயிண்ட். சுகன்யா டைட்டிலுக்காக எந்த அளவு கஷ்டத்தையும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்.

கௌதம் இவர்கள் போல் அல்லாமல், இயற்கையான குரல் வளத்தால் முன்னேறி வருபவர். ஆஜீத் ஒரு இசைப்புயல். 4 லட்சத்துச்சொச்சம் ஓட்டு வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். இவரது ஓட்டு மட்டும் சென்ற பருவத்தின் மொத்த ஓட்டு எண்ணிக்கைக்கு அதிகமாம். எனவே இது கௌதம் அவர்களுக்கு பெரிய (புதிய) சிக்கலை உருவாகியுள்ளது.. அவர் நிலைப்பாடு ஆட்டம் கண்டுள்ளது. யாழினி ‘டைட்டிலை’ வெற்றி கொள்ளும் குழந்தை என்று சொல்ல முடியாது. அவள் இன்னும் வளர வேண்டும். 60 லட்சம் வீடு யாருக்கு சரியாகப் பொருந்தும்? என் மதிப்பீட்டில், சுகன்யா, கௌதம், யாழினி இவர்களுக்கு. பொறுத்திருந்து பார்ப்போம். நிறைய சொதப்பல்களை இன்னும் காண வேண்டி வரலாம் :-)


0 பின்னூட்டங்கள்: