எனது முதல் தமிழ் மேடைப் பேச்சு

மிக நீண்ட நாட்களுக்குப் பின் முகநூல் வழியாக நண்பர் ஸ்ரீபதி சிவனடியான் தொடர்பில் வந்தார். வந்தவுடன் 1994ம் ஆண்டு அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு பெரும் நிகழ்வில் என்னைப் பேச வைத்து பதிவு செய்த விழியத்தை எனக்களித்தார். நானொரு இலக்கியவாதியாக ஜெர்மனியில் அறிமுகமாகியிருந்தேன். பெரும்பாலும் வீட்டின் சொகுசு அறையில் அமர்ந்து இலக்கியம் படைப்பவன். என் பேச்சு என்பது என் எழுத்தாக இருந்த காலம். எப்படியோ என்னைக் கண்டுபிடித்து ஸ்ரீபதி அவர்கள் பேச அழைத்துவிட்டார். பல அறிவியல் மன்றங்களில் நான் பேசியிருந்தாலும், தமிழ் மேடைகளில் பேசியதில்லை. பிராங்க்பெர்ட்டில் வாழும் ஈழத்தமிழர்களின் நிகழ்ச்சியொன்றில் பேச முறபட்டது அதுவே முதல்முறை. ஜெர்மனியின் ஈழச் சமூகம் என்னை ஸ்வகரித்துக் கொண்டதற்கான முதல் அடையாளமிது. தமிழ் அடையாளமற்று இருந்த ஜெர்மன் சூழலில் என் தமிழ் அடையாளத்தை தக்க வைக்க உதவியது ஈழத்தமிழ்க் குமுகாயம். அவர்களுக்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். ஸ்ரீபதியையும் சேர்த்து எத்தனையோ நல்லுள்ளங்களை அங்கு நான் அறிந்து கொண்டேன்.

0 பின்னூட்டங்கள்: